வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு மின்சார கார்!

வால்வோ எக்ஸ்சி 40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge ) சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்!

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான வால்வோ (Volvo) இந்திய சந்தையில் அதன் முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. எக்ஸ்சி 40 ரீசார்ஜ் (XC40 Recharge) எனும் பெயர் கொண்ட காரையே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 55.90 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்!

வால்வோ நிறுவனம் எக்ஸ்சி40 (Volvo XC40) காரை பெட்ரோலில் இயங்கும் வெர்ஷனிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த வெர்ஷனைத் தழுவியே தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும், சில சிறப்பு விஷயங்களால் இக்கார் லேசான மாற்றங்களைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்!

குறிப்பாக விலையில் பல மடங்கு வித்தியாசத்தைக் கொண்டதாக எக்ஸ்சி 40 ரீசார்ஜ் இருக்கின்றது. ஆமாங்க, பெட்ரோல் வெர்ஷன் எக்ஸ்சி40 காரைக் காட்டிலும் இதன் விலை ரூ. 11.40 லட்சம் அதிகமானதாக இருக்கின்றது. வால்வோ நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை பெங்களூருவில் உள்ள ஹோஸ்கோடே உற்பத்தி ஆலையில் வைத்தே அசெம்பிள் செய்திருக்கின்றது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்!

இதன் வாயிலாக, இந்தியாவிலேயே வைத்து லோகலாக அசெம்பிள் செய்யப்படும் முதல் சொகுசு எலெக்ட்ரிக் காராக எக்ஸ்சி40 மாறியிருக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற லக்சூரி எலெக்ட்ரிக் கார்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டே விற்பனைக்கு வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்!

நாளை (ஜூலை 27) முதல் தனது புதிய மின்சார காருக்கான புக்கிங் பணிகளை ஏற்க இருப்பதாக வால்வோ நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்திலேயே இக்காருக்கான புக்கிங் பணிகள் பிரத்யேகமாக தொடங்கப்பட இருக்கின்றது. இதற்கு அட்வான்ஸ் தொகையாக ரூ. 50 ஆயிரம் வசூலிக்கப்படும்.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்!

வால்வோ நிறுவனம் இந்த மின்சார வெர்ஷனை பெட்ரோல் வெர்ஷன் எக்ஸ்சி40-யில் இருந்து மாறுபட்டு தென்பட வேண்டும் என்பதற்காக கணிசமான காஸ்மெட்டிக் மாற்றங்களைச் செய்திருக்கின்றது. அந்தவகையில், காரின் முகப்பகுதியில் 'தாரின் சுத்தியல்' அமைப்பிலான டிஆர்எல்-ஐ வழங்கியிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, பம்பரும் மறு வடிவமைப்பு செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருக்கின்றது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்!

இதுமட்டுமில்லைங்க, பெட்ரோல் வெர்ஷன் எக்ஸ்சி40-யைக் காட்டிலும் 15 மிமீ அதிக நீளம் கொண்டதாகவும், சற்று லோவான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும் எலெக்ட்ரிக் வெர்ஷன் எக்ஸ்சி40 காட்சியளிக்கின்றது. பேட்டரி பேக் காரின் அடிப்பகுதியில் பயன்படுத்தப்பட்டிருப்பதனாலேயே இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் சற்று தாழ்வாக இருக்கின்றது. இக்காரின் கவர்ச்சியான தோற்றத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் 19 அங்குல அலாய் வீல்கள், உடல் நிறத்திலான க்ரில் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்!

தொழில்நுட்ப வசதிகளிலும் இக்கார் வெற லெவல் தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. எக்ஸ்சி60 காரில் பயன்படுத்தப்ப்டடிருக்கக் கூடிய மிக சிறப்பான வசதிகள் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமே புதிய எக்ஸ்சி 40 ரீசார்ஜ் காரில் வால்வோ வழங்கியிருக்கின்றது. இது ஆன்ட்ராய்டு வசதிக் கொண்ட டிஜிட்டல் கருவியாகும்.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்!

கூகுள் மேப் மற்றும் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பன்முக நவீன வசதிகளக்க கொண்டதாகவும் அந்த திரை இருக்கின்றது. இத்துடன், இ-சிம் கார்டு வசதியும் அதில் வழங்கப்பட்டிருக்கும். இதுதவிர, ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர், சென்சார்கள் அடிப்படையிலான அடாஸ் தொழில்நுட்பம், லெவல் 2 அட்டானமஸ் டிரைவிங் வசதி, கார் இணைப்பு தொழில்நுட்பம், பவர்டு முன் பக்க இருக்கைகள், பிரீமியம் ஹர்மேன் கர்டோன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்!

இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகள் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இக்காரில், 78kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 418 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்களே போதுமானது. 50kW ஃபாஸ்ட் சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யும் போது இதுபோன்று அதிக வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்!

இத்துடன், இக்காரில் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும் விதமாக 408 எச்பி மற்றும் 660 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் 4.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இந்த எலெக்ட்ரிக் கார் தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல் எக்ஸ்சி40-யைக் காட்டிலும் 400 கிலோ அதிக எடைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் விற்பனைக்கு அறிமுகம்... உள்நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்ட முதல் சொகுசு எலெக்ட்ரிக் கார்!

இந்த அதிக எடைக்கு காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரிய பேட்டரி பேக்கே காரணம். இந்த மின்சார கார் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சொகுசு எலெக்ட்ரிக் கார்களான பிஎம்டபிள்யூ ஐ4, சமீபத்தில் புக்கிங் தொடங்கப்பட்ட கியா இவி6 உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக வருகை தந்திருக்கின்றதது.

Most Read Articles
English summary
Volvo launched xc40 recharge ev in india at inr 55 90 lakh
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X