இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!

அப்டெரா மோட்டார்ஸ் (Aptera Motors), தயாரிப்பிற்கு தயாராக இருக்கும் தனது புதுமுக எலெக்ட்ரிக் கார் பற்றிய முக்கிய விபரங்கள் சிலவற்றை வெளியிட்டு இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அப்டெரா மோட்டார்ஸ் (Aptera Motors). இந்த நிறுவனமே தனது தயாரிப்பிற்கு தயாராக இருக்கும் மின்சார வாகனம் பற்றிய தகவலை வெளியிட்டு இருக்கின்றது. நிறுவனம் டெல்டா (Aptera Delta Solar Car) எனும் பெயரில் மூன்று சக்கரத்தில் இயங்கும் கான்செப்ட் மாடலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் வெளியீடு செய்தது. இந்த வாகனத்தையே தற்போது தயாரிப்பு நிலைக்கு அது உயர்த்தி இருக்கின்றது.

சோலார்

சோலார் மின்சார கார்

இது ஓர் சோலார் மின்சார கார் ஆகும். ஆம், சூரிய ஒளியின் வாயிலாக இயங்கும் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்த வாகனத்தை சார்ஜ் செய்தும் பயன்படுத்திக் கொள்ள முடியும். முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் சோலார் எலெக்ட்ரிக் வாகனத்தில் 643 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேவேளையில், சோலார் பேனல் வாயிலாக காரை பயன்படுத்தும்போது 64 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள்

இதற்கான சோலார் பேனல்கள் காரின் மேற்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. காரின் முன் பக்கம் மற்றும் மேற்கூரை மீதே சோலார் பேனல்கள் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன் அப்டெரா டெல்டா சோலார் எலெக்ட்ரிக் காரில் மூன்று மோட்டார்கள் இடம் பெற இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வீலுக்கும் இயக்க திறனை வழங்கும் விதமாக மூன்று வீல்களிலும் நிலை நிறுத்தப்பட்டிருக்கும். இந்த காரை அப்டெரா நிறுவனம் தனித்துவமான ஸ்டைலில் உருவாக்கி இருக்கின்றது.

சோலார்

நீர் துளி போல் ஸ்டைல்

இன்னும் தெளிவாக கூற வேண்டும் நீர் துளியை போல் அதற்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஹை டிராக் கோ-எஃப்பிசியன்டி 0.13 ஆகும். சோலார் காரின் இந்த திறனுக்காக அல்ட்ரா இலகு ரக எடைக் கொண்ட மற்றும் உறுதியான பேனல் மற்றும் பாகங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. 700 வாட் எனர்ஜியை உருவாக்கும் சோலார் பேனலே காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுவே, சார்ஜ் செய்யாமல் சூரிய ஒளியால் காரை இயங்கச் செய்கின்றது.

செம்ம ஸ்பீடுல போகும்

சூரிய ஒளி இல்லாத நேரத்தில் காரை இயக்கவே சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது. எந்த மாதிரியான சார்ஜிங் நிலையத்தில் வைத்து வேண்டுமானாலும் தங்களின் சோலார் காரை சார்ஜ் செய்து கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமில்லைங்க அதிக வேகத்தில் பயணிக்கும் காராகவும் டெல்டா சோலார் எலெக்ட்ரிக் காரை அப்டெரா உருவாக்கி இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 162.5 கிமீ வேகம் ஆகும்.

சோலார்

ஸ்டோரேஜ் மிக அதிகம்

அதேவேளையில் வெறும் நான்கு செகண்டுகளிலேயே இது பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகவும் இந்த சோலார் எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரில் அதிக ஸ்டோரேஜ் வசதியையும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். 920 லிட்டர் அளவுள்ள பூட் ஸ்டோரேஜ் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. இத்தகைய வாகனத்தையே விரைவில் உற்பத்தி செய்ய இருப்பதாக அப்டெரா அறிவித்துள்ளது.

இந்தியால இதேபோல சூப்பர் சோலார் தயாராயிட்டு இருக்கு

இதன் உற்பத்தி பணிகள் நடப்பாண்டு இறுதிக்குள் தொடங்கிவிடும் என நிறுவனத்தின் இணை இயக்குநர் கிரிஸ் அந்தோணி தெரிவித்துள்ளார். ஆனால், டெலிவரி பணிகள் எப்போது தொடங்கும் என்கிற விபரம் அறிவிக்கப்படவில்லை. இந்தியாவிலும் இதுமாதிரியான கார்களை உருவாக்கும் பணிகளில் வாகன உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக வேவீ எனும் நிறுவனம் எவா (Vayve Eva) எனும் சோலார் எலெக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தியது.

இந்த காரிலும் சூரிய ஒளி இல்லாத நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக பிளக் இன் வசதிக் கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது, சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதியைம் எவா சோலார் எலெக்ட்ரிக் காரில் வேவி வழங்கி இருக்கின்றது. இதன் வருகையும் வெகு விரைவில் அமைய இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் 2 சீட்டர் கார் மாடலாகும். அதேநேரத்தில் முன் பக்கத்தில் ஒருவரும் பின் பக்கத்தில் 2 சிறுவர்களும் அமர்ந்து பயணிக்க முடியும்.

Most Read Articles
English summary
Aptera delta ready to production
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X