இந்த காருக்கான புக்கிங்கை கேன்சல் செய்தால் ரூ2லட்சம் பணம்! ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ள செம ஆஃபர்!

ஃபோர்டு நிறுவனம் தங்கள் புரோங்கோ காரை புக்கிங் செய்தவர்கள் அந்த புக்கிங்கை கேன்சல் செய்தால் ரூ2 லட்சம் பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. உரிய நேரத்தில் காரை தயாரித்து டெலிவரி முடியவில்லை என்பதால் அந்நிறுவனம் இப்படியான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவை காலி செய்திருந்தாலும், அமெரிக்காவில் அந்நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல மவுசு இருந்து கொண்டே தான் இருக்கிறது. பலர் அந்நிறுவனத்தின் கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். சமீபகாலமாக உலகம் முழுவதும் எஸ்யூவி ரக கார்களை மக்கள் அதிகம் விரும்பி வரும் நிலையில் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவனம் புரோங்கோ என்ற ஆஃப் ரோடு எஸ்யூவி ரக காரை அறிமுகப்படுத்தியது.

இந்த காருக்கான புக்கிங்கை கேன்சல் செய்தால் ரூ2லட்சம் பணம்! ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ள செம ஆஃபர்!

இந்த கார் அறிமுகப்படுத்தும்போதோ மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் இந்த காருக்கான புக்கிங்கை துவங்கி, தயாரிப்பையும் துவங்கியது. இந்த கார் தயாராகத் தயாராக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கார் ரோட்டிற்கு வந்த பிறகு இந்த காரை பார்த்த பலரும் உடனடியாக இந்த காரை வாங்கப் பெரிய அளவில் ஆர்வம் காட்டத் துவங்கிவிட்டனர்.

இதனால் நாளுக்கு நாள் இந்த புரோங்கோ காருக்கான புக்கிங் குவிந்தது. தினமும் தயாரிப்பு அளவை தாண்டி புக்கிங் அளவு அதிகரித்துக்கொண்டே சென்றது. புக்கிங் வரும் அளவிற்கு கார் தயாரிப்பு நிறுவனங்களால் காரை தயாரித்து விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் எப்படியாவது புக்கிங்கை கட்டுப்படுத்த வேண்டும் என யோசித்தனர்.

இதற்காக அந்நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்தனர். இந்த ஃபோர்டு புரோங்கோ காரை புக்கிங் செய்தவர்கள் அந்த புக்கிங்கை கேன்சல் செய்தால் அவர்களுக்கு 2500 அமெரிக்க டாலர் பணத்தை வழங்க ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ2 லட்சமாகும். ஆனால் இந்த பணத்தை புக்கிங் கேன்சல் செய்த அனைவரும் வாங்க முடியாது. இதற்கு சில விதிமுறைகள் இருக்கிறது. இதன்படி கேன்சல் செய்தால் மட்டுமே இந்த பணத்தைப் பெற முடியும்.

அதன்படி ஃபோர்டு புரோங்கோ காரை புக்கிங் செய்தவர்கள். அந்த காரை கேன்சல் செய்த கையோடு ஃபோர்டு நிறுவனத்தின் மற்றொரு காரை வாங்கினால் மட்டுமே இந்த பணம் வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த காரின் புக்கிங்கை கேன்சல் செய்பவர்களுக்கு ஃபோர்டு மேவரிக், ஃபோர்டு மஸ்டாக் மற்றும் எஃப்-150 ட்ரீமோர் ஆகிய கார்களை புக்கிங் செய்யலாம். எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் பலர் இந்த நல்ல ஆஃபரை பயன்படுத்தலாமா வேண்டாமா என யோசித்து வருகின்றனர். ஃபோர்டு புரோங்கோ சிறப்பான காராக இருந்தாலும் ரூ2 லட்சம் பணம் கிடைக்கும் என்பதால் இந்த ஆஃபரை பயன்படுத்தச் சிலர் முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்த காரை புக் செய்த பலர் வேறு காரை வாங்க வேண்டும் என்றால் முதலிலேயே அந்த காரை புக்கிங் செய்திருப்போம். ஆனால் புரோங்கோ காரை தான் வாங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம் அதனால் எவ்வளவு காலம் காத்திருந்தாலும் அந்த காரை தான் வாங்குவோம் எனப் பலர் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் இப்படியான ஆஃபர் இதுவரை எந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் வழங்கியதில்லை. இவ்வளவு பெரிய ஆஃபர் இந்தியாவில் அறிவிக்கப்பட்டால் அது ஜாக்பாட் தான் பல பலர் இந்த ஆஃபரை பயன்படுத்திக்கொள்வார்கள். இப்படிப் பட்ட ஆஃபர் உங்களுக்கு வழங்கப்பட்டால் அதை எடுத்துக்கொள்வீர்களா அல்லது நீங்கள் விரும்பிய கார் வேண்டும் எனக் காத்திருப்பீர்களா? உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஃபோர்டு #ford
English summary
Ford offered 2 lakh cash for canceling bronco car booking
Story first published: Tuesday, January 24, 2023, 13:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X