கியா கார்களை வாங்க எங்கிருந்துதான் இவ்ளோ கூட்டம் வருதுனு தெரியலயேப்பா!! இந்தியாவின் 3வது முன்னணி கார் பிராண்ட்

2019இல் செல்டோஸின் மூலம் இந்திய சந்தையில் நுழைந்த கியா நிறுவனம் மெல்ல மெல்ல இந்தியாவின் தவிர்க்க முடியாத கார் பிராண்ட்களுள் ஒன்றாக மாறி வருகிறது. இதற்கு கடந்த 2023 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கியா கார்களின் எண்ணிக்கை மிக சிறந்த உதாரணம் ஆகும். ஏனெனில் எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்தியாவில் கார்கள் விற்பனையில் கடந்த ஜனவரியில் புதிய உச்சத்தை கியா தொட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தமாக 28,634 கியா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2022 ஜனவரியில் விற்பனை செய்யப்பட்ட கியா கார்கள் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் இது 48.22% அதிகமாகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், அந்த மாதத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் கியா கார்களின் விற்பனை கிட்டத்தட்ட டபுள் மடங்கு அதிகரித்துள்ளது. ஏனெனில் 2022 ஜனவரியில் 19,319 கியா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் கியா கார்கள் விற்பனை

அதேபோல், முந்தைய டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 88.58% அதிக கியா கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. ஏனென்றால், கடந்த 2022ஆம் ஆண்டின் கடைசி டிசம்பர் மாதத்தில் வெறும் 15,184 கியா கார்களே விற்பனையாகி இருந்தன. கடந்த 2023 ஜனவரி மாதத்திலும் வழக்கம்போல், அதிகளவில் விற்பனையான கியா காராக செல்டோஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த செல்டோஸ் கார்களின் எண்ணிக்கை 10,470 ஆகும்.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெறும் 5,995 செல்டோஸ் கார்கள் தான் விற்பனையாகி இருந்தது, அதனுடன் ஒப்பிடும்போது கடந்த மாதத்தில் செல்டோஸ் கார்களின் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றாலும், 2022 ஜனவரியில் விற்பனையாகி இருந்த செல்டோஸ் கார்களின் எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் கணிசமாக 8.82% குறைந்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தம் 11,483 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் கியா கார்கள் விற்பனை

கடந்த ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த கியா கார்கள் எண்ணிக்கையில் செல்டோஸின் பங்கு மட்டுமே 36.56% ஆகும். செல்டோஸிற்கு அடுத்து 2வது இடத்தில் சொனெட் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் உள்ளது. அளவில் சிறிய எஸ்யூவி காரான சொனெட்டையும் செல்டோஸை போல் பரவலான மக்கள் ஒவ்வொரு மாதத்திலும் தேர்வு செய்கின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவ்வாறு தேர்வு செய்வோரின் எண்ணிக்கை வழக்கத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் கவனிக்கத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

ஏனெனில் 2022 ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களில் முறையே 6,904 மற்றும் 5,772 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த சொனெட் கார்கள் புதிய 2023ஆம் ஆண்டின் முதல் மாதத்திலேயே 10,000ஐ நெருங்கியவாறு, 9,261 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. கேரன்ஸ் இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது. பலரும் வாங்குவதற்கு ஏற்ப குறைவான விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் கியாவின் எம்பிவி ரக காராகும்.

இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் கியா கார்கள் விற்பனை

பிரபலமான மாருதி எர்டிகாவிற்கு நேரடி போட்டி மாடலாக களமிறக்கப்பட்ட கேரன்ஸ் கடந்த மாத விற்பனையில் வழக்கத்தை காட்டிலும் புதிய உச்சத்தை தொட்டு கியா நிறுவனத்தை மெய்சிலிரிக்க வைத்துள்ளது. கடந்த ஜனவரியில் மொத்தம் 7,900 கேரன்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2022 ஜனவரியில் வெறும் 575 கேரன்ஸ் கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. 2022 ஜனவரி என்பது கேரன்ஸ் கார்களுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்ட முதல் மாதம் என்பதால் இவ்வாறு குறைவான எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது என கூறினாலும், கடந்த ஆண்டின் கடைசி டிசம்பரிலும் 3,195 கேரன்ஸ் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் கேரன்ஸ் கார்களின் விற்பனை மாதம்-மாதம் ஒப்பிடுகையில் 147.26% அதிகரித்துள்ளது. இவை மூன்றும் தான் இந்தியாவில் தற்போதைக்கு கியாவின் பிரதான விற்பனை கார்களாகும். இவை தவிர்த்து, கார்னிவல் சொகுசு எம்பிவி கார் மற்றும் இவி6 எலக்ட்ரிக் காரையும் நம் நாட்டில் கியா விற்பனை செய்கிறது. ஆனால் அதிகப்படியான விலையால் இவற்றின் விற்பனை பெரியதாக சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை. குறிப்பாக, இவி6 எலக்ட்ரிக் கார் கடந்த மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனையாகவில்லை.

Most Read Articles
மேலும்... #கியா #kia
English summary
Kia india cars sales figures 2023 jan
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X