இந்தியாவே தவம் கிடந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்! போட்டி மாடலை விட விலை இவ்ளோ கம்மியா! மேஜிக் செய்த ஹூண்டாய்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). ஹூண்டாய் கோனா (Hyundai Kona) எலெக்ட்ரிக் காருக்கு அடுத்தபடியாக, இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள 2வது எலெக்ட்ரிக் கார் இதுவாகும்.

இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாவான 2023 ஆட்டோ எக்ஸ்போ இன்று (ஜனவரி 11) தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில்தான், ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலையை (Price) அறிவித்தது. ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வந்து விட்டது. அத்துடன் இந்த எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை ஏற்கும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன.

இந்தியாவே தவம் கிடந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்! போட்டி மாடலை விட விலை இவ்ளோ கம்மியா! மேஜிக் செய்த ஹூண்டாய்!

கியா இவி6 எலெக்ட்ரிக் காருக்கு நெருக்கடி!

ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை எவ்வளவு? என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. அந்த கேள்விக்கும் இன்று நமக்கு பதில் கிடைத்து விட்டது. இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள கியா இவி 6 (Kia EV 6) எலெக்ட்ரிக் காருடன், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் வருகை, கியா இவி 6 எலெக்ட்ரிக் காருக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டைய கிளப்பும் வசதிகள்!

ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், இரண்டு 12.3 இன்ச் திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று, டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும், மற்றொன்று இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகவும் செயல்படும். இதுதவிர ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, அடாஸ் தொழில்நுட்பம் போன்ற முக்கியமான வசதிகளும், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கிராவிட்டி கோல்டு மேட், ஆப்டிக் ஒயிட் மற்றும் மிட்நைட் பிளாக் பேர்ல் என ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்தியாவே தவம் கிடந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்! போட்டி மாடலை விட விலை இவ்ளோ கம்மியா! மேஜிக் செய்த ஹூண்டாய்!

சூப்பரான ரேஞ்ச்!

ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 72.6 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரி, சூப்பர் ஃபாஸ்ட் 800V சார்ஜிங்கிற்கு சப்போர்ட் ஆகும். இதன் மூலம் பேட்டரியை வெறும் 18 நிமிடங்களில், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து விட முடியும்.

விலை இவ்ளோ கம்மியா!

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை (Price) வெறும் 44.95 லட்ச ரூபாய் மட்டும்தான். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். மிக முக்கிய போட்டியாளரான கியா இவி 6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை சுமார் 16 லட்ச ரூபாய் குறைவு! ஆனால் முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஹூண்டாய் நிறுவனம் இந்த விலையில் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்யவுள்ளது. அதன் பின்னர் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவே தவம் கிடந்த எலெக்ட்ரிக் கார் அறிமுகம்! போட்டி மாடலை விட விலை இவ்ளோ கம்மியா! மேஜிக் செய்த ஹூண்டாய்!

எப்படி சாத்தியம்?

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் கியா இவி 6 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 60.95 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 65.95 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் சுமார் 16 லட்ச ரூபாய் குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்த காரில் ஏராளமான வசதிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், ரேஞ்ச் சிறப்பாக உள்ளது. எனவே இது எப்படி சாத்தியம்? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் கியா இவி 6 எலெக்ட்ரிக் கார், இந்தியாவிற்கு முழுமையாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. எனவே வரிகளில் உள்ள வித்தியாசம் காரணமாக ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை மிகவும் குறைவாக உள்ளது. இந்தியாவில் அசெம்பிள் செய்வது என்ற முடிவை ஹூண்டாய் நிறுவனம் எடுத்த காரணத்தால்தான், ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு குறைவான விலையை நிர்ணயம் செய்ய முடிந்துள்ளது.

Most Read Articles
English summary
Hyundai ioniq 5 ev launched at auto expo 2023 price range all details here
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X