நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் (Electric Car) ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400). இதன் விலை (Price) சமீபத்தில்தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. எனினும் இந்தியாவின் குடியரசு தினம் (Republic Day) கொண்டாடப்படும் ஜனவரி 26ம் தேதி (இன்று) முன்பதிவுகள் தொடங்கப்படும் என மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது.

இதன்படி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது இந்திய சந்தையில் ஏற்கனவே விற்பனையில் இருந்து வரும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 (Mahindra XUV300) காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!

எக்கசக்கமான வசதிகள் இருக்கேப்பா!

புத்தம் புதிய எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரில், எலெக்ட்ரிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்ய கூடிய மற்றும் மடித்து வைத்து கொள்ள கூடிய ஓஆர்விஎம்கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை, 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம் மற்றும் 60:40 ஸ்பிளிட் இருக்கைகள் என ஏராளமான வசதிகளை (Features) மஹிந்திரா நிறுவனம் வாரி வழங்கியுள்ளது.

பாதுகாப்பிற்கும் பஞ்சமில்லை!

பொதுவாக மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் மிகவும் பாதுகாப்பானவையாக கருதப்படுகின்றன. எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. 6 ஏர் பேக்குகள் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் என ஏராளமான பாதுகாப்பு வசதிகளை (Safety Features) மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. எனவே பாதுகாப்பான ஒரு எலெக்ட்ரிக் காரை எதிர்பார்ப்பவர்களுக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.

நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!

அட்டகாசமான ரேஞ்ச்!

EC மற்றும் EL என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants), மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் EC வேரியண்ட்டில் 34.5 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் EL வேரியண்ட்டில் 39.4 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், EC வேரியண்ட்டின் ரேஞ்ச் (Range) 375 கிலோ மீட்டர்கள் எனவும், EL வேரியண்ட்டின் ரேஞ்ச் 456 கிலோ மீட்டர்கள் எனவும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாங்க ஓட்டி பாத்துட்டோம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரானது, 50 kW DC, 7.2 kW மற்றும் 3.3 kW AC ஆகிய சார்ஜர் ஆப்ஷன்களை பெற்றுள்ளது. மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை நாங்கள் ஏற்கனவே டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம். இந்த எலெக்ட்ரிக் காரின் பல்வேறு அம்சங்கள் எங்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அத்துடன் போட்டி நிறுவனங்களுக்கு சவால் அளிக்க கூடிய விலையையும் மஹிந்திரா நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளதால், எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கின்றன.

விலை இவ்ளோதானா!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 15.99 லட்ச ரூபாய் மட்டும்தான். இது ஆரம்ப நிலை EC வேரியண்ட்டின் விலையாகும். அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டான EL வேரியண்ட்டின் விலை 18.99 லட்ச ரூபாய் ஆகும். இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு இது மிகவும் சிறப்பான எலெக்ட்ரிக் காராக கருதப்படுகிறது. இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது. இது அறிமுக சலுகை விலை என்பதுதான் அந்த விஷயம். இதன்படி முதலில் முன்பதிவு செய்யும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த விலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும்.

டாடாவிற்கு செக் வைத்த மஹிந்திரா!

அதற்கு பிறகு விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே குறைவான விலையில் வாங்க வேண்டும் என்பதற்காக வாடிக்கையாளர்கள் பலரும் போட்டி போட்டு கொண்டு மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரானது, இந்திய சந்தையில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருடன் (Tata Nexon EV) நேருக்கு நேராக போட்டியிடும்.

Most Read Articles
English summary
Mahindra xuv400 ev bookings open in india all details here
Story first published: Thursday, January 26, 2023, 16:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X