டொயோட்டா இன்னோவாவின் மார்க்கெட்டை சரிக்க வரும் உல்லாச கப்பல்! இந்த மாசமே களத்தில் இறக்க போறாங்களாம்!

காரா? இல்ல உல்லாச கப்பலா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று கியா கார்னிவல் (Kia Carnival). காரா அல்லது உல்லாச கப்பலா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு, கியா கார்னிவல் கார் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், கியா நிறுவனம் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட புதிய தலைமுறை கார்னிவல் காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

டீசர் வந்தாச்சு!

அதற்கு முன்னதாக கியா நிறுவனம் புதிய தலைமுறை கார்னிவல் காரின் டீசர் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களின் மூலம், புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் எப்படி இருக்கும்? என்பது நமக்கு ஓரளவிற்கு தெரியவந்துள்ளது. புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் முன் பகுதியில், புதிய க்ரில் அமைப்பு வழங்கப்படவுள்ளது. இதுதவிர ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகளுடன் கூடிய புதிய செவ்வக வடிவிலான ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்களும் இடம்பெறவுள்ளன.

டொயோட்டா இன்னோவாவின் மார்க்கெட்டை சரிக்க வரும் உல்லாச கப்பல்! இந்த மாசமே களத்தில் இறக்க போறாங்களாம்!

மேலும் ட்யூயல் டோன் அலாய் வீல்கள், கார் பாடியின் நிறத்திலேயே க்ளாடிங் மற்றும் எல்இடி டெயில்லைட்கள் ஆகியவற்றையும் புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் பெற்றிருக்கும். ஒட்டுமொத்தத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடலுடன் ஒப்பிடும்போது, புதிய தலைமுறை மாடலின் டிசைன் இன்னும் நிறைய பேரை கவர கூடிய வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வந்த பின்பு, கியா கார்னிவல் காரின் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அனுமார் வால் போல் நீளும் வசதிகள்!

புதிய தலைமுறை கியா கார்னிவல் காரில், வசதிகளுக்கு கொஞ்சம் கூட பஞ்சமிருக்காது. ட்யூயல் சன்ரூஃப், அடாஸ், கனெக்டட் கார் தொழில்நுட்பம், வயர்லெஸ் செல்போன் சார்ஜிங், இரண்டு 12.3 இன்ச் திரைகள் (ஒன்று டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும்), 3 ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல், 12 ஸ்பீக்கர் போஸ் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 7, 9 மற்றும் 11 சீட்டர் வெர்ஷன்களில் புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் விற்பனை செய்யப்படலாம்.

டொயோட்டா இன்னோவாவின் மார்க்கெட்டை சரிக்க வரும் உல்லாச கப்பல்! இந்த மாசமே களத்தில் இறக்க போறாங்களாம்!

இன்ஜின்!

சர்வதேச சந்தைகளுக்கான 2023 கியா கார்னிவல் காரில், 3.5 லிட்டர், வி6 பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 290 பிஹெச்பி பவரையும், 355 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள கியா கார்னிவல் காரில், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இதே இன்ஜின் ஆப்ஷன்தான், இந்திய சந்தைக்கான புதிய தலைமுறை கியா கார்னிவல் காரிலும் தொடர்ந்து வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 200 பிஹெச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இந்தியாவில் நடப்பு ஜனவரி மாதம், 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) நடைபெறவுள்ளது. இதில், புதிய தலைமுறை கியா கார்னிவல் கார் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியிலேயே புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் விலைகள் அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அல்லது 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்து விட்டு, புதிய தலைமுறை கார்னிவல் காரின் விலைகளை கியா நிறுவனம் பின்னர் அறிவிக்கலாம். புதிய தலைமுறை கார்னிவல் தவிர, மேலும் 9 தயாரிப்புகளையும், 2023 ஆட்டோ எக்ஸ்போவில் கியா நிறுவனம் காட்சிக்கு வைக்கவுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக 10 தயாரிப்புகளை கியா நிறுவனம் காட்சிப்படுத்தவுள்ளது.

டொயோட்டாவிற்கு தலைவலி!

புதிய தலைமுறை கியா கார்னிவல் காரின் வருகை, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) ஆகிய கார்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரானது, சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதற்கிடையே கியா கார்னிவல் கார், 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விட்டால், அதன் வாடிக்கையாளர்களுக்கு இந்த பொங்கல் (Pongal) இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

Most Read Articles
English summary
2023 kia carnival official teaser
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X