இந்த கார்லாம் இந்தியால விற்பனைக்கு வந்தா சூப்பரா இருக்கும்! ஏக்கத்தை ஏற்படுத்திய எம்ஜி!

இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாவான 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai) மற்றும் டாடா (Tata) உள்பட பல்வேறு நிறுவனங்களும், இந்த வாகன கண்காட்சியில், தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றன.

இதற்கு சற்றும் சளைக்காமல், எம்ஜி மோட்டார் இந்தியா (MG Motor India) நிறுவனமும், 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஏராளமான கார்களை காட்சிப்படுத்தி வருகிறது. எம்ஜி 5 எலெக்ட்ரிக் எஸ்டேட் (MG 5 Electric Estate) காரும் ஒன்றாகும். சீனாவில் விற்பனையில் உள்ள ரோவ் இஐ5 (Roewe Ei5) காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் எம்ஜி 5 எலெக்ட்ரிக் எஸ்டேட் கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இந்த கார்லாம் இந்தியால விற்பனைக்கு வந்தா சூப்பரா இருக்கும்! ஏக்கத்தை ஏற்படுத்திய எம்ஜி!

எம்ஜி 5 எலெக்ட்ரிக் எஸ்டேட் கார் ஏற்கனவே ஐரோப்பிய சந்தைகளில் விற்பனையில் உள்ளது. அங்கு கடந்த 2020ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டின் மைய பகுதியில், இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஜி 5 எலெக்ட்ரிக் எஸ்டேட் காரானது, இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள கியா கேரன்ஸ் (Kia Carens) அளவுடைய கார் ஆகும்.

துல்லியமாக சொல்வதென்றால், எம்ஜி 5 எலெக்ட்ரிக் எஸ்டேட் காரின் நீளம் 4,600 மிமீ ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் அகலம் 1,818 மிமீ ஆகவும், உயரம் 1,543 மிமீ ஆகவும் இருக்கிறது. சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் எம்ஜி 5 எலெக்ட்ரிக் எஸ்டேட் காரில், 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அவை 50.3 kWh மற்றும் 61.1 kWh பேட்டரிகள் ஆகும். இதில், 61.1 kWh பேட்டரி தொகுப்பின் ரேஞ்ச் (ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணிக்க கூடிய தூரம்) 402 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கார்லாம் இந்தியால விற்பனைக்கு வந்தா சூப்பரா இருக்கும்! ஏக்கத்தை ஏற்படுத்திய எம்ஜி!

150 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால், வெறும் 35 நிமிடங்களில், இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை, 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும். பொதுவாக எம்ஜி நிறுவனத்தின் கார்களில் ஏராளமான வசதிகள் வாரி வழங்கப்பட்டிருக்கும். எம்ஜி 5 எலெக்ட்ரிக் எஸ்டேட் காரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எம்ஜி நிறுவனத்தின் கார்களுக்கே உரித்தான வகையில், ஏராளமான அதிநவீன வசதிகளை இந்த எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.

இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே ஆகியவை குறிப்பிடத்தக்கவை. டிசைனை பொறுத்தவரையில், எல்இடி ஹெட்லைட்கள், 17 இன்ச் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஷோல்டர் லைன் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. எம்ஜி நிறுவனம் தற்போதைய நிலையில் இந்த காரை இந்திய சந்தையில் காட்சிக்கு மட்டுமே வைத்துள்ளது. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த கார்லாம் இந்தியால விற்பனைக்கு வந்தா சூப்பரா இருக்கும்! ஏக்கத்தை ஏற்படுத்திய எம்ஜி!

இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதில், கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. எம்ஜி நிறுவனத்தை பொறுத்தவரையில், இந்தியாவில் முறையான ஒரு எலெக்ட்ரிக் காரை முதலிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்த நிறுவனங்களில் ஒன்றாகும். எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காரை (MG ZS EV) பற்றிதான் நாங்கள் இங்கே பேசி கொண்டுள்ளோம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இதை தொடர்ந்து, எம்ஜி 5 எலெக்ட்ரிக் எஸ்டேட் போன்ற கார்களும் எதிர்காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கிடையே எம்ஜி நிறுவனம் ஓரளவிற்கு குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு தற்போது தயாராகி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

Most Read Articles
English summary
Mg 5 electric car unveiled in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X