நல்ல சம்பவமா இருக்கே... ஹோண்டாவுக்குகூட எங்கேயோ மச்சம் இருக்குங்க..

ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பு ( புதிய கார்)-கள் 2021 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2022 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சூப்பரான சம்பவம் பற்றிய முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சென்ற ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் புதிய வாகனங்களின் விற்பனைக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. உதாரணமாக இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, 2021 டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் 2022 டிசம்பரில் 9 சதவீதம் விற்பனை இழப்பைச் சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல் நாட்டின் ஜாம்பவான் வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸும் கணிசமான அளவு விற்பனைச் சரிவை சந்தித்து உள்ளது.

ஹோண்டா

2022 டிசம்பரில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 40,407 யூனிட்டுகளாக மட்டுமே இருக்கின்றது. அதேவேளையில், இதே ஆண்டு நவம்பரில் நிறுவனத்தின் தயாரிப்புகள் 46,425 யூனிட்டுகள் வரை விற்பனையாகின. டிசம்பரைக் காட்டிலும் 14 சதவீதம் அதிகம் ஆகும். இதன் வாயிலாக நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை முந்தைய நவம்பரைக் காட்டிலும் கணிசமான அளவு சரிவைச் சந்தித்திருப்பது தெளிவாக தெரிகின்றது. அதேநேரத்தில், 2021 டிசம்பரைக் காட்டிலும் 2022 டிசம்பர் மாத விற்பனை அதிக எண்ணிக்கை ஆகும்.

35,299 யூனிட்டுகள் மட்டுமே அப்போது விற்பனையாகின. இதைவிட 2022 டிசம்பரில் 13.44 சதவீதம் டாடா கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன. இதுபோன்ற ஏற்ற இறக்கமான சூழலையே 2022 டிசம்பரில் இந்திய வாகனம் உலகம் சந்தித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டாவும் 2022 டிசம்பரில் கணிசமான அளவு விற்பனை சரிவைச் சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

7,062 யூனிட்டுகள் ஹோண்டா கார்களே உள்நாட்டு சந்தையில் விற்பனையாகி இருக்கின்றன. இதேபோல், வெளிநாடுகளுக்கு 1,388 யூனிட்டுகள் ஹோண்டா கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இதே ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் கடந்த 2021 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 9,138 விற்பனையாகி இருந்தன. இத நடந்து முடிந்த 2022 டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் அதிக விற்பனை எண்ணிக்கை ஆகும். இதன் வாயிலாக 2022 டிசம்பரில் உள் நாட்டில் 911 யூனிட்டுகள் குறைவாக விற்பனையாகி இருப்பது தெரிகின்றது.

ஆகையால், 2022இன் டிசம்பரில் விற்பனை சரிவைச் சந்தித்த முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஹோண்டாவும் மாறி இருக்கின்றது. அதேவேளையில் ஹோண்டா நிறுவனம் இந்த விற்பனை வீழ்ச்சியைக் கண்டு துவண்டு போகாத அளவிற்கு ஓர் சிறப்பான சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. நிறுவனத்தின் ஆண்டு-டூ-ஆண்டு விற்பனை கணிசமான அளவு உயர்வைச் சந்தித்திருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 2022 ஆம் ஆண்டில் 95,022 யூனிட்டுகள் ஹோண்டா கார்கள் விற்பனையாகி உள்ளன.

இது 2021 காலண்டர் ஆண்டைக் காட்டிலும் 7 சதவீதம் அதிகம் விற்பனை ஆகும். 89,152 யூனிட்டுகள் மட்டுமே 2021 ஆம் ஆண்டு முழுக்க ஹோண்டா நிறுவனம் விற்பனைச் செய்திருந்தது. இந்த ஆண்டில் உள் நாட்டு சந்தையில் கிடைத்த அமோக வரவேற்பினாலேயே இந்த 7 சதவீத விலை உயர்வை ஹோண்டாவால் பெற முடிந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஹோண்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்த ஹைபிரிட் வசதிக் கொண்ட சிட்டி காரும் இதற்கு ஓர் மிக முக்கியமான காரணமாக உள்ளது. இந்த லிட்டர் ஒன்றிற்கு 26.5 கிமீ வரை மைலேஜ் தரும். இந்த சூப்பரான மைலேஜ் திறனுக்கு காரில் வழங்கப்பட்டிருக்கும் ஹைபிரிட் தொழில்நுட்பமே காரணமாக உள்ளது. ஹைபிரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது அதிகபட்சமாக 125 பிஎச்பியையும், 253 என்எம் டார்க் திறன்களையும் வெளியேற்றும். எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பெட்ரோல் மோட்டார் இரண்டும் இணைந்து வெளியேற்றும் திறன் இதுவாகும். இதுமட்டுமின்றி, சிஎம்பிஎஸ் எனப்படும் கொல்லிசன் மிடிகேஷன் பிரேக்கிங் சிஸ்டம் (Collision Mitigation Braking System), அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல், ரோடு டிபார்ச்சர் மிடிகேஷன், லேன் கீப்பிங் அசிஸ்ட் சிஸ்டம் மற்றும் தானாகவே ஹை பீமிற்கு மாறும் ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களும் புதிய சிட்டி இ:எச்இவி ஹைபிரிட் காரில் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுதவிர 37 வகையான ஹோண்டா கன்னெக்ட் அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய அம்சங்களை இந்த கார் கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு கணிசமான அளவு சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாக இந்த புதிய ஆண்டில் சில புதுமுக கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வர நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், அதிகம் மைலேஜ் தரும் ஓர் மாடலை அது அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

Most Read Articles
மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda india register sales growth
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X