டாடாவிற்கு சரியான போட்டி தயார்... இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை போட்டி போட்டு புக் பண்றாங்க!!

நீண்ட இடைவெளிக்கு பின் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ள எலக்ட்ரிக் காரான எக்ஸ்யூவி400-க்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. தற்போதைக்கு முன்பதிவுகள் எந்த அளவில் உள்ளன என்பது குறித்தும், புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி400 கார் குறித்தும் விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

எலக்ட்ரிக் கார்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், சமீப மாதங்களாக மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த எலக்ட்ரிக் காரான எக்ஸ்யூவி400-க்கு முன்பதிவுகளை சமீபத்தில், கடந்த ஜனவரி 26ஆம் தேதி தேசிய குடியரசு தினத்தின்போது பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனம் துவங்கியது. டோக்கன் தொகையாக ரூ.21 ஆயிரத்தை செலுத்தி புதிய எக்ஸ்யூவி400 காரை வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மஹிந்திரா அறிவித்தது.

மஹிந்திரா எக்ஸ்யூவி400 காரை போட்டி போட்டு புக் பண்றாங்க!!

குடியரசு தினம் மற்றும் அதனை தொடர்ந்து வந்த வார இறுதி நாட்களை டார்க்கெட் செய்து எக்ஸ்யூவி400 காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டன. அதாவது, இந்த நாட்களில் வழக்கத்தை காட்டிலும் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகள் குவியும் என திட்டம் தீட்டி மஹிந்திரா நிறுவனம் காய் நகர்த்தியது. அதற்கு கை மேல் பலன் என்பதுபோல், வெறும் 4 நாட்களில் (ஜன.26, 27, 28, 29) சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் எக்ஸ்யூவி400 கார்களை முன்பதிவு செய்துள்ளதாக மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

இந்த 10,000+ முன்பதிவுகள் இந்தியாவில் மொத்தம் 34 நகரங்களில் இருந்து கிடைத்துள்ளன. மேலும், இந்த 4 நாட்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு எக்ஸ்யூவி400 கார்களை டெலிவிரி செய்யவே ஏறக்குறைய 7 மாத காலம் ஆகும் எனவும் மஹிந்திரா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரின் எலக்ட்ரிக் வெர்சன் தான் எக்ஸ்யூவி400 ஆகும். இ-எக்ஸ்யூவி300 என்ற பெயரில் இந்த கார் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னர் காரின் பெயர் எக்ஸ்யூவி400 என சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

மஹிந்திரா எக்ஸ்யூவி400 காரை போட்டி போட்டு புக் பண்றாங்க!!

புதிய எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரில் சிறப்பம்சங்களாக எலக்ட்ரிக் சன்ரூஃப், எலக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ORVM-கள், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கை, 7-இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழிற்நுட்பம் மற்றும் 60:40 ஸ்பிளிட் இருக்கைகள் என ஏராளமான மாடர்ன் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. டாடா கார்களை போன்று, மஹிந்திரா கார்களிலும் பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்தவொரு குறையும் இருக்காது.

அதற்கேற்ப, 6 ஏர்பேக்குகள், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்பட ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலமாக டாடா நெக்ஸான் இவி-ஐ போன்று பாதுகாப்பான எலக்ட்ரிக் காராக களமிறக்கப்பட்டிருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி400 இ.சி மற்றும் இ.எல் என மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இ.சி வேரியண்ட்டில் 34.5 kWh பேட்டரி தொகுப்பும், இ.எல் வேரியண்ட்டில் 39.4kWh பேட்டரி தொகுப்பும் பொருத்தப்படுகிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி400 காரை போட்டி போட்டு புக் பண்றாங்க!!

பேட்டரியின் திறனை பொறுத்து அதன் மூலம் கிடைக்க பெறும் ரேஞ்ச் இருக்கும். அதன்படி, இ.சி வேரியண்ட்டில் 375கிமீ ரேஞ்சையும், இ.எல் வேரியண்ட்டில் 456கிமீ ரேஞ்சையும் பெறலாம். ரேஞ்ச் என்றால் என்ன என்பது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன். பேட்டரி ஆனது முழு 100% சார்ஜில் இருந்து 0% சார்ஜ் வரையில் காரை இயக்கி செல்லும் தூரம் ஆகும். மேற்கூறப்பட்ட ரேஞ்ச்கள் சோதனை களத்தில் கிடைக்க பெற்றவை ஆகும். டிரைவிங் ஸ்டைல், சாலையின் தரம் & பயண சூழல் உள்ளிட்டவற்றை பொறுத்து நிஜ உலகில் மேற்கூறப்பட்ட ரேஞ்ச்கள் சற்று குறைவாகவே கிடைக்கும்.

பேட்டரியை சார்ஜ் செய்ய மஹிந்திரா எக்ஸ்யூவி400 காரில் 50 கிலோ வாட்ஸ் DC, 7.2 கிலோவாட்ஸ் AC மற்றும் 3.3 கிலோவாட்ஸ் AC என மொத்தம் 3 விதமான சார்ஜர் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை வெறும் ரூ.15.99 லட்சம் மட்டும்தான். டாப்-வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலை ஆனது காரை முன்பதிவு செய்த முதல் 5 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra xuv400 records 10000 plus bookings on extended republic day weekend
Story first published: Monday, January 30, 2023, 18:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X