முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய எம்ஜி... ஒன்னில்ல, ரெண்டில்ல எக்கசக்க மாடல்களை வெளியீடு செஞ்சிருக்கு!

உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சிகளில் 2023 ஆட்டோ எக்ஸ்போவும் ஒன்று. இந்த திருவிழாவே தற்போது இந்தியாவில் கோலகலமாகத் தொடங்கி உள்ளது. இன்றே முதல் நாளாகும். இந்த வாகன கண்காட்சியில் பன் நாட்டு நிறுவனங்கள் பங்கேற்று தங்களின் வாகனங்களைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், பிரபல எம்ஜி நிறுவனமும் இதில் தனது பங்களிப்பை வழங்கி சில கார் மாடல்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

ஃபேஸ்லிஃப்ட் ஹெக்டர் (Facelift Hector), இஆர்எக்ஸ் 5 (eRX5), எம்ஜி 6 (MG6), மைஃபா 9 (MIFA 9), மார்வல் ஆர் (Marvel R), எம்ஜி 5 (MG5), எம்ஜி4 மற்றும் எம்ஜி இஎச்எஸ் பிளக்-இன் ஹபிரிட் கார் உள்ளிட்ட கார் மாடல்களையே நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இவற்றில் ஃபேஸ்லிஃப்ட் ஹெக்டர் போன்ற ஒரு சில கார் மாடல்களை தவிர நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கும் பெரும்பாலான கார் மாடல்கள் இந்த உலகத்திற்கு முற்றிலும் புதியவை ஆகும்.

எம்ஜி

இஆர்எக்ஸ் 5

மிகவும் அட்டகாசமான காராக எம்ஜி நிறுவனம் இஆர்எக்ஸ்5 காரை உருவாக்கி இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். இதில், அதி நவீன தொழில்நுட்ப வசதிகளை எம்ஜி நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. ஹை டெக் டிரைவர் அசிஸ்டன்ஸ் ஃபீச்சர், சொகுசான கேபின், போல்டான வெளிப்புற தோற்றம், அதிக திறனை வெளியேற்றக் கூடிய மோட்டார் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

எம்ஜி6

ஸ்போர்ட்டி லுக்கில் இந்த காரை எம்ஜி உருவாக்கி இருக்கின்றது. இந்த காரிலும் உயர் தொழில்நுட்பங்கள் கொண்ட டிரைவர் அசிஸ்டன்ஸ் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் வெறும் ஆறே செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

எம்ஜி

மைஃபா 9

வேற லெவல் லுக்கில் இந்த காரை எம்ஜி வடிவமைத்திருக்கின்றது. குறிப்பாக காரின் உட்பகுதி சொகுசு கப்பலுக்கு இணையானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் தொடங்கி காரின் உட்பக்க லுக் வரை அனைத்துமே கண் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிக சொகுசான பயணத்தை விரும்புபவர்களை மையப்படுத்தி இந்த கார் வடிவமைக்கப்பட்டு இருப்பதால், இதன் கேபின் பகுதி அதிக இட வசதிக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இது ஃப்யூர் எலெக்ட்ரிக் காராகும். இது ஓர் முழு சார்ஜில் 500 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இது ஓர் முழு அளவு எம்பிவி ரக வாகனமாகும். உலகிலேயே எலெக்ட்ரிக் வெர்ஷனில் வடிவமைக்கப்பட்டிருக்கும் ப்யூர் எலெக்ட்ரிக் கார் இதுவே ஆகும்.

மார்வல் ஆர்

இந்த காரை அதி திறனை வெளியேற்றக் கூடிய காராக எம்ஜி வடிவமைத்து இருக்கின்றது. மார்வல் வெறும் 4 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது. இதுவும் ஓர் எலெக்ட்ரிக் கார் மாடலே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆல் வீல் டிரைவ் அம்சம் கொண்டதாகவும் இதனை எம்ஜி வடிவமைத்து இருக்கின்றது. மேலும், சொகுசு வசதிகள் நிறைந்த காராகவும் இதனை எம்ஜி வடிவமைத்துள்ளது.

எம்ஜி

எம்ஜி 5

முன்னதாக பார்த்த எலெக்ட்ரிக் கார் மாடல்களை போலவே இந்த காரையும் அதிக தொழில்நுட்ப வசதிக் கொண்டதாக எம்ஜி உருவாக்கி இருக்கின்றது. அதிக இட வசதி, முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் திறன் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றம் ஆகியவற்றுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஓர் முழு சார்ஜில் 525 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எம்ஜி 4

எம்ஜி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் கார் மாடலை உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. மாடுலர் ஸ்கேளபில் பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மின்சார கார் ஓர் முழு சார்ஜில் 450 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை அதிக வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். குறிப்பாக, ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்பட்சத்தில் 39 நிமிடங்களிலேயே 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இத்தகைய சூப்பரான கார் மாடல்களையே எம்ஜி நிறுவனம் இப்போது வரை 2023 ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக வெளியீடு செய்திருக்கின்றது. இதுதவிர இன்னும் சில கார் மாடல்களையும் அது காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
English summary
Electric cars showcased by mg at the 2023 auto expo
Story first published: Wednesday, January 11, 2023, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X