போட்டியே இல்லாத செக்மெண்டில் தார் காரை இறக்கிய மஹிந்திரா! நின்னு விளையாட போறாங்க!

மஹிந்திரா நிறுவனம் நீண்ட நாள் எதிர்பார்த்த 2 வீல் டிரைவ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. மொத்தம் 3 வேரியன்ட்களில் 2 இன்ஜின் ஆப்ஷன்களுடன் இந்த 2 வீல் டிரைவ் கார் அறிமுகமாகியுள்ளது. இந்த காருக்கு தற்போது மார்கெட்டில் போட்டியே இல்லாதநிலையில் இது குறித்த விரிவாக காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த 2 வீல் டிரைவ் காரை ரியர் வீல் டிரைவ் காராக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. வேரியன்ட்களை பொருத்தவரை ஏஎக்ஸ், மற்றும் எல்எக்ஸ் ஆகிய வேயிரன்ட்கள் இருக்கிறது. இதில் ஏஎக்ஸ் வேரியன்ட் மற்றும் எல்எக்ஸ் வேரியன்டில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. எல்எக்ஸ் வேரியன்டில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

போட்டியே இல்லாத செக்மெண்டில் தார் காரை இறக்கிய மஹிந்திரா! நின்னு விளையாட போறாங்க!

விலை விபரங்கள்

இந்த காரின் விலை விபரங்களைப் பொருத்தவரை 1.5 லிட்டர் டீசல் மேனுவல் ஏஎக்ஸ் (ஓ) வேரியன்ட் ரூ9.99 லட்சம் என்ற விலையிலும், 1.5 லிட்டர் டீசல் மேனுவல் எல்எக்ஸ் ரூ10.99 லட்சம் என்ற விலையிலும், 2.0 லிட்டர் பெட்ரோல் ஆட்டோமெட்டிக் எல்எக்ஸ் ரூ13.49 லட்சம் என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. விலையை பொருத்த வரையிலும், 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் வேரியன்டிற்கு இடையே 2.33 லட்சம் முதல் ரூ4.17 லட்சம் என்ற அளவில் வித்தியாசம் இருக்கிறது.

இன்ஜின்

இந்த 2 வீல் டிரைவ் காரில் டீசல் இன்ஜினை பொருத்தவரை 4 வீல் டிரைவை விட குறைவான இன்ஜின பொருத்தப்பட்டுள்ளது. 4 வீல் டிரைவ் காரில் 2.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் 2 வீல் டிரைவ் காரில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் தான் எக்ஸ்யூவி 300 காரிலும் பொருத்தப்பட்டுள்ளது.

போட்டியே இல்லாத செக்மெண்டில் தார் காரை இறக்கிய மஹிந்திரா! நின்னு விளையாட போறாங்க!

டீசல் இன்ஜினான 1.5 லிட்டர் இன்ஜினை பொருத்தவரை மொத்தம் 117 எச்பி பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் இரண்டு வேரியன்ட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. டீசல் இன்ஜினின் ஆட்டோமெட்டிக் ஆப்ஷனில் 4 வீல் டிரைவ் கார் மட்டும் தான் இருக்கிறது.

Mahindra Thar RWD Price
AX (O) RWD - Diesel MT - Hard Top ₹9.99 Lakh
X RWD - Diesel MT - Hard Top ₹10.99 Lakh
LX RWD - Petrol AT - Hard Top ₹13.49 Lakh

அடுத்த இன்ஜினாக இந்த காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே இன்ஜின் தான் 4வீல் டிரைவ் வேரியன்டிலும் இருக்கிறது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினில் மேனுவல் ஆப்ஷன் கிடையாது. இந்த இன்ஜின் 152எச்பி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கெண்டது.

டிசைன்

இந்த 2 வீல் டிரைவ் காரை பார்கஅகம் போது அப்படி 4 வீல் டிரைவ் காரின் டிசைன் தான் இருகு்கிறது. 4X4 பேட்ஜ் மட்டும் தான் இந்த காரில் கிடையாது. மற்றபடி எல்லாம் ஒன்று தான் இது போக பிளேஸிங் பிரான்ஸ் நிற ஆப்ஷனும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே எக்ஸ்யூவி 300 காரில் இருக்கிறது. இது போக 2 வீல் டிரைவில் ஹார்டு டாப் ஆப்ஷனும் இருக்கிறது.

அம்சங்கள்

இந்த 2 வீல் டிரைவ் அறிமுகத்தோடு 4 வீல் டிரைவிலும், புதிய அப்டேட் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் செய்துள்ளது. 4 வீல் டிரைவ் காரில் எலெக்ட்ரானிக் பிரேக் லாக்கிங் டிஃப்ரென்ஸியரலை மெக்கானிக்கல் லாக்கிங் டிஃப்ரென்ஸியலுக்கு பதிலாக வைத்திருக்கிறது. இதை போஷ் நிறுவனத்துடன் இணைந்து மஹிந்திரா உருவாக்கியுள்ளது. இந்த சிஸ்டம் லோ ட்ராக்ஷ் சூழ்நிலையில் நல்ல கிரிப்பை வழங்கும். மெக்கானிக்கல் லாக்கிங் டிஃப்ரென்ஸியல் வேண்டுபவர்களுக்கு எல்எக்ஸ் டீசல் வேரியன்டில் மட்டும் இந்த ஆப்ஷன் தொடர்ந்து வழங்கப்படுகிறது.

மஹிந்திரா தார் காரை விரும்புபவர்கள் ஆனால் அதிகமாக ஆஃப்ரோடு பயணம் எல்லாம் செய்யும் திட்டம் இல்லாதவர்களுக்கு இந்த 2 வீல் டரைவ் தார் கார் ஒரு வரப்பிரசாதம் தான். இந்த காருக்கு மார்கெட்டில் தற்போது எந்த விதமான போட்டியும் கிடையாது. தனிக் காட்டு ராஜாவாக விற்பனையாகவுள்ளது. ஆனால் தார் 4 வீல் டிரைவ் காருக்கு ஃபோர்ஸ் கூர்கா, மற்றும் விரைவில் வரப்போகும் மாருதி ஜிம்னி ஆகிய கார்கள் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Mahindra Thar 2 wheel drive RWD car launched
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X