சீன நிறுவனங்களையே தோற்கடிச்சிருச்சு நம்ம டொயோட்டா... மாருதியின் இந்த காரையும் காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டாங்க!

டொயோட்டா நிறுவனம், மாருதி சுஸுகி சமீபத்தில் இந்தியாவில் வெளியீடு செய்த ஃப்ரான்க்ஸ் காரை ரீ-பேட்ஜ் செய்து புதிய பெயரில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா ஏ15 எனும் காரை இந்தியாவிற்காக தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏ15 என்பது வெறும் குறியீட்டு பெயர் மட்டுமே ஆகும். விற்பனைக்குக் கொண்டு வரப்படும்போது சந்தைக்கு ஏற்ற பெயருடன் அது விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த ஏ15 எனும் கார் மாடலை டொயோட்டா இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டா

ஃப்ரான்க்ஸைதான் டொயோட்டா காப்பியடிக்க போறாங்க

இந்த நிலையிலேயே டொயோட்டாவின் இந்த புதிய கார் குறித்து ஓர் கூடுதல் தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. சமீபத்தில் ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் புதிய ஃப்ரோன்க்ஸ் எனும் கார் மாடலை வெளியீடு செய்தது. இந்த காரை வெகு விரைவில் மாருதி விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. ஏற்கனவே இந்த காருக்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆச்சரியத்திற்கான காரணம்

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட மறு நொடியே, புதிய பெயர் கொண்ட காருக்கான புக்கிங்குகள் துவங்கின. இந்த காரையே தழுவிய வாகனத்தையே டொயோட்டா ஏ15 எனும் பெயரில் உருவாக்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த தகவலே பலரின் ஆச்சரியத்திற்கும், வியப்பிற்கும் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. ஏற்கனவே புதிய ஃப்ரான்க்ஸை, மாருதி அதன் பிரபல பிரெஸ்ஸா கார் மாடலைபோல் தயாரித்து இருப்பதாக விமர்சனங்கள் எழும்பிக் கொண்டு இருக்கின்றன.

டொயோட்டா

இந்த மாதிரியான சூழலிலேயே மாருதியின் இந்த புதிய காரை டொயோட்டா ரீபேட்ஜ் செய்து களமிறக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. என்னதான் ஃப்ரான்க்ஸ் மற்றும் பிரெஸ்ஸா பார்க்க ஒரே மாதிரியானதாக இருந்தாலும், இரண்டும் வெவ்வேறு வசதிகளைக் கொண்டதாகவே உருவாக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, பிரெஸ்ஸாவை எஸ்யூவி காரை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாகவும், ஃப்ரான்க்ஸ் காரை கூபே ரக காரை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு உருவாக்கி இருக்கின்றது.

பலேனோவின் க்ராஸோவர்

மேலும், இந்த புதிய ஃப்ரான்க்ஸ் என்பது பலேனோ கார் மாடலின் க்ராஸோவர் ஆகும். இதை(பலேனோவை) தழுவியே ஃப்ரான்க்ஸை மாருதி உருவாக்கி இருக்கின்றது. இத்தகைய ஓர் காராகவே டொயோட்டாவின் புதிய ஏ15 உருவாகிக் கொண்டு உள்ளது. அடிப்படையில் ஏ15 மாருதியின் ஃப்ரான்க்ஸ் காரைப் போலவே இருக்கும். உதாரணமாக காரின் உட்பக்கம் இட வசதி மற்றும் டைனமிக்ஸ் அம்சம் ஆகியவை டொயோட்டா ஏ15 போலவே இருக்கும்.

டொயோட்டா

யாரிஸ் கிராஸோவரை இதில் பார்க்கலாம்

அதேவேளையில், சில குறிப்பிட்ட வித்தியாசங்களைத் தாங்கிய வாகனமாகவும் டொயோட்டாவின் ஏ15 இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். இது ஓர் சப்-4 மீட்டர் ரக கார் ஆகும். தனது யாரிஸ் கிராஸ் காரை போல் இந்த காரை நிறுவனம் உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது. சர்வதேச சந்தையில் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கும் கார் மாடலில் யாரிஸ் கிராஸ் கார் மாடலும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

கொஞ்சம் காஸ்ட்லியாதான் வரபோகுது

இத்தகைய காராக ஏ15 உருவாகிக் கொண்டிருப்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றது. பிரீமியம் வசதியிலும், உருவத்திலும் கிளான்ஸாவை மிஞ்சும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு வருவதால், ஏ15 கிளான்ஸாவிற்கும் மேல் இடத்தில் அமர்த்தப்படும். எனவே விலையிலும் சற்று காஸ்ட்லியாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. நிறுவனம் சமீபத்தில் அர்பன் க்ரூஸர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரை வெளியேற்றியது. இந்த காருக்கு ரீ-பிளேஸாக இதன் வருகை அமையும்.

என்ன மாதிரியான மோட்டாரை எதிர்பார்க்கலாம்

1.0 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் என இரு விதமான பெட்ரோல் தேர்வுகளில் இந்த காரை எதிர்பார்க்கலாம். இத்துடன், மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் மற்றும் ஸ்ட்ராங் ஹைபிரிட் அம்சங்களையும் இந்த காரில் எதிர்பார்க்கலாம். டொயோட்டா நிறுவனத்தின் ஹைபிரிட் வசதிக் கொண்ட கார் மாடல்களுக்கு நாட்டில் நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. இந்த வசதிகளைத் தனது புதிய ஏ15 காரில் டொயோட்டா வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Fronx based toyota a15 coupe suv soon for india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X