மாஸ் காட்டிய கொங்கு நாட்டு மக்கள்! தமிழ் நாடே இப்ப இவங்கள தான் வாய பொளந்து பாத்துட்டு இருக்குது!

எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் கோவை மாவட்டத்தில் ஏராளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய தொழிற்நுட்பங்களை கோவை மக்கள் விரைவாக ஏற்றுக்கொள்கின்றனர் என்பது இதன் மூலம் தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை தற்போது மிகப்பெரிய அளவில் அதிகமாகி வருகிறது. குறிப்பாக 2022ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்கள் பலர் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு பதிவான எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

மாஸ் காட்டிய கொங்கு நாட்டு மக்கள்! தமிழ் நாடே இப்ப இவங்கள தான் வாய பொளந்து பாத்துட்டு இருக்குது!

அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 7 ஆர்டிஓ அலுவலகங்கள் இருக்கிறது. கோவை நகருக்குள் 4 அலுவலகங்கள் அடுத்தாக பொள்ளாச்சி, சூலூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒன்று என மொத்தம் 7 நகரங்கள் இருக்கிறது. இங்குக் கடந்த 2022ம் ஆண்டு பதிவான எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகன விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது. எலெக்ட்ரிக் லைட் மோட்டார் வாகன பிரிவில் 138 சதவீத வளர்ச்சியும் இரு சக்கர வாகனப் பதிவில் 250 சதவீத வளர்ச்சியும் அடைந்துள்ளது. டூவீலரில் கடந்த 2021ம் ஆண்டு வெறும் 1336 வாகனங்கள் தான் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் 2022ம் ஆண்டு மொத்தம் 4683 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தகவல்கள் எல்லாம் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை தான். இந்தியாவில் 25 கி.மீ வேகத்திற்கும் குறைவான வேகத்தில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஆர்டிஓ பதிவு அவசியம் இல்லை. அதையும் கணக்கிட்டால் அதிகமான வாகனங்கள் கோவைதான் விற்பனையாகியிருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஆர்டிஓ அலுவலகவாரியா விற்பனை விபரத்தில் 2022ம் ஆண்டு கோவை மத்தி ஆர்டிஓ அலுவலகம் தான் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களைப் பதிவு செய்துள்ளது மொத்தம் 1405 வாகனங்கள் பதிவாகியுள்ளது. அடுத்ததாகக் கோவை வடக்கு ஆர்டி ஓவில் 716 வாகனங்களும், கோவை தெற்கு ஆர்டிஓவில் 685 வாகனங்களும், கோவை மேற்கு ஆர்டிஓவில் 698 வாகனங்களும் பதிவாகியுள்ளன. இதெல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களில் பதிவு தான்.

தமிழகத்தில் படிப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மாநில அரசு 2025ம் ஆண்டு வரை எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரிச்சலுகையை அறிவித்துள்ளது.இதனால் இந்தாண்டு அதை விட எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டூவீலர், கார் தவிர 3 வீலரில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் கோவையில் அதிகமாகியுள்ளது.

3 வீலர்கள் பெரும்பாலும் சரக்குகளை உள்ளூருக்குள் எடுத்துச் செல்லும் வாகனம் என்பதால் ரேஞ்ச் குறித்து பெரிய கவலை எதுவுமில்லை. இதனால் பலர் இந்த ரக வானகங்களை வாங்கத் துவங்கவிட்டனர். ஆனால் அரசு எலெக்ட்ரிக் 3 வீலர்களை பொது போக்குவரத்திற்காக அனுமதிக்கவில்லை. இது நடந்தால் ஷேர் ஆட்டோ முதல் பல ஆட்டோக்கள் எலெக்ட்ரிக் மயமாகிவிடும் எனத் தெரிகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles

English summary
Electric vehicle sales registered big growth in the Coimbatore district
Story first published: Thursday, January 19, 2023, 13:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X