சூரிய ஒளியில் சார்ஜ் செய்து கொள்ளும் கியா எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் வெளியீடு! இதுக்கு மேல வேற என்ன வேணும்!

தென் கொரிய நிறுவனமான கியா அதன் இவி9 எலெக்ட்ரிக் காரை இந்திய 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இந்த நிகழ்வுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆட்டோ எக்ஸ்போ இந்தியாவில் கோலாகளமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியில் வைத்து கியா மோட்டார்ஸ் தனது இவி9 கான்செப்ட் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். தற்போது விற்பனையில் இருக்கும் எந்தவொரு காரிலும் காணப்படாத அம்சங்கள் பல இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தகுந்தது. சோலார் பேனல் அம்சமே இதில் வழங்கப்பட்டுள்ளது.

கியா இவி9

சார்ஜிங் மையம் தேவை இல்ல

சார்ஜிங் மையத்தின் தேவையை இந்த அம்சத்தின் வாயிலாக தவிர்த்துக் கொள்ள முடியும். நல்ல சூரிய ஒளிப்படும் இடத்தில் இந்த காரை நிறுத்தினால் சார்ஜிங் மையத்தின் உதவி இன்றியே இந்த மின்சார கார் சார்ஜாகிவிடும். இத்தகைய சூப்பரான கான்செப்ட் மாடலையே கியா நிறுவனம் இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. கியா நிறுவனம் இந்த காரை வெளி உலகில் காட்சிப்படுத்துவது இது முதல் முறையல்ல. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லாஸ் ஏஞ்ஜல்ஸில் நடைபெற்ற மோட்டார் ஷோவிலேயே இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

இது ஒன்னும் முதல் தரிசனம் இல்ல

இதுவே கியா இவி9 இந்த உலகிற்கு தரிசனம் கொடுத்தது முதல் முறையாகும். இந்த நிலையிலேயே மீண்டும் இந்த கார் இந்தியா 2023 ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக இந்த உலகிற்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த செயல் இவி9 எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், இதுகுறித்த தகவலை நிறுவனம் இதுவரை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. நாம் எதிர்பார்த்ததை விட பெரிய உருவம் கொண்ட காராக இதனை கியா உருவாக்கி இருக்கின்றது.

கியா இவி9

கார் உருவாக்க அளவு

4,929 மிமீ நீளத்திலும், 2,055 மிமீ அகலத்திலும், 1,790 மிமீ உயரத்திலும் இந்த காரை கியா உருவாக்கி இருக்கின்றது. இதன் வீல் பேஸ் அளவு 3,100 மிமீ ஆகும். இந்த எலெக்ட்ரிக் காரை கியா நிறுவனம் எலெக்ட்ரிக் குளோபல் மாடுலர் பிளாட்பாரத்தில் வைத்து உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த காரை கியா நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக காரின் சூசைட் ரக கதவுகள் உள்ளன. அதாவது, ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் இருப்பதை போல கதவுகள் இந்த காரில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இத்துடன், காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக இசட் வடிவ ஹெட்லைட்டுகள் இவி9 காரின் முகப்பு பகுதியில் சேர்க்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து, பாக்ஸி ரக தோற்றம், ஷார்ப்பான கார்னர்கள், வெர்ட்டிக்கல் ஸ்டைலில் எல்இடி டெயில் லைட் மற்றும் பல்கியான பம்பர் உள்ளிட்டவை கியா இவி9 எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு உள்ளன.

கியா இவி9

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ஜ் திறன்

இந்த கார் ஓர் முழு சார்ஜில் 540 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் காரில் 77.4 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதுமட்டுமில்லைங்க, அதிக வேகத்தில் சார்ஜ் ஆகும் தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து, கூடுதல் சிறப்பாக மிருக தோலிருந்து உருவாக்கப்படாத சைவ ரக லெதர் காரின் இருக்கையில் கியா பயன்படுத்தி இருக்கின்றது. கியா நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக கேஏ4 எனும் கார் மாடலையும் அது காட்சிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது நிறுவனத்தின் 4 வது ஜென் கார்னிவல் கார் மாடல் ஆகும். இதையே நிறுவனம் இந்தியாவில் இன்றைய தின ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது.

Most Read Articles
English summary
Kia ev9 concept unveiled 2023 auto expo
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X