டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று சிட்ரோன் இசி3 (Citroen eC3). இது இந்திய சந்தையில் சிட்ரோன் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்த சூழலில், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings)ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.

சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் நீங்கள் இசி3 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது உங்களுக்கு அருகில் உள்ள சிட்ரோன் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப் மூலமாகவும் இந்த எலெக்ட்ரிக் காரை நீங்கள் புக்கிங் செய்து கொள்ள முடியும். வெறும் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தினால், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா எலெக்ட்ரிக் கார்களின் கதையை முடிக்க போகுது! மிகவும் விலை குறைவான மாடலுக்கு புக்கிங் தொடக்கம்!

விலை?

சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் கூடிய விரைவிலேயே இந்த எலெக்ட்ரிக் காரின் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. அனேகமாக வரும் பிப்ரவரி மாதத்தில் சிட்ரோன் நிறுவனம் இசி3 எலெக்ட்ரிக் காரின் விலைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் முன் பக்க ஃபெண்டரில், சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இசி3.

எனவே டிசைனில் நிறைய அம்சங்கள், சிட்ரோன் சி3 காரை போலவே உள்ளன. எனினும் உட்புறத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இந்த எலெக்ட்ரிக் காரின் சென்டர் கன்சோலில், கியர் லிவருக்கு பதிலாக, டிரைவிங் மோட்களை தேர்வு செய்து கொள்வதற்கான பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன. செயல்திறனை பொறுத்தவரையில், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 29.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 3.3 kW ஏசி சார்ஜரும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஞ்ச்?

இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 320 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. DC சார்ஜரை பயன்படுத்தினால், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் 57 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும். ஆனால் ஹோம் சார்ஜரை பயன்படுத்தினால், பேட்டரி 10 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை நிரம்புவதற்கு 10.5 மணி நேரம் ஆகும்.

அதே நேரத்தில் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 57 ஹெச்பி பவர் மற்றும் 143 என்எம் டார்க் ஆகும். பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதற்கு இந்த எலெக்ட்ரிக் கார் 6.8 வினாடிகளை எடுத்து கொள்ளும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 107 கிலோ மீட்டர்கள் ஆகும்.

வசதிகள்?

லைவ் மற்றும் ஃபீல் என சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கும். வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகளுடன் 10.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை, ஏர்பேக்குகள், ஏபிஎஸ் மற்றும் இபிடி என சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) மற்றும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) ஆகிய மாடல்களுடன், சிட்ரோன் இசி3 போட்டியிடும். இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 8-10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

Most Read Articles

English summary
Citroen ec3 electric car bookings open all details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X