இன்றைய 2023ஆம் காலக்கட்டத்தில் இந்த அம்சங்கள் இன்றி கார் வாங்குவதே வேஸ்ட்! உங்க கார்களில் என்னென்ன மிஸ் ஆகுது?

ஆட்டோமொபைல் துறை ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் கவனிக்கத்தக்க அளவில் பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது. இதன் காரணமாகவே, பல வருடங்களுக்கு முன் இருந்த கார்களுக்கும், தற்போதைய கார்களுக்கும் இடையே பெரிய அளவில் வேறுப்பாடுகள் தென்படுகின்றன. தற்போதைய 2023ஆம் காலக்கட்டத்தில் வாடிக்கையாளர்கள் பரவலாக எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்ட 10 கார் அம்சங்கள்...

1. டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட்

மொபைல் போன்களை போன்று செயல்படக்கூடிய டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் காரில் வழங்கப்படுவதே சில வருடங்களுக்கு முன்பு ஆச்சிரியமாக பார்க்கப்பட்டது. அதன்பின் குறுகிய காலத்திலேயே பயனர்கள் தங்களது மொபைல் போன் உடன் இணைக்க ஏதுவாக ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிகள் கொண்டுவரப்பட்டன. தற்சமயம் இன்ஃபோடெயின்மெண்ட்டை யார் பெரியதாக வழங்குவது என்று கார் நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது.

இன்றைய மாடர்ன் கார்களில் பலரும் எதிர்பார்க்கும் 10 அம்சங்கள்

2. சன்ரூஃப்

சன்ரூஃப், உலகம் முழுவதிலுமே கார் வாடிக்கையாளர்கள் பரவலாக எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்ட அத்தியாவசிய அம்சமாக மாறிவிட்டது. பயணத்தின்போது வெளிப்பக்க காற்றின் வேகத்தை உணர விரும்புவர்களுக்காக கொண்டுவரப்பட்ட சன்ரூஃப் ஆனது பல்வேறு வகைகளில் காரின் விலையை பொறுத்து வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, சில கார்களில் சன்ரூஃப்-ஐ பொத்தான் ஒன்றை அழுத்துவதன் மூலமாக மடக்கி கொள்ளலாம். அதுவே சில கார்களில் கைகளால் மடக்கி மூட வேண்டியிருக்கும். அதுவே, சில கார்கள் மிகவும் சிம்பிளாக மடக்கவே முடியாத சன்ரூஃப்-ஐ பெறுகின்றன.

3. புஷ் ஸ்டார்ட் பொத்தான்

சாவியை நுழைத்து திருகிக்கொண்டு இல்லாமல், தற்போதைய மாடர்ன் கார்களை ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலமாக ஸ்டார்ட் செய்ய முடிகிறது. இது காரை பயன்படுத்துபவர்களுக்கு மாடர்ன் ஆன உணர்வை வழங்குகிறது.

4. வெண்டிலேட்டட் இருக்கைகள்

நம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளுக்கு மிகவும் தேவையான வசதியான இத்தகைய இருக்கைகள் கோடை காலத்திலும் குளிர்ந்த காற்றை வெளியேற்றி பயணிகளின் முதுகு பகுதியை காற்றோட்டமாக வைத்து கொள்கின்றன.

இன்றைய மாடர்ன் கார்களில் பலரும் எதிர்பார்க்கும் 10 அம்சங்கள்

5. பார்க்கிங் கேமிரா

இன்றைய காலத்தில் காரை ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு மற்றவர்களின் உதவி தேவைப்படுவதில்லை. இவ்வளவு ஏன், வெளிப்பக்கத்தில் இருக்கும் கண்ணாடிகளை கூட பலர் பார்ப்பதில்லை. ஏனெனில் அவற்றின் வேலைகளை கவனித்து கொள்ளவே பார்க்கிங் கேமிராக்கள் வழங்கப்படுகின்றன. கார்களின் பின்பக்கத்தில் பொருத்தப்படும் இவை, காருக்கு பின்னால் என்னென்ன உள்ளன என்பதை நேரடியாக இன்ஃபோடெயின்மெண்ட் திரையில் காட்சிப்படுத்தி விடுகின்றன.

6. அதிக கிரவுண்ட் கிளியரென்ஸ்

நம் இந்திய சாலைகளை பொறுத்தவரையில் கிரவுண்ட் கிளியரென்ஸ் முக்கியமாகும். கிரவுண்ட் கிளியரென்ஸ் என்பது தரைப்பகுதிக்கும், காரின் அடித்தள பகுதிக்கும் இடையேயான உயரம் ஆகும்.

7. ஸ்டைலிஷான தோற்றம்

ஏற்கனவே கூறியதுபோல், கார்களின் தோற்றம் சமீப காலங்களில் பெரிய அளவில் மாறியுள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எல்லா டிசைனும் சூப்பராக இருப்பதால் அவற்றில் சிறந்த ஒன்றை பார்த்து தேர்வு செய்வது சற்று சிரமமாக மாறியுள்ளது.

இன்றைய மாடர்ன் கார்களில் பலரும் எதிர்பார்க்கும் 10 அம்சங்கள்

8. டிரைவர் சீட் ஹைட் அட்ஜெஸ்ட்மெண்ட்

மற்ற இருக்கைகளை காட்டிலும் ஓட்டுனர் இருக்கை ஆனது அனைத்து விதமான சவுகரிய வசதிகளையும் வழங்கக்கூடியதாக இருத்தல் அவசியமாகும். ஏனெனில் ஓட்டுனர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உயரம் மற்றும் அகலத்தில் இருப்பர். குறிப்பாக, உயரத்தை சமரசம் செய்து கொள்ளுதல் கூடாது என்பதற்காக இன்றைய கார்களில் ஓட்டுனர் இருக்கையை பல்வேறு உயரங்களில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். ஏனெனில் ஓட்டுனர் சாலையை முழுமையாக பார்க்க முடியாவிடின் விபத்தை சந்திக்க நேரிடும்.

9. ப்ளஷ் கேபின்

வெளிப்பக்கத்தை போன்று, கார்களின் உட்பக்க கேபினின் தரமும் பல படிகளுக்கு மேம்பட்டு உள்ளது. தற்போதைய மாடர்ன் கார்களில் ப்ளஷ் மெட்டீரியல்கள் மற்றும் உயர் தரத்திலான ஃபினிஷிங்கில் கேபின் வடிவமைக்கப்படுகின்றன. சிறு சிறு பாகங்கள் கூட கவனத்துடன் அலங்கரிப்படுகின்றன. இதனால் நீங்கள் காரை ஓட்ட முடியாவிட்டாலும், பின் இருக்கையில் அமர்ந்து கொண்டும் அசத்தலான கார் பயணத்தை அனுபவிக்கலாம்.

10. ஆற்றல்மிக்க என்ஜின்

மேற்கூறப்பட்ட அத்தனை அம்சங்களும் இருந்து, காரின் செயல்படுதிறன் போதிய அளவிற்கு இல்லை என்றால் எவரொருவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதற்காகவே கார் தயாரிப்பு நிறுவனங்கள் அவ்வப்போது புதிய புதிய ஆற்றல்மிக்க என்ஜின்களை கார்களில் அறிமுகப்படுத்தி வருகின்றன. அதேநேரம், காரின் அளவிற்கு ஏற்ப என்ஜினை வழங்கி காரின் மைலேஜ் விஷயங்களும் கவனத்துடன் பின்பற்றப்படுகின்றன.

Most Read Articles
English summary
10 important modern car features expecting by today people
Story first published: Tuesday, January 31, 2023, 11:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X