இப்படியொரு சூப்பரான ஆடி கார் இந்தியாவிற்கு வரும் என்று எதிர்பார்க்கவே இல்ல!! ரூ.2 லட்சத்தில் புக் பண்ணிடலாம்!

ஸ்போர்ட்பேக் கார்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதிலுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், க்யூ3 ஸ்போர்ட்பேக் காருக்கான முன்பதிவுகளை ஆடி நிறுவனம் இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்த புதிய ஆடி காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகளவில் பிரபலமான ஆடி எஸ்யூவி காரான க்யூ3-இன் ஸ்போர்ட்பேக் வெர்சன் தான் க்யூ3 ஸ்போர்ட்பேக் ஆகும். இந்த ஸ்போர்ட்பேக் காருக்கு தான் தற்போது ரூ.2 லட்சம் என்ற டோக்கன் தொகை உடன் முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. ஆதலால், புதிய க்யூ3 ஸ்போர்ட்பேக்கை வாங்க விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ரூ.2 லட்சத்தை செலுத்தி காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் காருக்கு புக்கிங் ஸ்டார்ட்!!

இந்த வகையில் இந்திய வாடிக்கையாளர்களை சென்றடைய உள்ள க்யூ3 ஸ்போர்ட்பேக் எஸ்யூவி காரின் வெளிப்பக்கம் ஆடி எஸ்-லைன் கார்களுக்கே உண்டான ஹைலைட்களுடன் காட்சியளிக்கிறது. அத்துடன், 18 இன்ச்சில் 5-ஸ்போக் அலாய் சக்கரங்களை கொண்டுள்ள இந்த புதிய ஆடி காரில் பனோராமிக் சன்ரூஃப்-உம் வழங்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்கள் எல்இடி தரத்திலும், டெயில்கேட் சைகை கண்ட்ரோலில் இயங்கக்கூடியதாகவும் உள்ளன.

உட்பக்க கேபினை பொறுத்தவரையில், வழக்கமான ஆடி க்யூ3 காரையே இந்த புதிய ஸ்போர்ட்பேக் வெர்சனும் ஒத்து காணப்படுகிறது. புதிய க்யூ3 ஸ்போர்ட்பேக்கின் கேபினில் 3-ஸ்போக் ஸ்டேரிங் சக்கரம், 10.1-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 10-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டத்துடன் 10.25-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் ஹெட்-யூனிட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ஏசி ஆனது 2 விதமான நிலைகளில் தன்னிச்சையாக செயல்படக்கூடியதாக உள்ளது.

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் காருக்கு புக்கிங் ஸ்டார்ட்!!

இவற்றுடன் வயர்லெஸ் சார்ஜிங், எலக்ட்ரிக்கல்லி அட்ஜெஸ்டபிள் முன் இருக்கைகள் மற்றும் கேபினை சுற்றிலும் விளக்குகளும் காரில் இடம்பெற்றுள்ளன. இதில் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் ஆகக்கூடியதாக உள்ள முன் இருக்கைகள் 4-வழிகளில் லம்பர் சப்போர்ட்டை வழங்கும். புதிய க்யூ3 ஸ்போர்ட்பேக் காரில் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டர்போ பெட்ரோல் என்ஜினின் மூலமாக அதிகப்பட்சமாக 187 பிஎச்பி மற்றும் 320 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை பெற முடியும்.

இந்த என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யூவல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் குவாட்ரோ ஆல்-வீல் டிரைவ் சிஸ்டமும் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளது. புதிய க்யூ3 ஸ்போர்ட்பேக் காரை மொத்தம் 5 விதமான நிறத்தேர்வுகளில் தேர்வு செய்யலாம். டர்போ நீலம், கிளாசியர் வெள்ளை, க்ரோனோஸ் கிரே, மைதோஸ் கருப்பு மற்றும் நவார்ரா நீலம் என்பவை அந்த 5 நிறத்தேர்வுகளாகும்.

ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் காருக்கு புக்கிங் ஸ்டார்ட்!!

அதேபோன்று இந்த புதிய ஸ்போர்ட்பேக் காரின் உட்பக்க கேபினையும் ஒகாபி ப்ரவுன் அல்லது பேர்ல் பழுப்பு என்கிற 2 விதமான நிறங்களில் ஒன்றில் தேர்வு செய்யலாம். காருக்கான முன்பதிவுகளை துவங்கி வைத்து பேசிய ஆடி இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பல்பிர் சிங் தில்லோன், "2023இல் எங்களது முதல் அறிமுகமானது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் ஆகும்.

பிரிவில் முதல்முறையாக இத்தகைய உடலமைப்பை கொண்ட புதிய ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் காருக்கான முன்பதிவுகளை துவங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அசத்தலான தோற்றம் கொண்ட செயல்படுதிறன்மிக்க காரை தினந்தோறும் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு புதிய ஆடி க்யூ3 ஸ்போர்ட்பேக் ஏற்றதாக இருக்கும்" என கூறியவர், "2022இல் நாங்கள் கார்கள் விற்பனையில் 27% வளர்ச்சியை கண்டுள்ளோம் மற்றும் அது இந்த 2023ஆம் ஆண்டிலும் எந்தவொரு மாற்றமும் இன்றி தொடரும் என நம்பிக்கையாக உள்ளோம்" என்றார்.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi india opens bookings for q3 sportback car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X