புண்ணியம் பண்ணிருந்தா தான் இந்த காரை வாங்க முடியும்! வெறும் 1200 பேருக்கு மட்டும் கிடைக்கபோகும் அரிய வாய்ப்பு!

பிஒய்டி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தனது பிஒய்டி அட்டோ 3 எலெக்ட்ரிக் காரின் ஸ்பெஷல்எடிசனை உருவாக்கியுள்ளது. வெறும் 1200 கார்கள் மட்டுமே உருவாக்கவுள்ள இந்த காரில் உள்ள அம்சங்கள் குறித்து விரிவாக காணலாம் வாருங்கள்

நொய்டாவில் ஆட்டோ எக்ஸ்போ பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வரிசையாகக் காட்சிப்படுத்திக்கொண்டே வருகின்றனர். இந்தாண்டு இந்த கண்காட்சியில் பிஒய்டி என்ற சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமும் கலந்து கொண்டுள்ளது. இந்நிறுவனம் நேற்று தனது எலெக்ட்ரிக் கான்செப்ட் காரான இவி9 காரை அறிமுகப்படுத்தியது.

புண்ணியம் பண்ணிருந்தா தான் இந்த காரை வாங்க முடியும்! வெறும் 1200 பேருக்கு மட்டும் கிடைக்கப்போகும் அரிய வாய்ப்பு!

இத்துடன் சேர்ந்து இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்து வரும் அட்டோ 3 காரின் ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் வெளிப்புறத்தில் ஃபாரஸ்ட் கிரீன் நிறத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இதன் டோர் ஹேண்டில்கள் மற்றும் ஓஆர்விஎம்கள் மட்டும் கருப்பு நிறத்திலும், வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் வீல்களில் டூயல் டோன் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பிஒய்டி அட்டோ 3 கார் அந்நிறுவனத்தின் இ-பிளாட்ஃபார்ம் 3.0-ல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 60.48 கிலோவாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் முன்புறம் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 201 பிஎச்பி பவரையும் 310 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பிஒய்டி அட்டோ 3 கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 7.3 நொடிகளில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இந்த கார் முழு சார்ஜில் 521 கி.மீ வரை பயணிக்கும்.

புண்ணியம் பண்ணிருந்தா தான் இந்த காரை வாங்க முடியும்! வெறும் 1200 பேருக்கு மட்டும் கிடைக்கப்போகும் அரிய வாய்ப்பு!

இந்த காரின் உட்புறத்தைப் பொருத்தவரை 12.8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது ஆப்பிள் கார்பிளே, மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய கனெக்ட்டிவிட்டி அம்சங்களை உள்ளடக்கியது. இதுபோக இந்த காரின் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளேவும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளேவாக கொடுக்கப்பட்டுள்ளது.

இது போக இந்த காரில் பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு முன்பக்க சீட்கள், ஒன் டச் எலெக்ட்ரிக் டெயில் கேட், ஆகியஅம்சங்கள் இருக்கிறது. மிக முக்கியமாக இந்த காரில் ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம் இருக்கிறது. இதில் 7-ஏர்பேக், ஏபிஎஸ், இஎஸ்பி, ஹில்-ஹோல்டு அசிஸ்ட், மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.

புண்ணியம் பண்ணிருந்தா தான் இந்த காரை வாங்க முடியும்! வெறும் 1200 பேருக்கு மட்டும் கிடைக்கப்போகும் அரிய வாய்ப்பு!
அட்டோ 3 காரை பொருத்தவரை அந்நிறுவனத்தின் பிளேடு பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி மிகப்பெரிய மோட்டாரை கையாளும் திறன் கொண்டது. மேலும் இந்த காரில் வெஹிகில் - டூ-லோடு பங்ஷன் இருக்கிறது. இந்த பேட்டரி 3.3 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும். இந்த கார் ஒரு லிமிட்டட் எடிசன் கார் என்பதால் வெறும் 1200 கார்களை மட்டுமே தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த காரின் விலையைப் பொருத்தவரை ரூ34.49 லட்சம் என்ற விலையில் இந்த கார் விற்பனையாகிறது. இந்த கார் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.
Most Read Articles
English summary
Byd launches atto 3 special edition limited car in auto expo 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X