க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!

ஹூண்டாய் நிறுவனம் அதன் அப்டேட் செய்யப்பட்ட வென்யூ எஸ்யூவி காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அப்டேட்டாக என்ன அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன?, எவ்வளவு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது?, என்பது போன்ற முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹூண்டாய் நிறுவனம் அதன் அப்டேட் செய்யப்பட்ட வென்யூ காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனத்தின் பிரபலமான சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராக வென்யூ இருக்கின்றது. இந்த கார் மாடலின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனே தற்போது நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு உள்ளது. இந்த 2023 ஹூண்டாய் வென்யூவிற்கு அறிமுக விலையாக ரூ. 7.68 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வென்யூ

பவர்ஃபுல் மோட்டார் சேர்ப்பு

இதன் அதிகபட்ச விலை ரூ. 13.11 லட்சம் ஆகும். இவை எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. பன்முக அப்டேட்டை இந்த காரில் ஹூண்டாய் மேற்கொண்டிருக்கின்றது. பவர்ஃபுல் மோட்டார் சேர்ப்பும் செய்யப்பட்டு உள்ளது. இதன் விளைவாகவே காரின் விலை சற்று அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் ஆப்ஷன்களில் 2023 ஹூண்டாய் வென்யூ விற்பனைக்குக் கிடைக்கும்.

பெட்ரோல் தேர்வில் கிடைக்கும் வென்யூவின் விலை ரூ. 7.68 லட்சம் ரூ. 12.86 லட்சமாக உள்ளது. டீசல் மோட்டார் கொண்ட வென்யூ 11.62 லட்ச ரூபாய் முதல் 12.66 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த புதிய விலையை பழைய விலையுடன் ஒப்பிடுகையில், ரூ. 25 ஆயிரம் வரை உயர்வு செய்யப்பட்டிருப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

வென்யூ

விலை வித்தியாசம்

பெட்ரோல் வெர்ஷனின் விலையில் ரூ. 14,300 வரையிலும், டீசல் வெர்ஷனிலேயே ரூ. 25 ஆயிரம் வரையில் விலை உயர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. முன்னதாக கூறியதைப் போல் புதிய 2023 ஹூண்டாய் வென்யூவில் பவர்ஃபுல் டீசல் மோட்டார் சேர்க்கப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ டீசல் மோட்டார் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றது. புதிய கிரெட்டா எஸ்யூவி காரிலும் இதே மோட்டாரே பயன்படுத்தப்படுகின்றது.

அதேவேளையில், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுக்கு பதிலாக வென்யூ டீசலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் 116 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது முந்தைய டீசல் மோட்டார் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் அதிக பவர் ஆகும். 16 பிஎஸ் மற்றும் 14 என்எம் டார்க் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த டீசல் மோட்டாரைப் போலவே சூப்பரான மோட்டாராக பெட்ரோல் எஞ்ஜின் உள்ளது.

வென்யூ

இரு விதமான பெட்ரோல் மோட்டார் தேர்வு

பெட்ரோல் மோட்டார் விஷயத்தில் இரு விதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் எஞ்ஜின் மற்றும் 1.0 லிட்டர் டர்போ எஞ்ஜின் என இரு விதமான தேர்வுகள் வழங்கப்படுகின்றன. 1.2 லிட்டர் மோட்டாரானது 83 பிஎஸ் பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இரண்டாவது மோட்டாரான 1.0 லிட்டர் டர்போ எஞ்ஜின் அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 172 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு ஐஎம்டி அல்லது 7 ஸ்பீடு டிசிடி ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இவற்றுடன் சேர்த்து இன்னும் சில சிறப்பம்சம் சேர்ப்பையும் ஹூண்டாய் 2023 வென்யூவில் செய்திருக்கின்றது. சைடு ஏர் பேக் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனை மிடில் ஸ்பெக் மாடலான எஸ்(ஓ) ட்ரிம்மில் பார்க்க முடியும். இந்த அம்சம் முன்னதாக டாப் எண்ட் ஸ்பெக்கான எஸ்எக்ஸ் (ஓ) ட்ரிம்மில் மட்டுமே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

வென்யூவில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்

இதுதவிர சைடு ஏர் பேக்குகள் என்6 வெர்ஷன் வென்யூவிலும் வழங்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாகவே தற்போது எஸ்(ஓ) ட்ரிம்மிலும் சைடு ஏர் பேக் பயணிகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்துடன் சேர்த்து சீட் ரெக்லைனர் மற்றும் ஆர்ம்ரெஸ்ட், கப் ஹோல்டருன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய சூப்பரான அப்டேட்டைப் பெற்ற காராகவே 2023 ஹூண்டாய் வென்யூ தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த அப்டேட் வெர்ஷனுக்கும் முந்தைய வெர்ஷன் வென்யூவிற்கு கிடைத்ததைப் போல நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விலை விபரம் பட்டியலாக

ஹூண்டாய் வென்யூவின் விலை விபரம்
பெட்ரோல் புதிய விலை பழைய விலை வித்தியாசம்
E 1.2 MT ₹7.68 Lakh ₹7.62 Lakh ₹6,000
S 1.2 MT ₹8.90 Lakh ₹8.79 Lakh ₹11,000
S (O) 1.2 MT ₹9.73 Lakh ₹9.58 Lakh ₹15,000
S (O) 1.0 iMT ₹10.40 Lakh ₹10.15 Lakh ₹25,000
SX 1.2 MT ₹10.89 Lakh ₹10.77 Lakh ₹12,000
S (O) 1.0 DCT ₹11.36 Lakh ₹11.11 Lakh ₹25,000
SX (O) 1.0 iMT ₹12.31 Lakh ₹12.06 Lakh ₹25,000
SX (O) 1.0 DCT ₹12.96 Lakh ₹12.71 Lakh ₹25,000
டீசல் புதிய விலை பழைய விலை வித்தியாசம்
S+ 1.5 MT ₹10.40 Lakh ₹10.15 Lakh ₹25,000
SX 1.5 MT ₹11.62 Lakh ₹11.62 Lakh 0
SX (O) 1.5 MT ₹12.51 Lakh ₹12.51 Lakh 0
Most Read Articles
English summary
2023 hyundai venue launched in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X