இது எல்லாம் வந்தா இந்தியாவே சிங்கப்பூரா மாறிடுமே! ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்!

இந்தியாவில் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளது. இந்த கண்காட்சியில் ஏகப்பட்ட வாகனங்கள் வரிசையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த முறை அதிகமான எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் கான்செப்ட் கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டாப் 5 கார்களின் பட்டியலை இங்கே காணலாம்.

ஹூண்டாய் ஐயானிக் 5 - Hyundai ioniq 5

மக்கள் பெரிதும் எதிர்பார்த்தபடி ஹூண்டாய் நிறுவனம் தனது ஐயானிக் 5 காரை காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த காரை அவர்கள் ரூ44.95 லட்சம் என் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். ஹூண்டாய் கோனாவை அடுத்து ஹூண்டாய் நிறுவனம் வெளியிடும் முழு எலெக்ட்ரிக் கார் இது. இந்த கார் எலெக்ட்ரிக் குலோபல் மாடுலர் ஃபிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே பிளாட்ஃபார்மில்தான் கியா இவி 6 காரும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் ஸ்போர்ட்டினஸ் டிசைன் ஃபிலாசஸியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் டிசைனில் பாராமெட்டிக் பிக்ஸல் எல்இடி லைட் மற்றும் டெயில் லைட், கிளாம்செல் பானட், ஆட்டோ ஃபிளாஷ், டோர் ஹேண்டில், ஆக்டிவ் ஆரோ அலாய் வீல்கள், 3 கலர் ஆப்ஷன்கள் - கிராவிட்டி கோல்டு மேட், ஆப்டிக் ஒயிட், மிட் நைட் பிளாக் பியர்ல் ஆகிய நிறங்களில் இது கிடைக்கிறது.

இது எல்லாம் வந்தா இந்தியாவே சிங்கப்பூரா மாறிடுமே! ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள்!

டாடா ஹாரியர் இவி - Tata Harrier EV

டாடா நிறுவனம் தனது 3 கான்செப்ட் கார்களை அறிமுகப்படுத்தியது. இதில் 2 எலெக்டரிக் யூட்டிலிட்டி வாகனமாகும், டாடா அவ்னியா கார் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டாலும் முன்னரே இந்த கார் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த நிகழ்வில் பலரை ஆச்சரியப்படுத்தியது டாடா ஹாரியர் இவி கார் தான். இந்த கார் ஹாரியிலிருந்து வேறுபட்ட டிசைன கொண்டுள்ளது. இந்த கார் 2024ம் ஆண்டு மார்கெட்டிற்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி சுஸூகி இவிஎக்ஸ் - Maruti Suzuki EVX

பல நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் குதித்துள்ள நிலையில் மாருதி நிறுவனம் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் தனது முதல் எலெக்ட்ரிக் கான்செப்ட் காராக இவிஎக்ஸ் கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மார்கெட்டிற்கு வரப்போகும் டாடா பஞ்ச் இவி காருக்கு போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம். அதே போல மஹிந்திரா இகேயூவி 100 காருக்கும் போட்டியான காராக இருக்கம். இந்த காரின் டிசைனை பொருத்தவரை இமேஜன்நெக்ஸ்ட் பிலாஸஃபி வடிவத்தைக் கொண்டுள்ளது. இந்த காரில் ஷார்ப்பான கேரக்டர் லைன், ஃபிளாட் ஃபேஸிகா, எல்இடி லைட், ஸ்கிட் பிளேட்கள், ஸ்போர்ட்டி வீல், ஃபிளார்டு ஃபென்டர்கள், என பல அம்சங்கள் உள்ளன.

கியா இவி9 கான்செப்ட் - Kia EV9 Concept

கியா நிறுவனம் பலரும் எதிர்பார்த்த தனது இவி 9 கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் ஆடி இ-ட்ரான், மெர்சிடீஸ் இக்யூஎஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களம் இறங்குகிறது. இந்த கார் டி2 செக்மெண்டில் களம் இறங்குகிறது. இந்த காரில் 3 வரிசை சீட்டில் ரூஃப் பகுதியில் சோலார் பேனல், பாப் அப் ஸ்டியரிங் வீல், 27 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, சூசைடல் டோர்கள், பானரோமிக் சன் ரூஃப்,

டொயோட்டா பிஇசட்4எக்ஸ்- Toyota BZ4X

டொயோட்டா தனது முதல் எலெக்ட்ரிக் காராக பிஇசட் 4எக்ஸ் காரை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் டொயோட்டா நிறுவனம் பிஇசட் சிரீஸில் வெளியிடும் முதல் காராகும். இந்த கார் டொயோட்டா நிறுவனத்தின் இ-டிஎன்ஜிஏ கட்டமைப்பில் உருவாக்கவுள்ளது. இது டொயோட்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களுக்கான பிரத்தியேக கட்டமைப்பாகும். இந்த பிஇசட்4எக்ஸ் காரை பொருத்தவரை ஏராளமான கட்ஸ் மற்றும் க்ரீஸ்களுடன் வருகிறது. இந்த காரில் கனெக்ட்டெட் எல்இடி லைட்கள், டெயில் லைட்கள், பாடி கிளாடிங் சிங்கிள் மற்றும் டூயல் மோட்டார் கான்ஃபிகரேஷன் உடன் 71.4 கிலோ வாட் ஹவர் பேட்டரியுடன் வருகிறது.

Most Read Articles

English summary
List of top 5 electric cars showcased in auto expo 2023
Story first published: Thursday, January 19, 2023, 17:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X