யாரும் எதிர்பாக்காத குறைவான விலையில் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்! இந்த பொங்கலை ஆயுசுக்கும் மறக்க முடியாது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி400 (Mahindra XUV400 EV). இதில், EV என்பது Electric Vehicle என்பதை குறிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே, மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

ஆனால் விலை (Price) அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த சூழலில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று (ஜனவரி 16), சர்ப்ரைஸாக மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. EC மற்றும் EL என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்.

யாரும் எதிர்பாக்காத குறைவான விலையில் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்! இந்த பொங்கலை ஆயுசுக்கும் மறக்க முடியாது!

சூப்பரான ரேஞ்ச்!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் EC வேரியண்ட்டில், 34.5 kWh பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 375 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் EL வேரியண்ட்டில் 39.4 kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 456 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என மஹிந்திரா கூறியுள்ளது. இது சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Range) என்பதால், அடிக்கடி சார்ஜ் போட வேண்டிய தொல்லை இருக்காது.

செம பெர்ஃபார்மென்ஸ்!

ஆனால் இந்த 2 வேரியண்ட்களிலும் ஒரே எலெக்ட்ரிக் மோட்டார்தான் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 110 kW மற்றும் 310 Nm ஆகும். இந்த 2 வேரியண்ட்களுமே, பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 8.3 வினாடிகளில் எட்டி விடும். அதே நேரத்தில் இவற்றின் டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிலோ மீட்டர்கள் ஆகும். எனவே சிறப்பான ரேஞ்ச் வழங்குவதுடன், செயல்திறனிலும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் அசத்துகிறது.

யாரும் எதிர்பாக்காத குறைவான விலையில் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார்! இந்த பொங்கலை ஆயுசுக்கும் மறக்க முடியாது!

சார்ஜர் ஆப்ஷன்கள்!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் EC வேரியண்ட்டில், 3.3 kW சார்ஜர் மற்றும் 7.2 kW சார்ஜர் என 2 சார்ஜர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் EL வேரியண்ட்டில், 7.2 kW சார்ஜர் ஆப்ஷனுடன் மட்டுமே கிடைக்கும். வேரியண்ட்கள் மற்றும் சார்ஜர் ஆகிய 2 முக்கியமான அம்சங்களிலும் மஹிந்திரா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷன்களை வழங்கியுள்ளதால், தேவைக்கு ஏற்றதை தேர்வு செய்து கொள்ள முடியும்.

வசதிகளை வாரி வழங்கியிருக்காங்க!

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் EC வேரியண்ட்டில், நான்கு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள், சிங்கிள் பெடல் டிரைவிங் மற்றும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் போன்ற வசதிகள் (Features) வழங்கப்பட்டுள்ளன. மறுபக்கம் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் EL வேரியண்ட்டில், 6 ஏர்பேக்குகள், அலாய் வீல்கள், ரியர் வியூ கேமரா, 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான ஓட்டுனர் இருக்கை உள்பட பல்வேறு வசதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.

விலை எவ்ளோ?

மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் EC வேரியண்ட்டின் 3.3 kW சார்ஜர் மாடலின் விலை 15.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த வேரியண்ட்டின் 7.2 kW சார்ஜர் மாடலின் விலை 16.49 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் EL வேரியண்ட்டின் விலை 18.99 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ரேஞ்ச், செயல்திறன் மற்றும் வசதிகள் இவை அனைத்தையும் வைத்து பார்க்கும்போது, மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கு சிறப்பான விலையை நிர்ணயம் செய்துள்ளதை போன்றுதான் தெரிகிறது. ஏனெனில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலையே 17-18 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைக்காட்டிலும் குறைவான விலையில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இது ரொம்ப முக்கியமான விஷயம்!

இந்த விலையானது, மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரை முதலில் முன்பதிவு (Booking) செய்யும் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே பொருந்தும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 2 வேரியண்ட்களுக்கும் தலா 5 ஆயிரம் பேருக்கு என மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த விலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும். அதன்பின் விலை உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

புக்கிங், டெலிவரி எப்ப தொடங்குது?

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் சுதந்திர தினம் (Independence Day) மற்றும் குடியரசு தினம் (Republic Day) போன்ற நல்ல நாட்களில், ஏதாவது ஒன்றை செய்யும். இதன்படி வரும் குடியரசு தினத்தன்றுதான், அதாவது வரும் ஜனவரி 26ம் தேதியன்றுதான் (January 26), எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகளை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஏற்க தொடங்கவுள்ளது. அதே நேரத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் EC வேரியண்ட்டின் டெலிவரி (Delivery) பணிகள் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை சமயத்தில் தொடங்கப்படும்.

ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் EL வேரியண்ட்டின் டெலிவரி பணிகள் வரும் மார்ச் மாதத்தில் இருந்தே தொடங்கப்படவுள்ளன. அதேபோல் ஆரம்பத்தில் இந்த எலெக்ட்ரிக் கார் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். படிப்படியாகதான் அனைத்து நகரங்களுக்கும் மஹிந்திரா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. முதல் கட்டத்தில் இந்தியா முழுவதும் மொத்தம் 34 நகரங்களில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படவுள்ளது.

எந்தெந்த நகரங்கள்?

சென்னை, கோயமுத்தூர், பெங்களூர், மைசூர், மங்களூர், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, ஐதராபாத், மும்பை, புனே, நாக்பூர், நாசிக், அவுரங்காபாத், கோலாப்பூர், டெல்லி, ஆக்ரா, லக்னோ, சண்டிகர், லூதியானா, கொல்கத்தா, டேராடூன், ஜெய்ப்பூர், உதய்பூர், ராய்பூர், இந்தூர், கவுஹாத்தி, புவனேஸ்வர், பாட்னா, வதோதரா, ஜம்மு மற்றும் வெர்னா (கோவா) உள்பட 34 நகரங்களில் மட்டுமே, முதற்கட்டமாக மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் கிடைக்கும்.

Most Read Articles
English summary
Mahindra xuv400 ev launched in india price range features booking delivery details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X