ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார்பிளே, காரில் பயணிக்கும் போது பயன்படுத்த எது பெஸ்ட்?

கார்களில் பயன்படுத்தப்படும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இதில் எது சிறந்தது என விளக்கும் வகையிலான விளக்கத்தை இதோ உங்களுக்காக இங்கே வழங்கியுள்ளோம். இந்த தகவல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார்பிளே, காரில் பயணிக்கும் போது பயன்படுத்த எது பெஸ்ட் ?

நாம் சிறு வயதில் காரில் செல்லும் போது பாட்டுக்கேட்டுக்கொண்டே காரில் பயணிக்க வேண்டும் என விரும்புவோம். ஆனால் சமீபத்தில் வெளியாகும் கார்களில் எல்லாம் கனெக்டெட் தொழிற்நுட்பம் வந்துவிட்டது. காரில் இன்ஃபோடெயின்மெண்ட் என்ற சாதனம் பொருத்தப்படுகிறது. இது காரில் பாட்டு கேட்டுப்பது போன்ற பொழுது போக்கு அம்சங்களை மட்டும் வழங்காமல் காரில் பயணிக்கும் போது தேவையான பல தகவல்களை வழங்கும் கருவியாக உருவாகியுள்ளது.

ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார்பிளே, காரில் பயணிக்கும் போது பயன்படுத்த எது பெஸ்ட் ?

இந்த கனெக்டெட் தொழிற்நுட்பத்திற்கு உதவும் முக்கியமான விஷயம் தான் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே என்ற தொழிற்நுட்பம். இந்த தொழிற்நுட்பம் நாம் காரில் ஏறியதும் நமது செல்போன் அதனுடன் கனெக்ட் ஆகி நமக்கான தேவைகள் எல்லாம் கார் ஸ்கிரீனிலேயே வரும். இப்படியாக தொழிற்நுட்பத்திற்கு பயன்படும் இந்த ஆண்டராய்டு ஆட்டோ தளத்தைக் கூகுள் நிறுவனமும், ஆப்பிள் கார்பிளே தளத்தை ஆப்பிள் நிறுவனமும் உருவாக்கியுள்ளது. இந்த செய்தியில் இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன எது சிறந்தது எனப் பார்க்கப்போகிறோம்.

ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார்பிளே, காரில் பயணிக்கும் போது பயன்படுத்த எது பெஸ்ட் ?

இன்டர்பேஸ்

நாம் இந்த தொழிற்நுட்பத்தை இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் தான் பயன்படுத்துவோம். அதனால் அந்த திரையில் உள்ள இன்டர்பேஸ் மிகவும் முக்கியம். இதைப் பொருத்தவரை ஆப்பிள் கார் பிளே ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேடில் உள்ளவாறே டிஸ்பிளேவை வைத்துள்ளது. மேலும் இதன் ஐகான்கள் பெரியதாகவும், எளிதாகப் பயன்படுத்தும் படியும் மெனுக்கள் அகலவாக்கிலும் அடுக்கப்படுகிறது. இதனால் இதைப்பயன்படுத்துவது எளிதாக இருக்கிறது. இதன் டிசைன் மற்றும் அனிமேஷன் பிரிமியம் ஃபீலை தருகிறது.

ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார்பிளே, காரில் பயணிக்கும் போது பயன்படுத்த எது பெஸ்ட் ?

அண்ட்ராய்டு ஆட்டோவில் இன்டர்பேஸ் சற்று சிரமமாக உள்ளது. இதில் மெனுக்கள் நீள வாக்கில் அடுக்கப்படுகின்றன. அதிகம் பயன்படுத்தும் ஆப்கள் மேலேயே வந்தாலும் இது சற்று அசெளகரித்தை தருகிறது. மேலும் பல பயனாளர்கள் அதிக நேரம் பயன்படுத்தும் போது பல சிக்கல்கள் வருவதாகவும் புகார் அளித்து வருகின்றனர். இன்டர்பேஸ் விஷயத்தை ஆப்பிள் நிறுவனமே சிறப்பாக டிசைன் செய்துள்ளது.

ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார்பிளே, காரில் பயணிக்கும் போது பயன்படுத்த எது பெஸ்ட் ?

நேவிகேஷன்

இந்த இன்ஃபோடெயிண்மென்ட் கருவியை பெரும்பாலான மக்கள் நேவிகேஷன் செய்யப் பயன்படுத்துவார்கள். அதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ இதற்காக நேரடியாகக் கூகுள் மோப்பைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் ஆப்பிள் மேப் அதிலேயே உள்ள மேப்பை பயன்படுத்துகிறது. ஆப்பிள் மேப் முழு ஸ்கிரினில் தெரிந்தாலும் போதுமான அளவு தகவல்களைக் கொண்டதாக இல்லை. அதே நேரம் மேப்பை விரல் வைத்து நகட்டிப் பார்க்கும் வசதியும் இல்லை. ஆனால் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் இந்த வசதி சிறப்பாக இருக்கிறது. இந்த விஷயத்தில் ஆண்ட்ராய்டுதான் சிறப்பாக செயல்படுகிறது.

ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார்பிளே, காரில் பயணிக்கும் போது பயன்படுத்த எது பெஸ்ட் ?

காலிங்

காரில் செல்லும் போது நாம் செல்போனிற்கு போன் வந்தால் இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மூலமாகவே போன் பேச முடியும். இது இரண்டிலும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் நாம் மேப் பயன்படுத்தும்போது போன் வந்தால் ஒரே நேரத்தில் இரண்டையும் பயன்படுத்த முடியும். ஆனால் ஆப்பிள் கார் பிளேவில் அப்படி அல்லது. காலுக்கான இன்டர்பேஸ் முழு மேப்பையும் மூடுகிறது. இதை நாம் மனிமைஸ் செய்துவிட்டு மீண்டும் மேப்பை திறக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆப்பிள் செல்போனிலும் இந்த பிரச்சனை உள்ளது. இந்த விஷயத்திலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ தான் கிரேட்

ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார்பிளே, காரில் பயணிக்கும் போது பயன்படுத்த எது பெஸ்ட் ?

நோட்டிஃபிகேஷன்

கார் காரில் பயணிக்கும் போது நம் செல்போனிற்கு ஏதாவது நோட்டிபிகேஷன் வந்தால் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இரண்டு தளமும் அதை வேறு வேறு விதமாக கையாள்கிறது. ஆப்பிள் கார்பிளேவில் நோட்டிஃபிகேஷன் திரையின் கீழே வரும். அதை டேப் செய்தால் சிரி அந்த நோட்டிபிகேஷனை வாசிக்கும் அவ்வளவு தான். ஆனால் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் நோட்டிஃபிகேஷன் மேலே வரும் அதோடு அதை டேப் செய்து படிக்கலாம் அந்த நோட்டிபிகேஷனிற்கு ரிப்ளே செய்யும் வசதியும் ஆண்ட்ராய்டு ஆட்டோவில் உள்ளது. இதிலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ தான் சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு ஆட்டோ vs ஆப்பிள் கார்பிளே, காரில் பயணிக்கும் போது பயன்படுத்த எது பெஸ்ட் ?

வாய்ஸ் அசிஸ்டண்ட்

இன்று மக்கள் மத்தியில் வாய்ஸ் அசிஸ்டெண்ட் பயன்பாடு அதிகமாகிவிட்டது. உதாரணமாக ஆப்பிள் பயன்பாட்டாளர்கள் சிரியையும் கூகுள் பயன்பாட்டாளர்கள் கூகுளையும், அமேசான் பயன்பாட்டாளர்கள் அலெக்ஸா வையும் பயன்படுத்துகின்றனர். இந்த வாய்ஸ் அசிஸ்டெண்ட் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளேவில் உள்ளது. இதில் வித்தியாசம் என்னவென்றால் ஆண்ட்ராய்டு ஆட்டேவில் இதற்கான பிரத்தியேக பட்டன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் கார் பிளேவில் அப்படியான வசதியில்லை.

Most Read Articles
English summary
What is the difference between android auto and apple car play
Story first published: Tuesday, May 10, 2022, 19:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X