புதுசா கார் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! நல்ல மைலேஜ் தரும் 3 சிஎன்ஜி கார்கள் அறிமுகமாக இருக்கு!

இந்தியாவில் சிஎன்ஜி வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அவை நல்ல மைலேஜை வழங்கும் திறன் கொண்டவை என்கிற காரணத்திற்காகவும், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருள்களைக் காட்டிலும் மலிவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கிற காரணத்திற்காகவும் இந்தியர்கள் மத்தியில் சிஎன்ஜி வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதன் காரணமாகவே வாகன உற்பத்தியாளர்கள் சிஎன்ஜி வாகனங்களை களமிறக்குவதில் தீவிரம் காண்பிக்கின்றனர். குறிப்பாக, இந்த விஷயத்தில் டாடா மற்றும் மாருதி ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையில் கடும் போட்டியே நிலவுகின்றது என கூறலாம். ஏற்கனவே மாருதி சுஸுகி நிறுவனம் பல வகையான சிஎன்ஜி கார் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில், மேலும் சில புதிய சிஎன்ஜி வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்க நிறுவனம் திட்டம் போட்டு இருக்கின்றது.

சிஎன்ஜி

இதன் அடிப்படையில் அடுத்ததாக நிறுவனம் பிரெஸ்ஸா சிஎன்ஜி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதேபோல் டாடா மோட்டார்ஸும் பெரிய பிளானைப் போட்டு இருக்கின்றது. நிறுவனம் அதன் பங்காக சில சிஎன்ஜி வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. நிறுவனம் தனது அல்ட்ராஸ் மற்றும் பஞ்ச் ஆகிய கார் மாடல்களின் சிஎன்ஜி வெர்ஷனை இந்தியாவிற்கான அடுத்த சிஎன்ஜி கார்களாக தயார் நிலையில் வைத்திருக்கின்றது. இந்த மூன்று கார்களமும் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 20க்கும் அதிகமான கிமீ மைலேஜை வழங்கும் என கூறப்டுகின்றது. இதுபோன்ற சுவாரஷ்யமான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி (Maruti Brezza CNG)

மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் பிரெஸ்ஸா-வும் ஒன்று. நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களில் இதுவும் ஒன்று. இதன் காரணத்தினாலேயே விற்பனையில் இந்த கார் சூடுபிடித்துக் காணப்படுகின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் வகையிலேயே நிறுவனம் அதன் சிஎன்ஜி வெர்சன் பிரெஸ்ஸாவை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதன் வருகை இன்னும் ஒரு சில மாதங்கள் அல்லது வாரத்திற்குள் அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிஎன்ஜி

எர்டிகா சிஎன்ஜியில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் பை-ஃப்யூவல் மோட்டாரே இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 88 பிஎஸ் பவரையும், 121.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் பிரெஸ்ஸா சிஎன்ஜியில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, வழக்கமான பிரெஸ்ஸாவில் கிடைத்துக் கொண்டிருக்கும் அதே பிரீமியம் அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் இந்த சிஎன்ஜி தேர்விலும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா அல்ட்ராஸ் சிஎன்ஜி (Tata Altroz CNG)

சமீபத்தில் இந்தியாவில் 2023 ஆட்டோ எக்ஸ்போ தொடங்கியது. இந்த ஆட்டோ எக்ஸ்போ வாயிலாகவே டாடா மோட்டர்ஸ் இந்த சிஎன்ஜி காரை வெளியீடு செய்தது. பல மாத காலமாக இந்த காரை நிறுவனம் சோதனைக்கு உட்படுத்தி வந்த நிலையில், அதிரடியாக அல்ட்ராஸ் சிஎன்ஜி காரை வெளியீடு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தது. மேலும், இந்த சிஎன்ஜி காரில் வேறு எந்த சிஎன்ஜி காரிலும் வழங்கப்படாத வகையில் ட்வின் சிலிண்டர்களை வழங்கி அனைவைரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தது.

சிஎன்ஜி

அல்ட்ராஸ் ஐ-சிஎன்ஜி எனும் பெயரிலேயே இந்த காரை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. 1.2 லிட்டர் ரெவட்ரோன் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 77 பிஎச்பி பவரையும், 97 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த காரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி அறிவிக்கப்படவில்லை. வெகு விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது பிரீமியம் தர சிஎன்ஜி கார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா பஞ்ச் சிஎன்ஜி (Tata Punch CNG)

டாடா மோட்டார்ஸின் மலிவு விலை கார் மாடல்களில் பஞ்ச்-ம் ஒன்று. இந்த காரின் சிஎன்ஜி வெர்ஷனையே நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக சூடான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் இந்த கார் மாடலையும் சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே முதல் முறையாக காட்சிப்படுத்தியது. இந்த வாகனத்தை ஃபீச்சர் ரிச் சிஎன்ஜி காராக டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

டாடா பஞ்ச் சிஎன்ஜி காரிலும் இரு சிலிண்டர்களே வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு சிலிண்டரிலும் 30 லிட்டர் வரை சிஎன்ஜியை சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. பூட் பகுதியில் இரு சிலிண்டர்களும் நிலை நிறுத்தப்பட்டிருப்பதால் அதன் ஸ்பேஸ் பலமடங்கு குறைந்திருக்கின்றது. இதன் விளைவாக காருக்கான ஸ்பேர் வீல் காரின் அடிப் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டு உள்ளது. டாடாவின் இந்த சிஎன்ஜி கார் ஐ-சிஎன்ஜி எனும் பெயரில் விற்பனைக்கு வர இருக்கின்றது.

Most Read Articles
English summary
Cng cars soon to launch in india
Story first published: Thursday, January 19, 2023, 7:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X