இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் தவிக்கும் கியா-ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்.. வேணும்னே இழுத்தடிக்குறாங்க!

கியா மற்றும் ஹூண்டாய் கார் உரிமையாளர்கள் சிலர் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எதனால் இந்த அவலநிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது?, எங்கு இப்படியான சூழல் நிலவுகின்றது?, இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மட்டும் இல்லைங்க உலகளவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், அமெரிக்காவில் இந்நிறுவனத்தின் வாகனங்களுக்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டு உள்ளது. மக்கள் மத்தியில் மட்டுமே இல்லைங்க திருடர்களுக்கும் கியா - ஹூண்டாய் நிறுவனங்களின் தயாரிப்புகள் மிகவும் பிடித்தமானவையாக உள்ளன. இதன் விளைவாகவே இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்புகல் அதிகளவில் திருடப்படும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

இன்சூரன்ஸ்

தேடிப்பிடிச்சு திருடுறாங்க

அதிலும் குறிப்பிட்ட சில மாடல்களை வாகன திருடர்கள் தேடிப் பிடித்து திருடிக் கொண்டிருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுவே இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கிளைமிங்கை நிராகரிக்க காரணமாக உள்ளது. அதிகளவில் கியா, ஹூண்டாய் கார் திருடப்படுவதால் அதிகளவில் கிளைமிங்கும் குவிந்த வண்ணம் இருப்பதாக காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக பெரும் இழப்பு தங்களுக்கு ஏற்படுவதாகக் கூறி இன்சூரன்ஸ் கிளைமிங் விண்ணப்பத்தை நிராகரிக்கத் தொடங்கி உள்ளன.

பாதுகாப்பு குறைபாடே காரணம்

அதிகளவில் கியா மற்றும் ஹூண்டாய் கார்கள் திருடப்படுவதற்காக பல பாதுகாப்பு குறைபாடுகள் முக்கிய காரணமாக முன் வைக்கப்படுகின்றது. ஆனால் மிக முக்கியமானதாக தொழில்நுட்ப குறைபாடே கூறப்படுகின்றது. இதுவே, திருடர்களால் எளிதில் இரு நிறுவனங்களின் கார்களையும் களவு செய்ய வழி வகுக்கின்றது. இந்த காரணத்தை முன் வைத்தே காப்பீட்டு நிறுவனங்கள் காரை இழந்து நிற்கும் காப்பீட்டுதாரர்களுக்கு இழப்பீட்டை வழங்காமல், நிராகரிப்புச் செய்துக் கொண்டிருக்கின்றது.

காவல்துறையினருக்கு பெரும் சவாலா இருக்கு

2011 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கார்கள் மிகவும் சுலபமாகத் திருடக் கூடியவையாக இருப்பதாக இணையத்தில் கடந்த ஆண்டில் ஓர் பதிவு வெளியானது. இந்த பதிவு வைரலானதை அடுத்து திருட்டும் அதிகமாகி உள்ளது. இன்சூரன்ஸ் கிளைம் நிராகரிப்பும் அதிகமாகி உள்ளது. இது அமெரிக்க காவல்துறையினருக்கு பெரும் சாவாலாக மாறி இருக்கின்றது. இதனைத் தவிர்க்கும் விதமாக பல்வேறு முயற்சிகளில் அது ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக, இரு நிறுவன கார் பயன்பாட்டாளர்கள் மற்றும் ஹூண்டாய் - கியா வாகன உற்பத்தியாளர்களுக்கும் சமீபத்தில் அழைப்பு விடுத்தது.

இந்த ரெண்டு பகுதியிலதான் திருட்டு அதிகம்

அமெரிக்காவின் கொலரடோ மற்றும் மிஸோரி ஆகிய மாகாணங்களிலேயே ஹூண்டாய் மற்றும் கியா கார்கள் அதிகளவில் திருடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்த பகுதி வாசிகளே மிகக் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். பாதிப்பை மிகக் கடுமையானதாக மாற்றும் விதமாக இன்சூரன்ஸ் நிறுவனங்களும் இழப்பை வழங்காமல் இழுத்தடிப்புச் செய்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இன்னும் சில நிறுவனங்கள் காப்பீட்டு திட்டத்தை வழங்குவதையே நிறுத்திவிட்டதாக கூறப்படுகின்றது.

காப்பீட்டு பிரீமியத்தை உயர்த்திட்டாங்க

ஒரு சில வாகன காப்பீட்டாளர்கள் கியா மற்றும் ஹூண்டாய் கார்களுக்கு அதிக பிரீமியம் தொகையை வசூல் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பிட்ட சில கார் மாடல்கள் மட்டுமே அதிகளவில் திருடப்பட்டாலும், இன்சூரன்ஸ் கம்பெனிகள் இரு நிறுவனங்களின் அனைத்து தயாரிப்புகளுக்கும் காப்பீட்டு பிரீமியம் திட்டத்திற்கான கட்டணத்தை உயர்த்தத் தொடங்கி உள்ளன. இதன் விளைவாக பெரியளவில் களவுபோகாத கியா, ஹூண்டாய் கார் பயன்பாட்டாளர்களும் பாதிப்படையத் தொடங்கி இருக்கின்றனர்.

இந்தியாவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு மிக மிக அதிகம். குறிப்பாக, நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளர்கள் பட்டியலில் ஹூண்டாய் இரண்டாவது அல்லது மூன்றாவது ஆகிய இடங்களைப் பிடிக்கும் அளவிற்கு மிக சிறப்பான டிமாண்டைப் பெற்று வருகின்றது. அதேவேளையில், இந்தியாவில் உள்ள கியா, ஹூண்டாய் கார் பயன்பாட்டாளர்கள் இதை நினைத்து கவலைப்பட தேவையில்லை. இந்தியாவில் இதுவரை இப்படி ஒரு விநோத பிரச்னை அரங்கேறியதே இல்லை. ஆகையால், இந்திய ஹூண்டாய், கியா கார் பயன்பாட்டாளர்கள் இதை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.

Most Read Articles
English summary
Hyundai and kia car owners insurance claim rejection
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X