டாடாவை அட்டாக் பண்ணும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ தூரம் போக முடியுமா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று சிட்ரோன் இசி3 (Citroen eC3). சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் மீது போர்த்தப்பட்டிருந்த திரைகள் இறுதியாக விலக்கப்பட்டுள்ளன. ஆம், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். தற்போது பொது பார்வைக்கு மட்டும் கொண்டு வரப்பட்டுள்ள சூழலில், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் விலைகள் இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் இசி3 எலெக்ட்ரிக் காரை ஏற்றுமதி செய்யவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டாடாவை அட்டாக் பண்ணும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ தூரம் போக முடியுமா!

புக்கிங் எப்போ?

சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் வரும் ஜனவரி 22ம் தேதி தொடங்கவுள்ளது. அதை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து, சிட்ரோன் ஷோரூம்களில் இசி3 எலெக்ட்ரிக் கார் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஆகிய 2 அம்சங்களிலும் ஏற்கனவே விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 காரை போலவேதான், சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரும் கிட்டத்தட்ட உள்ளது.

எனினும் எலெக்ட்ரிக் கார் என்பதால், டிசைனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கின்றன. முன் பக்க ஃபெண்டரில் சார்ஜிங் போர்ட் வழங்கப்பட்டிருப்பது மற்றும் டெயில்பைப் இல்லாமல் இருப்பது ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக கூறலாம். அதேபோல் உட்புறத்திலும் ஒரு சில மாற்றங்களை நம்மால் காண முடிகிறது. அதே நேரத்தில் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 29.2 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 320 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது அராய் அமைப்பு சான்று வழங்கிய (Range) ஆகும்.

டாடாவை அட்டாக் பண்ணும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்! ஒரு முறை சார்ஜ் செய்தால் இவ்ளோ தூரம் போக முடியுமா!

டிரைவிங் மோட்கள்!

ஈக்கோ மற்றும் ஸ்டாண்டர்டு என சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரில், 2 டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 3.3 kW ஆன்போர்டு ஏசி சார்ஜர் உடன் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் வரவுள்ளது. அத்துடன் CCS2 ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கும் இது சப்போர்ட் ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரானது, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 6.8 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 107 கிலோ மீட்டர்கள் ஆகும்.

ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் இந்த காரின் பேட்டரியை சார்ஜ் செய்தால், வெறும் 57 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகி விடும். ஆனால் ஹோம் சார்ஜர் பயன்படுத்தினால், 10 சதவீதத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஏறுவதற்கு பேட்டரி 10.5 மணி நேரத்தை எடுத்து கொள்ளும். இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருடன் (Tata Tiago EV), சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் போட்டியிடும்.

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்களில் 24 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 315 கிலோ மீட்டர்கள் என அராய் அமைப்பு சான்று வழங்கியுள்ளது. சிட்ரோன் சி3 காரை போலவே, சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரும், லைவ் மற்றும் ஃபீல் என 2 வேரியண்ட்களில் கிடைக்கும். வசதிகளை பொறுத்தவரையில், 10.2 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 4 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கனெக்டட் கார் வசதியும் இருக்கா!

அத்துடன் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் காரின் ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளவும் முடியும். மேலும் கனெக்டட் கார் தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 35 வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். பாதுகாப்பை பொறுத்தவரையில், 2 ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களாலும், மிகவும் குறைவான விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுவதாலும், இசி3 எலெக்ட்ரிக் காரின் விற்பனை சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
Citroen ec3 electric car unveiled in india all you need to know
Story first published: Monday, January 16, 2023, 23:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X