போச்சு... இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தியது வால்வோ!! சுமார் ரூ.3 லட்சம் வரையில்

இந்தியாவில் வால்வோ கார்களின் விலைகள் ரூ.3 லட்சம் வரையில் மாடல்களை பொறுத்து அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த முழுமையான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

போச்சு... இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தியது வால்வோ!! சுமார் ரூ.3 லட்சம் வரையில்

உலகளவில் பிரபலமான வால்வோ பிராண்டில் இருந்து இந்திய சந்தையில் எஸ்யூவி மற்றும் செடான் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றின் விலைகள் அனைத்தும் சராசரியாக 4% வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு வழக்கம்போல் தொடர்ந்து அதிகரித்துவரும் வாகன பாகங்களின் விலைகளும், உற்பத்தி செலவும் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போச்சு... இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தியது வால்வோ!! சுமார் ரூ.3 லட்சம் வரையில்

இந்திய சந்தையில் எக்ஸ்சி40, எக்ஸ்சி60 மற்றும் எக்ஸ்சி90 என்ற 3 எஸ்யூவி மாடல்களையும், எஸ்90 என்ற ஒரு செடான் காரையும் வால்வோ நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. இவற்றின் விலைகள் புதிய 2022-23 நிதியாண்டை முன்னிட்டு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சம் வரையில் அதிகரிப்பட்டுள்ளன.

போச்சு... இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தியது வால்வோ!! சுமார் ரூ.3 லட்சம் வரையில்

இந்தியாவில் மலிவான வால்வோ காராக சந்தைப்படுத்தப்பட்டு வரும் எக்ஸ்சி40-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.25 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முன்பு ரூ.43.25 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்பட்டுவந்த இந்த காரின் விலை தற்போது ரூ.44.50 லட்சமாக அதிகரித்துள்ளது. டி4 ஆர்-டிசைன் என்ற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும் எக்ஸ்சி40 காரை மொத்தம் 5 விதமான நிறத்தேர்வுகளில் பெறலாம்.

போச்சு... இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தியது வால்வோ!! சுமார் ரூ.3 லட்சம் வரையில்

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த ஆரம்ப-நிலை வால்வோ எஸ்யூவி காரில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இது இயக்க ஆற்றலை காரின் நான்கு சக்கரங்களுக்கும் வழங்குகிறது.

போச்சு... இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தியது வால்வோ!! சுமார் ரூ.3 லட்சம் வரையில்

எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்கிற பெயரில் விரைவில் எலக்ட்ரிக் வெர்சனில் அறிமுகமாகவுள்ளது.

Model Variant Type New Price Change
XC40 T4 R Design Petrol 44,50,000 3%
XC60 B5 Inscription Petrol Mild-Hybrid 65,90,000 4%
S90 B5 Inscription Petrol Mild-Hybrid 65,90,000 2%
XC90 B6 Inscription Petrol Mild-Hybrid 93,90,000 3%

இதற்கடுத்து, எக்ஸ்சி60 மாடலின் விலை ரூ.2.4 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.63.50 லட்சமாக இருந்த எக்ஸ்சி60 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.65.90 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவும் பி5 இன்ஸ்க்ரிப்ஷன் என்ற ஒற்றை வேரியண்ட்டில் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

போச்சு... இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தியது வால்வோ!! சுமார் ரூ.3 லட்சம் வரையில்

அதேபோல் இந்த வால்வோ எஸ்யூவி காருக்கும் நிறத்தேர்வுகள் 5 ஆகும். இந்த காரில் வழங்கப்படுகின்ற 2.0 லிட்டர், 4-சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 250 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறன் வரையில் காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இதன் பெட்ரோல் என்ஜின் ஆனது 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் அமைப்புடன் இணைக்கப்படுகிறது.

போச்சு... இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தியது வால்வோ!! சுமார் ரூ.3 லட்சம் வரையில்

வால்வோவின் லக்சரி செடான் மாடலான எஸ்90 ரூ.1 லட்சம் வரையில் விலை அதிகரிப்பை பெற்றுள்ளது. இந்த வால்வோ செடான் காரின் முந்தைய விலை ரூ.64.90 லட்சம். தற்போது எக்ஸ்சி60-க்கு இணையாக ரூ.65.90 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 2021இல் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற்ற இந்த வால்வோ செடான் காரில் பொருத்தப்படும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 250 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறன் வரையில் வழங்கக்கூடியது.

போச்சு... இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தியது வால்வோ!! சுமார் ரூ.3 லட்சம் வரையில்

இதனுடனும் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் அமைப்பு இணைக்கப்படுகிறது. தற்சமயம் இந்திய சந்தையில் வால்வோவின் பிரதான, விலைமிக்க காராக விளங்கும் எக்ஸ்சி90 அதிகப்பட்சமாக ரூ.3 லட்சம் என்கிற இமாலய விலை உயர்வை ஏற்றுள்ளது. வால்வோ எக்ஸ்சி90 காரின் விலை முன்பு ரூ.90.90 லட்சமாக இருந்த நிலையில், அது தற்போது ரூ.93.90 லட்சமாக உயர்ந்துள்ளது.

போச்சு... இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தியது வால்வோ!! சுமார் ரூ.3 லட்சம் வரையில்

கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை ஏற்றிருந்த எக்ஸ்சி90-இல் 48 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் உடன் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 296 பிஎச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறனை வழங்கக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

போச்சு... இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தியது வால்வோ!! சுமார் ரூ.3 லட்சம் வரையில்

இவ்வாறான விலை உயர்வுகளுக்கு மத்தியில் இந்திய சந்தைக்கான வேறு சில திட்டங்களையும் வால்வோ கொண்டுள்ளது. இந்த வகையில் விரைவில் வால்வோ நிறுவனம் அதன் எக்ஸ்சி60, எஸ்90 மற்றும் எக்ஸ்சி90 மாடல்களை பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரீட் ஆற்றல்-வழங்கிகளுடன் அப்டேட் செய்ய தயாராகி வருகிறது.

Most Read Articles
மேலும்... #வால்வோ #volvo
English summary
Volvo cars india hike price for cars up to rs 3 lakhs details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X