24மணி நேரத்தில் 751கிமீ கடந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இ-கார்! வேறு எந்த காரும் இப்படி ஒரு சாதனையை படைச்சதில்ல!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் சூப்பரான சாதனை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெறும் 24 மணி நேரத்தில் 751 கிமீ வரை பயணித்து அது சாதனை படைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மஹிந்திரா நிறுவனம் விரைவில் எக்ஸ்யூவி 400 காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும். ஏற்கனவே இந்த காரை இந்திய சந்தையில் மஹிந்திரா அறிமுகம் செய்துவிட்டது. விலை போன்ற முக்கிய விபரங்கள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாத நிலை தென்படுகின்றது. இந்த மாதத்திற்குள் இதுகுறித்த தகவல் வெளியாகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார்

வேறு எந்த எலெக்ட்ரிக் காரும் இந்த சாதனையை படைச்சது இல்ல

ஆகையால், எப்போது வேண்டுமானாலும் விலை அறிவிக்கப்படலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையிலேயே மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார் புதிய சாதனையை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 24 மணி நேரத்தில் 751 கிமீ தூரத்தை கவர் செய்தே இந்த கார் சாதனைப் படைத்துள்ளது. இதுவரை எந்தவொரு எலெக்ட்ரிக் காரும் செய்திராத சாதனை இதுவாகும். குறிப்பாக, சப்-ஜீரோ டெம்ப்ரேச்சரிலேயே இந்த அதிக அளவு தூரத்தைக் கடந்து எக்ஸ்யூவி 400 சாதனைப் படைத்திருக்கின்றது.

எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார்

ஆச்சரியமா இருக்கே

ஹிமாச்சலின் கைலேங் பகுதியில் தொடங்கிய பயணம் சுமார் 751 கிமீ தூரம் வரை மேற்கொள்ளப்பட்டது. இந்த அதிக குளிர்ச்சியான பிரதேசத்திலா இந்த அளவு சூப்பரான ரேஞ்ஜை மஹிந்திரா எக்ஸ்யூவி 400 வழங்கியிருக்கிறது என பலரை இந்த கார் ஆச்சரியத்தில் மூழ்க செய்துள்ளது. குறிப்பாக, நம்மில் பலர் உயரமான மலை பகுதிகளை சாமாளிக்கும் என்கிற சந்தேகம் நிலவுவதை நம்மால் உணர முடிகின்றது. இந்த சந்தேகத்தை எக்ஸ்யூவி 400 உடைத்தெறிந்துள்ளது.

பேட்டரி பேக்

மிக செங்குத்தான மலைப் பாதையை இந்த கார் அசால்டாக ஏறி இறங்கி இருக்கின்றது. மிக சவாலான பாதையைக் கூட அது அசால்டாக கடந்து சாதனைப் படைத்திருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே இந்த பயணத்தை பெரும் சாதனையாக கருதுகின்றனர். மஹிந்திரா எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் காரில் 112 Ah கெபாசிட்டி கொண்ட 39.4 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி நிக்கல், மக்னீசியம் மற்றும் கோபால்டால் ஆனவை ஆகும்.

எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் கார்

வேக திறன்

மேலும், இந்த காரில் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வெறும் 8.3 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டி விடும் திறன் கொண்டது. மஹிந்திரா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை தனது புகழ்பெற்ற எக்ஸ்யூவி 300 மாடலை தழுவி உருவாக்கி இருந்தாலும், தோற்றத்திலும், அளவிலும் முற்றிலும் மாறுபட்டதாகக் காட்சியளிக்கின்றது.

ஆமாங்க, எக்ஸ்யூவி 300-ஐக் காட்டிலும் சற்று பெரிய உருவம் கொண்டதாக இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 456 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் இதைவிட அதிக ரேஞ்ஜை எக்ஸ்யூவி400 வெளிப்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. இத்தகைய சூப்பரான ரேஞ்ஜ் திறனுடனேயே விரைவில் இந்திய மின் வாகன சந்தையை எக்ஸ்யூவி 400 இவி அதன் கால் தடத்தை பதிக்க இருக்கின்றது.

சிறப்பம்சங்கள் பற்றிய விபரம்

நல்ல ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் காராக மட்டுமே எக்ஸ்யூவி 400 இவி உருவாக்கப்படவில்லை. அதில், சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், டிஜிட்டல் எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மஹிந்திராவின் அட்ரினாக்ஸ் மென்பொருள் வசதி, சன்ரூஃப், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, டூயல் க்ளைமேட் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், ஆறு ஏர் பேக்குகள், டிஸ்க் பிரேக்குகள், ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள் உள்ளிட்ட அம்சங்களே எக்ஸ்யூவி 400 இவியில் வழங்கப்பட்ட இருக்கின்றன.

போட்டியாளன் மற்றும் வேரியண்ட் விபரங்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் டாடா நெக்ஸான் இவி-க்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவே ஆகும். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் எக்ஸ்யூவி 400 எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கிடைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ், இபி மற்றும் இஎல் ஆகிய தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

Most Read Articles
English summary
Mahindra xuv400 ev made new record
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X