மஹிந்திராவிற்கு இவ்ளோ பெரிய ஆர்டரா! குடுத்தது யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க! கார்களை மொத்தமா வாங்கி போட்றாங்க!

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனம் எஸ்யூவி (SUV) ரக கார்களை தயாரிப்பதற்கு புகழ் பெற்றது. மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார்கள், கம்பீரமாகவும், முரட்டுத்தனமாகவும் இருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சூழலில், மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி ரக கார் ஒன்று இந்திய ராணுவத்தையும் (Indian Army) தற்போது கவர்ந்துள்ளது.

இந்திய சந்தையில் மிக நீண்ட காலமாக விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). அறிமுகமே தேவையில்லை என்னும் அளவிற்கு, இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த சூழலில், மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) என்ற பெயரில், இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை, மஹிந்திரா நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

மஹிந்திராவிற்கு இவ்ளோ பெரிய ஆர்டரா! குடுத்தது யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க! கார்களை மொத்தமா வாங்கி போட்றாங்க!

இவ்ளோ பெரிய ஆர்டரா!

இந்த காரின் மீதுதான் இந்திய ராணுவத்திற்கு தற்போது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 1,470 மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார்களுக்கு, இந்திய ராணுவம் ஆர்டர் கொடுத்துள்ளது. இதனை மஹிந்திரா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ''தேசம் அழைக்கிறது என்றால், பணி செய்வதற்கு நாங்கள் எப்போதும் தயாராக இருப்போம்'' என இது தொடர்பான அறிவிப்பில் மஹிந்திரா நிறுவனம் பெருமை பொங்க தெரிவித்துள்ளது.

அத்துடன் எங்கள் மீது நம்பிக்கை வைத்ததற்காக இந்திய ராணுவத்திற்கு நன்றி எனவும் மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார்களை, இந்திய ராணுவத்தின் 12 பிரிவுகள் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ராணுவத்திடம் இருந்து இவ்வளவு பெரிய ஆர்டர் கிடைத்திருப்பது மஹிந்திரா நிறுவனத்திற்கு உண்மையிலேயே பெருமிதம் அளிக்கும் நிகழ்வு என்பதில் துளியும் சந்தேகமில்லை. நாங்கள் ஏற்கனவே கூறியபடி, கடந்த ஆகஸ்ட் மாதம்தான் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மஹிந்திராவிற்கு இவ்ளோ பெரிய ஆர்டரா! குடுத்தது யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க! கார்களை மொத்தமா வாங்கி போட்றாங்க!

சூப்பரான கார்!

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில், 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 132 ஹெச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்ததை காட்டிலும், அப்டேட் செய்யப்பட்ட இந்த இன்ஜினின் எடை 55 கிலோ குறைவாகும். அத்துடன் இந்த இன்ஜினின் மைலேஜ் 14 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வசதிகள்!

மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரில், 9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஏர்பேக்குகள் என பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் ஆரம்ப விலை 11.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 15.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மஹிந்திரா ஸ்கார்பியோ என்!

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியா கிளாசிக் தவிர, ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) என்ற மாடலையும் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், மஹிந்திரா ஸ்கார்பியோ என் மாடல், 5 ஸ்டார்களை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், மஹிந்திரா ஸ்கார்பியோ என் காரும், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.

முன்னதாக மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700) ஆகிய கார்களும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன. மஹிந்திரா நிறுவனத்தை போல் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது 3 கார்களுக்கு குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை வாங்கியுள்ளது. அவை டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மற்றும் டாடா பன்ச் (Tata Punch) ஆகும்.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra bags order for 1470 scorpio classic suvs from indian army
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X