இதை யாரும் சைனா டாய்ஸ்னு சொல்ல முடியாது! தரமான காரை பிஒய்டி மக்களுக்கு காட்டிட்டாங்க!

பிஒய்டி நிறுவனம் சீல் என்ற எலெக்ட்ரிக் செடான் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக இந்த காரை அந்நிறுவனம் முதன் முறையாக இந்தியாவில் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

சீனாவைச் சேர்ந்த பிரபலமான நிறுவனம் பிஒய்டி, இந்நிறுவனம் இந்தியாவில் களம் இறங்கி தனது கார்களை தயாரிக்கத் துவங்கிவிட்டது. ஏற்கனவே இந்நிறுவனம் பிஒய்டி அட்டோ 3 மற்றும் பிஒய்டி இ6 ஆகிய எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மேலும் இந்தியாவில் பல புதிய மாடல்களில் கார்களை களம் இறக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த வரிசையில் 3வது காராக இந்நிறுவனம் சீல் என்ற காரை பொது வெளிக்குக் காட்சிப்படுத்தியுள்ளது.

இதை யாரும் சைனா டாய்ஸ்னு சொல்ல முடியாது! தரமான காரை பிஒய்டி மக்களுக்கு காட்டிட்டாங்க!

பிஒய்டி நிறுவனம் சீல் காரை ஆட்டோ எக்ஸ்போ 2023ல் முதன்முறையாக இந்தியாவில் மக்கள் பார்வைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் இந்தியாவில் முறையாக இரண்டாம் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும், வரும் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இந்த கார் குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

பிஒய்டி நிறுவனம் தனது சீல் காரை பிரிமியம் லுக் காராக வடிவமைத்துள்ளது.இதற்காக யூனிக் டிசைன்கள் கொடுகு்கப்பட்டுளு்ளது. இதன் டிசைன் ஏரோடைனமிக் வடிவில் கொடுக்கப்பட்டள்ளது. இதன் முன்பக்கம் ஸ்மூத்தாகவும், ஸ்லீக்கான ஹெட்லைட் உடனும் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்தகாரின் பக்கவாட்டில் ஃபிளாஷ் டோர் ஹேண்டில்கள் மற்றும் டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதை யாரும் சைனா டாய்ஸ்னு சொல்ல முடியாது! தரமான காரை பிஒய்டி மக்களுக்கு காட்டிட்டாங்க!

இந்த காரின் பின்புறம் முழு நீள எல்இடி லைட் பார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சீல் காரின் உட்புறத்தில் அட்டோ 3 காரில் இருப்பதைப் போலவே 15.6 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்பிளே சென்டர் கன்சோலில் பொருத்தப்பட்டுள்ளது. இது போக 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை சுற்றி ஏசி வென்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்கிரினிற்கு கீழே ஸ்ரோல் வீல் மற்றும் டிரைவ் மோட்களை தேர்வு செய்யும் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் 2 வயர்லெஸ் சார்ஜிங் பேட்கள், விண்ட் ஸ்கிரீனை ஹீட்டாக்கும் பட்டன், ஆடியோ வால்யூம் கண்ட்ரோல் செய்யும் பட்டன் ஆகியன வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக பிஒய்டி சீல் காரை பொருத்தவரை மொத்தம் 2விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 61.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் மற்றம் 85.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் என மொத்தம் 2 விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன.

இதை யாரும் சைனா டாய்ஸ்னு சொல்ல முடியாது! தரமான காரை பிஒய்டி மக்களுக்கு காட்டிட்டாங்க!

இதில் 61.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட கார் 550 கி.மீ ரேஞ்சையும், 82.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் கொண்ட கார் 700 கி.மீ ரேஞ்சையும் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 3.8 நொடியில் எட்டி பிடித்துவிடும் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Byd showcased seal ev in auto expo debuts India soon
Story first published: Wednesday, January 11, 2023, 14:44 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X