மாருதி கார்களின் விலை இன்று முதல் அதிரடியாக விலை உயருகிறது! எவ்வளவுன்னு இங்க பாருங்க!

மாருதி சுஸூகி நிறுவனத்தின் கார்களின் விலை இன்று முதல் அதிரடியாக 1.1 சதவீதம் வரை உயருகிறது. ஏற்கனவே ஜனவரி மாதம் விலை உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

மாருதி நிறுவனம் கடந்த மாதமே வரும் ஜனவரி மாதம் முதல் அந்நிறுவனம் தயாரிக்கும் கார்களுக்கான விலை அதிகரிக்கும் எனத் தெரிவித்திருந்தது. இது குறித்து அந்நிறுவனம் விளக்கமளிக்கும் போது கார் தயாரிப்பிற்காகச் செலவுகள் பல்வேறு ரீதியில் அதிகமாவதால் அதைச் சமாளிக்க மாருதி நிறுவனம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இருந்தாலும் அதையும் தாண்டி செலவுகள் அதிகரிப்பதால் மாருதி நிறுவனம் தனது கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

மாருதி கார்களின் விலை இன்று முதல் அதிரடியாக விலை உயருகிறது! எவ்வளவுன்னு இங்க பாருங்க!

அதன்படி இன்று முதல் மாருதி நிறுவனத்தின் கார்களின் விலை தற்போது உள்ள விலையிலிருந்து 1.1 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாருதி நிறுவனம் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் இந்த ஜனவரி மாதம் விலை உயர்வை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். இது குறிப்பிட்ட மாடல் அல்லது குறிப்பிட்ட வகை என்று இல்லாமல் ஒட்டு மொத்தமாக அனைத்து பாடி டைப்புகளுக்கும், இது பொருந்தும்,

இந்தியாவைப் பொருத்தவரை மாருதி நிறுவனம் தான் அதிகமான கார்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாகப் பயணிகள் வாகன செக்மெண்டில் மாருதி தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் தனது போட்டியாளர்களான டாடா மற்றும் மாருதி நிறுவனத்திற்குப் போட்டியாக கார்களை களம் இறக்கியுள்ளது. என்னதான் பயணிகள் கார்கள் விற்பனையில் நம்பர் 1 இடத்திலிருந்தாலும் எஸ்யூவி செக்மெண்டில் மாருதிக்குச் சிறப்பான இடம் கிடைக்கவில்லை.

இந்த செக்மெண்டில் தனது ஆட்சியை கொண்டு வர மாருதி நிறுவனம் சமீபத்தில் ஜிம்னி மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகிய 2 எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதே செக்மெண்டில் அந்நிறுவனம் பிரெஸ்ஸா மற்றும் கிராண்ட் விட்டாரா ஆகிய கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கார்கள் அறிமுகத்திற்குப் பின்பு அந்த கார்களுக்கான புக்கிங் துவங்கிவிட்டது. இதன் மூலம் மாருதி நிறுவனம் எஸ்யூவி செக்மெண்டிலும் நம்பர் 1 இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
English summary
Maruti Suzuki car price got hiked from January 16 know full details
Story first published: Monday, January 16, 2023, 12:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X