அனுமதி கிடைச்சாச்சு! பஜாஜின் விலை குறைவான காரை இனி தனி நபர்களும் வாங்கிக்கலாம்! மாருதிக்கு பலத்த அடி விழபோகுது

தனி நபர்களின் பயன்பாட்டிற்கும் க்யூட் வாகனத்தை விற்பனைச் செய்து கொள்ளலாம் என பஜாஜ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அனுமதி பற்றிய கூடுதல் முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மலிவு விலையில் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே நாட்டின் நம்பர் கார் செல்லராக மாருதி சுஸுகி இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகவும், குறைவான பராமரிப்பு செலவையே வழங்கும் என்கிற காரணத்திற்காகவும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே மிக மலிவு விலைக் கொண்ட காரின் விற்பனைக்கு நாட்டில் அனுமதி கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பஜாஜ் க்யூட்

பேருக்கேற்ப க்யூட்டா இருக்கும்

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் க்யூட் எனும் வாகனத்தை தயாரித்து வருபவதை நம்மில் பலர் அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். நான்கு சக்கரங்களுடன் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த வாகனம் கார் அல்ல என்பதுதான் உண்மை. இது ஓர் குவாட்ரிசைக்கிள் எனப்படும் ரக வாகனமாகும். ஆனால், தோற்றத்தில் காரைப் போல் இருக்கும். அதேவேளையில், இயக்கத்தைப் பொருத்தவரை இது ஓர் மூன்று சக்கர வாகனம் (ஆட்டோரிக்சா)போல் செயல்படும்.

தனிநபர் வாங்கிக் கொள்ளலாம்

ஆம், இதன் எஞ்ஜின் பின் பகுதியிலேயே நிலை நிறுத்தப்பட்டு இருக்கும். இத்தகைய வாகனத்திற்கே தனிநபர் விற்பனைக்கான அனுமதி தற்போது கிடைத்து இருக்கின்றது. முன்னதாக வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்காக வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த வாகனத்தை விற்பனைக்கு வழங்க வேண்டும் என்ற சூழல் நிலவி வந்தது. அண்மையில் வழங்கப்பட்ட புதிய அனுமதி இதை தனி நபர் பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என உயர்த்தி இருக்கின்றது.

பஜாஜ் க்யூட்

என்சிஏடி அனுமதி

2023 என்சிஏடி (NCAT)-யே இதற்கான அனுமதியை வழங்கி இருக்கின்றது. எனவே, பிரைவேட் மற்றும் நான்-டிரான்ஸ்போர்ட் ஆகிய கேட்டகரியின்கீழ் இதனை பதிவு செய்துகொள்ள முடியும். முன்னதாக பஜாஜ் நிறுவனம் இந்த வாகனத்தை தனிநபர் பயன்பாட்டிற்கான வாகனமாகவே விற்பனைக்குக் கொண்டு வந்தது. ஆனால், இதற்கான அனுமதி அப்போது கிடைக்கவில்லை. இதன் விளைவாக 2018 இல் இருந்து வர்த்தக பயன்பாட்டிற்கான வாகனமாக மட்டுமே விற்பனைச் செய்யப்பட்டு வந்தது.

திறன் அதிகரிப்பு

இந்த நிலையையே புதிய விதிகள் மாற்றி இருக்கின்றன. பஜாஜ் நிறுவனம் 2023 வெர்சனாக க்யூட் குவாட்ரிசைக்கிள் வாகனத்தில் பல்வேறு சிறப்பு மாற்றங்களைச் செய்து இருக்கின்றது. அந்தவகையில், அடிப்படை மாற்றங்களாக ரோலிங் விண்டோ மற்றும் ஏசி சர்குலேசனில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதேபோல், குவாட்ரி சைக்கிளின் எஞ்ஜின் திறனும் மாற்றப்பட்டு இருக்கின்றது. முன்னதாக 10.8 ஆக எச்பி திறன் தற்போது 12.8 ஆக உயர்ந்திருக்கின்றது.

பஜாஜ் க்யூட்

சிஎன்ஜி தேர்விலும் கிடைக்கும்

மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். 216 சிசி திறன் கொண்ட 4 வால்வு வாட்டர் கூல்டு டிடிஎஸ்ஐ எஞ்ஜினே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாரில் ஃப்யூவல் இன்ஜெக்சன் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் லிட்டருக்கு 35 கிமீ வரை மைலேஜ் தரும். இந்த வாகனத்தை சிஎன்ஜி வெர்ஷனிலும் பஜாஜ் விற்பனைக்கு வழங்குகின்றது. அது ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 35 கிமீ வரை ரேஞ்ஜ் தரும்.

முன்பைவிட எடை அதிகம்

ஆனால், பெட்ரோல் மோட்டாரைக் காட்டிலும் சிஎன்ஜி மோட்டாரின் திறன் வெளிப்பாடு குறைவாகவே இருக்கும். முன்பைவிட 17 கிலோ கூடதலாக ஏற்றிச் செல்லும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. பஜாஜ் க்யூட் ஓர் சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற வாகனமாக இருக்கும். குறிப்பாக, நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற வாகனமாகவும் இது இருக்கும். குறுகிய மற்றும் நெரிசல் மிகுந்த சாலை பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே இந்த வாகனத்தை பஜாஜ் உருவாக்கி இருக்கின்றது.

குட்டி இடமே போதும்

இதை பார்க் செய்ய பெரிய அளவில் இட வசதி தேவைப்படாது. குட்டியான காலி இடமே போதுமானது. ஓர் ஆட்டோ நிறுத்தும் இடம் இருந்தாலே போதுமானது. அதேவேளையில், இந்த வாகனத்தில் நல்ல இட வசதி இருக்கும். கணிசமான பிரீமியம் தர அம்சங்களும் பஜாஜ் க்யூட்டில் வழங்கப்பட்டிருக்கும். வாகனத்தின் கவர்ச்சியான தோற்றத்திற்காக 12 அங்குல அலாய் வீல்கள், கருப்பு நிற பம்பர் மற்றும் கருப்பு நிற மேற்கூரை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Bajaj qute can buy private use
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X