இப்பவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கு புக்கிங் 4 ஆயிரத்த தாண்டிருச்சு... எந்த வேரியண்டிற்கு டிமாண்ட் அதிகம்?

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) காருக்கு இப்பவே புக்கிங் 4 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று (ஜூன் 9) காரை விற்பனைக்கு கொண்டு வந்தநிலையில் காருக்கு கிடைத்த ப்ரீ-புக்கிங் பற்றிய முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இப்பவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கு புக்கிங் 4 ஆயிரத்த தாண்டிருச்சு... எந்த வேரியண்டிற்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதன் விர்டுஸ் காம்பேக்ட் செடான் ரக காரை இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு பாரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதைத் தொடர்ந்து காரின் விலை மற்றும் வேரியண்டுகள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை அது வெளியிட்டது.

இப்பவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கு புக்கிங் 4 ஆயிரத்த தாண்டிருச்சு... எந்த வேரியண்டிற்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா?

இதுமட்டுமின்றி தற்போது வரை காருக்கு எவ்வளவு புக்கிங்குகள் கிடைத்துள்ளன என்பது பற்றிய விபரத்தையும் ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி, காம்பேக்ட் செடான் 4 ஆயிரம் யூனிட்டுகளுக்கான புக்கிங்குகளைப் பெற்றிருக்கின்றது. இதில், பெரும்பாலும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ ஜிடி பெர்ஃபார்மன்ஸ் லைன் ட்ரிம்மிற்கே அதிகளவில் புக்கிங்குகள் கிடைத்துள்ளன.

இப்பவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கு புக்கிங் 4 ஆயிரத்த தாண்டிருச்சு... எந்த வேரியண்டிற்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா?

ஆகையால், இந்த வேரியண்டிற்கு இந்தியர்கள் மத்தியில் அதிக டிமாண்ட் கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது. விற்பனைக்கான அறிமுகத்தைப் பெறுவதற்கு முன்னரே கிடைக்கப் பெற்ற புக்கிங் நிலவரம் இதுவாகும். புதிய விர்டுஸ் காருக்கு அறிமுக விலையாக அதன் ஆரம்ப நிலை தேர்விற்கு ரூ. 11.22 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேலையில், விர்டுஸின் உயர்நிலை தேர்வு ரூ. 17.92 லட்சம் வரையில் விற்பனைக்குக் கிடைக்கும். இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

இப்பவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கு புக்கிங் 4 ஆயிரத்த தாண்டிருச்சு... எந்த வேரியண்டிற்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா?

விலை பற்றிய முழு விபரத்தை பட்டிலாகக் கீழே பார்க்கலாம்.

Virtus Dynamic Line 1.0 L TSI
Variant Price
Comfortline MT ₹11,21,900
Highline MT ₹12,97,900
Topline MT ₹14,41,900
Highline AT ₹14,27,900
Topline AT ₹15,71,900
Virtus Performance Line 1.5 L TSI Evo
Variant Price
GT Plus DSG ₹17,91,900
இப்பவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கு புக்கிங் 4 ஆயிரத்த தாண்டிருச்சு... எந்த வேரியண்டிற்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் இரண்டு விதமான ட்ரிம்கள் மற்றும் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். கம்ஃபோர்ட்லைன், ஹைலைன் மற்றும் டாப்லைன் ஆகியவை விர்டுஸின் டைனமிக் லைன் எனும் ட்ரிம்மிலும், ஜிடி பிளஸ் டிஎஸ்ஜி பெர்ஃபார்மன்ஸ் லைன் எனும் ட்ரிம்மிலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், முதல் வேரியண்டுகள் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்ஜின் உடனே விற்பனைக்குக் கிடைக்கும்.

இப்பவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கு புக்கிங் 4 ஆயிரத்த தாண்டிருச்சு... எந்த வேரியண்டிற்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா?

அதேவேலையில், ஜிடி பிளஸ் டிஎஸ்ஜி ஆனது 1.5 லிட்டர் டிஎஸ்ஐ மோட்டாருடன் விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோல், இக்காருக்குள்ளும் எண்ணற்ற சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானதாக 10.1 அங்குலத்தில் வழங்கப்பட்டிருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்கின்றது. இந்த அம்சம் ஒயர்லெஸ் ஆப்பில் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்களைக் கொண்டதாகும்.

இப்பவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கு புக்கிங் 4 ஆயிரத்த தாண்டிருச்சு... எந்த வேரியண்டிற்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா?

இத்துடன், முழு டிஜிட்டல் விர்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஃபிளாட் பாட்டம் ஸ்டியரிங் வீல், ஒயர்லெஸ் ஃபோன் சார்ஜர், வென்டிலேட்டட் இருக்கைகள், தானியங்கி க்ளைமேட் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் ஆகிய அம்சங்களும் விர்டுஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. இக்காரின் பூட் ஸ்பேஸ் 521 லிட்டர் ஆகும். அதிக பொருட்களை ஏற்றி செல்ல இது உதவியாக இருக்கும்.

இப்பவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கு புக்கிங் 4 ஆயிரத்த தாண்டிருச்சு... எந்த வேரியண்டிற்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா?

ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் 18.12 கிமீ தொடங்கி 19.40 கிமீ வரையில் மைலேஜ் தரும். எஞ்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் வேரியண்டுகளைப் பொருத்து இந்த மைலேஜ் திறன் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. இந்த மைலேஜ் விபரம் அராய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். இதன்படி பார்த்தால் ஒரு கிலோமீட்டருக்கு இக்காருக்கு உண்டாகும் பராமரிப்பு செலவு ரூ. 0.40 பைசா ஆகும்.

இப்பவே ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காருக்கு புக்கிங் 4 ஆயிரத்த தாண்டிருச்சு... எந்த வேரியண்டிற்கு டிமாண்ட் அதிகம் தெரியுமா?

இந்த வாகனத்திற்கு 4 ஆண்டுகள் / 1 லட்சம் கிமீ வாரண்டியை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன் நான்கு ஆண்டுகளுக்கு ரோட் சைடு அசிஸ்டன்ஸும் வழங்கப்பட்டுள்ளது. இதனை நம்மால் கூடுதலாக்கிக் கொள்ளவும் முடியும். அதாவது, 7 ஆண்டுகள் அல்லது 1.25 லட்சம் கிமீ வாரண்டியை கூடுதல் தேர்வாக ஃபோக்ஸ்வேகன் வழங்குகின்றது.

Most Read Articles

English summary
Volkswagen virtus recieves over 4000 pre bookings
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X