ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 10 கியா கார் வரப்போகுது... மாருதி டாடா எல்லாம் ஓரமாகத்தான் போகனும் போல!

கியா நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் மொத்தம் 10 கார்களை களம் இறக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் ஆட்டோமொபைல் காதலர்களுக்குத் திருவிழா என்றால் அது ஆட்டோ எக்ஸ்போ தான். இங்கு தான் கார் தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக வந்து தங்கள் தயாரிப்புகளை வெளியிடுவார்கள். அதன்படி இந்தாண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ வரும் ஜன 12ம் தேதி டில்லியில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் துவங்குகிறது இதில் ஏராளமான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 10 கியா கார் வரப்போகுது... மாருதி டாடா எல்லாம் ஓரமாகத்தான் போகனும் போல!

ஆட்டோ எக்ஸ்போவில் கியா

அதன்படி கியா நிறுவனமும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளது. கியா நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் தான் காட்சிப்படுத்தப்போகும் வாகனங்கள் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கியா நிறுவனம் தனது கான்செப்ட் இவி கார், ரீ கிரியேஷன் வாகனம், ஸ்பெஷலைஸ்டு மொபிலிட்டி சொல்யூஷன் என்ற ரீதியில் தனது தயாரிப்புகளை வெளியிடுகிறது.

ஆட்டோ எக்ஸ்போ நடக்கும் இடத்தில் ஹால் நம்பர் 7, கியா நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சுமார் 3150 சதுரடி கொண்ட இந்த இடத்தல் கியா நிறுவனம் தனது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவுள்ளது. இது போக இந்த இடத்தை ஒரு எக்கேஜ்மென்ட தளமாகவும் வைக்கவும் முடிவு செய்துள்ளது. இதற்காக கியா நிறுவனம் தனது இவி 6 காரி சுமிலேட்டர் ஸோனை உருவாக்குகிறது. இது போக கியா கனெக்ட் தொழிற்நுட்பம் குறித்த விளக்கம் தரும் இடமும் செட் செய்யப்பட்டுள்ளது. இதேபோக அங்கு பொருத்தப்படும் டிஜிட்டல் சுவரில் கியா நிறுவனத்தின் மைல்கள் குறித்த விபரங்களை வெளியாகவுள்ளது. இது போக இங்குச் சிறிய பிளாஸ்டிக் ரீ சைக்கிள் யூனிட்டும் அமைக்கப்படவுள்ளது.

ஒன்னு இல்ல ரெண்டு இல்ல மொத்தம் 10 கியா கார் வரப்போகுது... மாருதி டாடா எல்லாம் ஓரமாகத்தான் போகனும் போல!

கியா கார்கள்!

இந்த நிகழ்ச்சியில் கியா நிறுவனம் மொத்தம் 10 கார்களை காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி கியா கேஏ4 என்ற பிரிமியம் எம்பி காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்த கார் 2020ம் ஆண்டு சர்வதேச மார்கெட்டில் கார்னிவெல் காரின் 4ம் தலைமுறை காராக அறிமுகமானது. இந்த காரில் இந்தியாவில் தற்போது விற்பனையாகும் காரில் பல தொழிற்நுட்ப மேம்பாடுகளைக் கெண்ட காராக இருக்கும், டிசைனும் வெகு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் ஃவிராப்டு அரெளண்டு டெயில் லைட், ஸ்லீக் ஹெட்லைட் கிளஸ்டர், இன்டர்கிரேட்டட் எல்இடி, டே டைம் ரன்னிங் லைட்கள், பெரிய கிரீன் ஹவுஸ் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது. இதன் உட்புறமும் இந்தியாவில் விற்பனையாகும் கார்னிவெல் காரை விட அதிகமான மேம்பாடுகளைக் கொண்டுள்ளது.

10 கார்கள்!

இது போக கியா நிறுவனம் இவி6 கான்செப்ட் காரை இந்தியாவில் பொது பார்வைக்குக் கொண்டு வரவுள்ளது. அடுத்தாக 3 வரிசை சீட் கொண்ட எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த கருக்கும் இவி 6 காருக்கும் அதிகமான ஒற்றுமைகள் இருக்கப்போகிறது. இரண்டும் ஒரே பிளாட்ஃபார்மில் உருவான காராகும். இந்த கார் விரைவில் சர்வதேச மார்கெட்டிலும் உருவாகிறது. இத்தனை கார்களையும் சேர்த்து மற்ற சில வழக்கமான கார்களுடன் மொத்தம் 10 கார்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கியா நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்த ஆட்டோ எக்ஸ்போவை கியா நிறுவனம் தான் கலக்கப்போவதாகப் பேச்சு எழுந்துள்ளது. இது போக மாருதி மற்றும் டாடா நிறுவனங்களும் இந்த எக்ஸ்போவில் ஏராளமான சர்ப்ரைஸ்களுடன் களம் இறங்கவுள்ளனர். இன்னும் ஒரிரு நாளில் களம் இறங்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் வேறு என்னவெல்லாம் இருக்கும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
மேலும்... #கியா #kia #auto expo 2023
English summary
Kia ready to display 10 cars in auto expo 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X