இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்டை 'உலக மோட்டார்சைக்கிள் தின' ஸ்பெஷல் பதிவாக இங்கு தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இதுகுறித்த தகவலைப் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

காதலர்கள் தினம் கொண்டாடுவதைபோல் நேற்றைய நாளில் மோட்டார்சைக்கிள்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது. நம்ம ஊருல ஓர் பெண்ணை காதலிக்காத இளைஞரைக்கூட நம்மால் பார்த்துவிட முடியும். ஆனால், மோட்டார்சைக்கிள் மீது காதல்கொள்ளாதவர்களை பார்ப்பது இயலாத ஒன்று. அந்தளவிற்கு இருசக்கர வாகனங்கள் மீது அளவுகடந்த பிரியம் கொண்டவர்களாக நம்ம ஊரு பசங்க இருக்காங்க.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

இத்தகையோர் கொண்டாடும் விதமாகவே மோட்டார்சைக்கிள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ல் அனுசரிக்கப்படுகின்றது. இந்த தினத்தை சிறப்பிக்கும் விதமாக இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை டூ-வீலர்கள் சிலவற்றை பற்றிய தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள், விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் (Hero Splendor+)

குறைவான விலை, மிக குறைவான பராமரிப்பு செலவு, சூப்பரான மைலேஜ் திறன் ஆகியவற்றிற்கு அறியப்படும் மோட்டார்சைக்கிளாக ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் இருக்கின்றது. எனவேதான் இந்திய சாலைகளில் மிக அதிகளவில் இந்த இருசக்கர வாகனத்தை நம்மால் பார்க்க முடிகின்றது.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

இதன் நீடித்து உழைக்கும் தன்மையும் மக்கள் மத்தியில் இப்பைக்கிற்கு அமோக வரவேற்பு கிடைக்கக் காரணமாக இருக்கின்றது. இந்த இருசக்கர வாகனம் பல தசாப்தங்களைக் கடந்து, தற்போதும் விற்பனையில் மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியையே நாட்டில் பெற்று வருகின்றது.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் விற்பனைக்குக் கிடைக்கின்றது. டிரம் செல்ஃப் (Drum Self), ஐ3எஸ் டிரம் செல்ப் (i3s Drum Self) மற்றும் ஐ3எஸ் செல்ஃப் மேட் ஷீல்டு கோல்டு (i3s Drum Self Matt Shield Gold) ஆகிய தேர்வுகளிலேயே ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் ஆரம்ப நிலை ரூ. 69,380 ஆகும். உச்ச நிலை வேரியண்ட் ரூ. 71,700 வரையில் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

இந்த பைக்கில் 97.2 சிசி எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.91 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க்கையும் வெளியற்றும் திறன் கொண்டது. லிட்டர் ஒன்றிற்கு 70 கிமீ வரை மைலேஜ் தரும். பைக்கின் பெட்ரோல் டேங்க் 11 லிட்டர் கெபாசிட்டிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

பஜாஜ் சிடி 110எக்ஸ் (Bajaj CT 110X)

இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் பைக்காக பஜாஜ் சிடி 110எக்ஸ் உள்ளது. சென்னையில் இந்த இருசக்கர வாகனம் ரூ. 65,376 என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட குறைந்த விலை இருசக்கர வாகனமாகவும் இது இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. அடர்த்தியான கிராஷ் குவார்ட், மோல்ட் செய்யப்பட்ட கால் வைக்கும் இடம், பின் பக்கத்தில் கேரியர் என பல்வேறு சிறப்பு வசதிகள் இப்பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கேரியரில் சுமார் 7 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முடியும்.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

பஜாஜ் நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிளில் 115 சிசி டிடிஎஸ்-ஐ எஞ்ஜினையே பயன்படுத்துகின்றது. இந்த மோட்டார் 8.48 பிஎச்பி பவரையும், 9.81 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜின் 4 ஸ்பீடு கியர்பாக்ஸில் இயங்கும். ஆஃப் ரோடு பயணத்தை மேற்கொள்ள ஏதுவாக இப்பைக்கிற்கு 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், இதன் வீல் பேஸ் 1,285 மிமீ ஆகும். இவற்றைவிட பைக்கின் மைலேஜ் திறன் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் உள்ளது. இது லிட்டர் ஒன்றிற்கு 70 கிமீ வரை மைலேஜ் தரும்.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

ஹீரோ கிளாமர் 125 (Hero Glamour 125)

ஹீரோ நிறுவனத்தின் மற்றுமொரு விலை குறைவான தயாரிப்பாக கிளாமர் 125 இருக்கின்றது. இது ஓர் 125 சிசி திறன் கொண்ட பைக்காகும். இந்த பைக் இந்தியாவில் ரூ. 76,500 தொடங்கி ரூ. 82,300 வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து, இந்த இருசக்கர வாகனத்தையும் பன்முக தேர்வில் ஹீரோ விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

ஹீரோ கிளாமர் பிளேஸ் 125, ஹீரோ கிளாமர் 100 மில்லியன் எடிசன், ஹீரோ கிளாமர் டிஸ்க் பிரேக், ஹீரோ கிளாமர் பிளேஸ் டிஸ்க் பிரேக் மற்றும் ஹீரோ கிளாமர் 100 மில்லியன் எடிசன் டிஸ்க் ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதேபோல் வண்ணங்களிலும் பன்முக தேர்வுகளில் இப்பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

ஸ்போர்ட்ஸ் ரெட், டெக்னோ ப்ளூ, ரேடியன்ட் ரெட், மேட் வெர்னியர் கிரே, மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிற தேர்வுகள் இப்பைக்கில் வழங்கப்படுகின்றன. இந்த பைக்கில் 124.7 சிசி திறன் கொண்ட பிஎஸ்6 மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 10.72 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது ஒரு லிட்டருக்கு 60 கிமீ வரை மைலேஜ் தரும் என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும்.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

ஹோண்டா ஷைன் (Honda Shine)

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பெஸ்ட் கம்யூட்டர் (தினசரி பயன்பாட்டு வசதிக் கொண்ட) பைக்குகளில் ஹோண்டா ஷைனும் ஒன்று. இப்பைக்கின் டிரம் பிரேக் வேரியண்ட் ரூ. 76,314 என்ற விலையிலும், டிஸ்க் பிரேக் வேரியண்ட் ரூ. 80,314 என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

ஹோண்டா ஷைன் இந்தியாவில் 2006 ஏப்ரல் மாதத்திலேயே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, 2009ம் ஆண்டிற்குள்ளாக இந்தியாவில் பெஸ்ட் செல்லிங் 125 சிசி பைக்காகவும் அது மாறியது. இந்த இருசக்கர வாகனத்தில் ஹோண்டா நிறுவனம் 124.7 சிசி எஞ்ஜினையே பயன்படுத்தியிருக்கின்றது. இது 10.50 பிஎச்பி மற்றும் 11 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இது லிட்டர் ஒன்றிற்கு 60 முதல் 65 கிமீ வரை மைலேஜ் தரும்.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

டிவிஎஸ் ரைடர் (TVS Raider)

மிகக் குறைவான விலையில் ஸ்போர்ட்ஸ் பைக் ஸ்டைலில் விற்பனைக்குக் கிடைக்கும் மோட்டார்சைக்கிளே டிவிஎஸ் ரைடர். பெர்ஃபார்மன்ஸ், தோற்றம், சிறப்பம்சம் என அனைத்திலும் அட்டகாசமான தயாரிப்பாக இருக்கின்றது. இது 125 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். இந்த பைக்கில் 124.8 சிசி ஏர் கூல்டு மற்றும் ஆயில் கூல்டு, 3 வால்வு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

இந்த மோட்டார் அதிகபட்சமாக 11.2 பிஎச்பி பவரையும், 11.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, ஈகோ, பவர் என இரு விதமான ரைடிங் மோட்களும் பைக்கில் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த பைக் வெறும் 5.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்டும் என்பது கூடுதல் சிறப்பு தகவலாகும்.

இந்தியாவில் விற்கப்படும் மலிவு விலை பைக்குகளின் லிஸ்ட்... எல்லா பைக்குகளுமே சூப்பரான மைலேஜை வழங்கும்... உலக மோட்டார்சைக்கிள் தின ஸ்பெஷல் பதிவு!

மேலே பார்த்த இருசக்கர வாகன மாடல்களே இந்தியாவில் குறைவான விலையில் விற்பனைக்குக் பைக்குகளாகும். இதேபோல், மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஆன்-ரோடில் அரசுகளின் வரி மற்றும் காப்பீடு உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு சற்று அதிக விலையில் அவை விற்கப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
World motorcycle day special here is list of top 5 affordable bike s in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X