மஹிந்திரா தார் Vs மாருதி ஜிம்னி எது கெத்துன்னு மோத விட்டா தான் தெரியும் போல!

மாருதி நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போ 2023ல் வெளியிட்ட ஜிம்னி கார் மார்கெட்டில் மஹிந்திரா தார் காருடன் போட்டியிடுகிறது. இந்த இரு கார்களின் ஒப்பீட்டை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனத்திடம் மக்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த ஜிம்னி காரை 5 டோர் காராக இந்தியாவில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆட்டோஎக்ஸ்போவில் மாருதி நிறுவனம் இந்த காரை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதே ஆஃப்ரோடு எஸ்யூவி செக்மெண்டில் இந்த காருக்கு போட்டியாக இருப்பது மஹிந்திரா தார் கார் தான். இந்நிலையில் மஹிந்திரா தார் மற்றும் மாருதி சுஸூகி ஜிம்னி ஆகிய கார்களை ஒப்பீடு செய்து இங்கே வழங்கியுள்ளோம்.

மஹிந்திரா தார் Vs மாருதி ஜிம்னி எது கெத்துன்னு மோத விட்டா தான் தெரியும் போல!

அளவுகள்

ஜிம்னி காரை பொருத்தவரை 3985 மிமீ நீளம், 1645 மிமீ அகலம், 1720 மிமீ உயரம் கொண்டது. மஹிந்திரா தார் காரை பொருத்தவரை 3985 மிமீ நீளம், 1820 மிமீ அகலம், 1850 மீமீ உயரம் கொண்டது. நீளத்தைப் பொருத்தவரை இரண்டு கார்களும் ஒரே அளவில் தான் இருக்கிறது. அகலம் மற்றும் உயரத்தில் தார் சற்று பெரிய காராக இருக்கிறது. வீல் பேஸில் ஜிம்னி கார் தார் காரை விட 145 மிமீ அதிகமாக இருக்கிறது. கிரவுண்ட் கிளியரன்ஸை பொருத்தவரை 226 மீமீ உடன் தார் கார் அதிகமாக இருக்கிறது.

இன்ஜின்

இன்ஜினை பொருத்தவரை மாருதி ஜிம்னி காரில் 1.5 லிட்டர் கே15பி பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 103 பிஎச்பி பவரையும், 134 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில் 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் இருக்கிறது.

மஹிந்திரா தார் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்னுர்கள் இருக்கிறது. இதில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை பொருத்தவரை 113 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இது 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட ரியர் வீல் டிரைவ் காராக மட்டும் இருக்கிறது. 2.2 லிட்டர் டீசல் காரை பொருத்தவரை 128 பிஎச்பி பவரும் 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் இன்ஜினாகவும், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை பொருத்தவரை 148 பிஎச்பவி பவர் மற்றும் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் இன்ஜினாகவும் இருக்கிறது. இவை இரண்டும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு இன்ஜின் கொண்ட கார்களும் 4 வீல் டிரைவ் ஆப்ஷனை கொண்டுள்ளது.

ஆஃப் ரோடு அம்சங்கள்

இவை இரண்டும் ஆஃப்ரோடு கார்கள் என்பதால் ஆஃப்ரோடு ஆங்கிள்கள் மிகவும் முக்கியம். இந்த விதத்தில் மஹிந்திரா தார் கார் சிறப்பான அப்ரோச் ஆங்கிலை கொண்டுள்ளது. மாருதி ஜிம்னி கார் சிறந்த டிப்பார்சர் ஆங்கிலை கொண்டுள்ளது. தார் காரில் ஜிம்னியை விடச் சிறிய வீல் பேஸ் இருப்பதால் அதன் பிரேக் ஓவர் ஆங்கிள் சிறப்பானதாக இருக்கும்.

பாடி ஸ்டைல்

ஜிம்னி இந்தியாவில் 5 டோர் வெர்ஷனாக மட்டுமே கிடைக்கிறது. மஹிந்திரா தார் கார் 3 டோர் வெர்னில் ஹார்டு டாப் அல்லது சாஃப்ட் டாப் ஆகிய ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மஹிந்திராவும் தனது தார் காரை 5 டோர் காராக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்சங்கள்

இரண்டுகளிலும் பொதுவாக உள்ள அம்சங்கள் சில இருக்கிறது. இரண்டு கார்களிலும் க்ரூஸ் கண்ட்ரோல், மல்டி ஃபங்சன் ஸ்டியரிங் வீல், டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் ஹில் டிசென்ட் அசிஸ்ட் ஆகிய அம்சங்கள் இருக்கிறது.

மஹிந்திரா தார் காரில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், அட்வெஞ்சர் ஸ்டாடிஸ்டிக்ஸ், 18 இன்ச் அலாய் வீல்கள், டிரைவர் சீட் உயரத்தை மாற்றும் ஆப்ஷன், ரூஃப் மவுண்டட் ஸ்பீக்கர், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் செய்யக்கூடிய 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆகியன இருக்கிறது.

மாருதி ஜிம்னி காரை பொருத்தவரை 6 ஏர்பேக்குகள், புஷ் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன், ஹெட்லைட் வாஷர், ஆட்டோமெட்டிக் எல்இடி லைட், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் செய்யக்கூடிய 7 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட சிஸ்டம் இந்த காரில் இருக்கிறது.

விலை

மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரை பொருத்தவரை ரூ9.99 லட்சத்தில் துவங்குகிறது. ஆனால் இது ரியர் வீல் டிரைவ் வேரியன்ட் தான். 4 வீல் டிரைவ் வேரியன்ட்கள் ரூ13.59 லட்சம முதல் ரூ16.29 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. மாருதி நிறுவனம் ஜிம்னி காரின் விலை குறித்த விபரங்களை வெளியிடவில்லை. இந்த காரை ரூ11 ஆயிரம் கொடுத்து நெக்ஸா ஷோரூம்களில் புக்கிங் செய்து கொள்ளலாம் என மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கார் மார்கெட்டிற்கு வரும் போது ரூ10-12 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு காரில் உங்களுக்குப் பிடித்த எது? கமெண்டில் சொல்லுங்கள்

Most Read Articles
English summary
Mahindra Thar vs Maruti Jimny car features engine price compared
Story first published: Saturday, January 14, 2023, 17:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X