எமன் நேருக்கு நேரா வந்தாலும் உயிரை காப்பாத்தும்! 5 ஸ்டார் வாங்கி பிரம்மிக்க வைத்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்!

ஹூண்டாய் ஐயோனிக் 6 (Hyundai Ioniq 6), எலெக்ட்ரிக் காரை (Electric Car) யூரோ என்சிஏபி (Euro NCAP) அமைப்பு, வெகு சமீபத்தில் மோதல் சோதனைக்கு (Crash Test) உட்படுத்தியது. அந்த மோதல் சோதனையின் முடிவு தற்போது வெளியாகி, வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆம், ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. யூரோ என்சிஏபி அமைப்பு, தனது மோதல் சோதனை விதிமுறைகளை திருத்தி அமைத்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படிதான், ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரானது, செடான் (Sedan) ரகத்தை சேர்ந்தது ஆகும். ஹூண்டாய் நிறுவனம் தற்போதைய நிலையில், இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

எமன் நேருக்கு நேரா வந்தாலும் உயிரை காப்பாத்தும்! 5 ஸ்டார் வாங்கி பிரம்மிக்க வைத்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்!

3வது எலெக்ட்ரிக் கார்?

அவை ஹூண்டாய் கோனா (Hyundai Kona) மற்றும் ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5) ஆகியவை ஆகும். இதில், ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்தான் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து விட்டது. இதை தொடர்ந்து ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இவற்றுக்கு அடுத்தபடியாக ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரை, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது இந்திய சந்தைக்காக 3வது எலெக்ட்ரிக் காராக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) திருவிழாவில், ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரை காட்சிக்கு வைத்திருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எமன் நேருக்கு நேரா வந்தாலும் உயிரை காப்பாத்தும்! 5 ஸ்டார் வாங்கி பிரம்மிக்க வைத்த ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்!

பாதுகாப்பில் மாஸ் காட்டும் ஹூண்டாய் ஐயோனிக் 6!

இதற்கிடையே யூரோ என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் சோதனைகளில், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் கார் 97 சதவீதம் ஸ்கோர் செய்துள்ளது. அதே நேரத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 87 சதவீதத்தை இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரில், ஏராளமான பாதுகாப்பு வசதிகள் (Safety Features) வழங்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் ஐயோனிக் 5!

முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவில்தான் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விலை 44.95 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். அத்துடன் இது அறிமுக சலுகை விலை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும்.

விலை இவ்ளோ கம்மியா!

இந்திய சந்தையில் கியா இவி6 (Kia EV6) எலெக்ட்ரிக் கார்தான், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் முக்கியமான போட்டியாளர் ஆகும். ஆனால் கியா இவி6 எலெக்ட்ரிக் காருடன் ஒப்பிடும்போது, ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் விலை சுமார் 16 லட்ச ரூபாய் குறைவாகும். கியா இவி6 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது. இதுவே ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் குறைவான விலைக்கு முக்கியமான காரணம் ஆகும்.

ரேஞ்ச் பற்றிய கவலையே இல்ல!

ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், 72.6 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 631 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அராய் அமைப்பு சான்று வழங்கிய மைலேஜ் ஆகும். எனவே தொலை தூர பயணங்கள் என்றாலும், ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார், ரேஞ்ச் பற்றிய கவலையை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுத்தாது.

Most Read Articles
English summary
Hyundai ioniq 6 ev euro ncap safety rating 5 star
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X