சட்டபடி இது தப்புங்க! ஆட்டோ எக்ஸ்போவில் தில்லாக காட்சியளித்த மாடிஃபைடு கார்கள்... எல்லாமே செம்ம அழகா இருக்கு!

2023 ஆட்டோ எக்ஸ்போவில் பன்முக கார்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அந்தவகையில், மாடிஃபை செய்யப்பட்ட கார் மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷன் மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிமீறல் செயலாகும். ஆனால், வாகன உற்பத்தியாளர்கள் சிலர் தங்களின் மாடிஃபை செய்யப்பட்ட வாகனங்களை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றனர். மாடிஃபை வாகனங்கள் சாலைக்கு வரும்போது மட்டுமே விதிமீறல் செயல் ஆகும். இந்த வாகனங்கள் காட்சிப்படுத்த மட்டுமே மாடிஃபை செய்யப்பட்டுள்ளன. அதேவேலையில், விதிமுறைகளுக்கு உட்பட்டே அவை மாடிஃபை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆட்டோ எக்ஸ்போ

இந்தியாவில் 2023 ஆட்டோ எக்ஸ்போ இனிதே தொடங்கி, தற்போது நிறைவுற்றும் இருக்கின்றது. இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியில் உள்நாட்டு நிறுவனங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்று தங்களின் கெத்தான வாகனங்களைக் காட்சிப்படுத்தின. பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, எலெக்ட்ரிக், ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் வாகனங்கள் என பல தரப்பட்ட வாகனங்கள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டன.

இதுமட்டுமின்றி, சில முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் கான்செப்ட் மாடல்களையும் காட்சிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தன. இதுதவிர, ஒரு சில வாகன உற்பத்தி நிறுவனங்கள் யாரும் எதிர்பார்த்திராத, அழகாக மாற்றி அமைக்கப்பட்ட தங்களின் மாடிஃபைடு வாகனங்களைக் காட்சிப்படுத்தின. ஒட்டுமொத்தமாக 4 மாடிஃபைடு கார்கள் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டன. அவைபற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகியின் மேட் எடிசன் கார்கள் (Maruti Matte Edition Cars)

மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் அதன் பிளாக் எடிசன் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அந்த கார் மாடல்களையே 2023 ஆட்டோ எக்ஸ்போவைப் பயன்படுத்தி நிறுவனம் காட்சிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து நிறுவனம் அதன் மேட் எடிசன் கார் மாடல்களான கிராண்ட் விட்டாரா மற்றும் பிரெஸ்ஸா ஆகிய கார் மாடல்களையும் காட்சிப்படுத்தியது. இதில் பிரெஸ்ஸா மேட் ப்ளூ ஃபினிஷிலும், கிராண்ட விட்டாரா ஸ்போர்ட்டி மேட் பிளாக் நிறத்திலும் மாடிஃபை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிற மாற்றத்தை வேறு எந்த மாற்றத்தையும் மாருதி சுஸுகி நிறுவனம் இந்த கார்களில் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனம் மாடிஃபை செய்திருக்கும் இரு கார் மாடல்களும் நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கக் கூடியவை ஆகும். முன்னதாக அது விற்பனைக்குக் கொண்டு வந்த பிளாக் எடிசன் கார் மாடல்களும் நெக்ஸா ஷோரூம் மாடல்களே ஆகும். நெக்ஸா ஷோரூம் வாயிலாக விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து மாடல்களின் குறிப்பிட்ட வேரியண்டுகளில் பிளாக் எடிசன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆட்டோ எக்ஸ்போ

டாடா டியாகோ இவி பிளிட்ஸ் (Tata Tiago EV Blitz)

டாடா நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் கார் மாடலாக டியாகோ இவி இருக்கின்றது. இந்த கார் மிகவும் கவர்ச்சியான ஓர் தயாரிப்பாக உருவாக்கி அதனை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது. டியாகோ இவி பிளிட்ஸ் எனும் பெயரிலேயே அது காட்சிப்படுத்தப்பட்டது. வழக்கமான டியாகோ இவி-யைக் காட்டிலும் இது பல மடங்கு அதிக கவர்ச்சியான தயாரிப்பாக மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதனால், டியாகோ இவி ஹாட்டான எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் காராக மாறி இருக்கின்றது.

குளாஸ்ஸி வெள்ளை நிறம், அங்காங்கே கருப்பு நிற அணிகலன், கவர்ச்சியான கருப்பு நிற க்ரில், கருப்பு நிற ரூஃப், கருப்பு நிற பின் பக்கத்தைப் பார்க்க உதவும் கண்ணாடி ஆகியவையே இந்த காரில் புதிய சிறப்பு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சங்களை வழக்கமான டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன், கார் பாடியின் ஸ்கர்ட்டுகள் மற்றும் பம்பர்களும் குளாஸ்ஸி கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இதே யுக்தியையே வீல் ஆர்ச்சுகளிலும் டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டிருக்கின்றது. ஆகையால் மிக மிக கவ்ர்ச்சியான காராக டியாகோ இவி பிளிட்ஸ் காட்சியளிக்கின்றது. இத்துடன், அட்டகாசமான ஸ்போர்ட்டி தோற்றத்தையும் இந்த காருக்கு அவை வழங்குகின்றன.

டொயோட்டா கிளான்ஸா ஜிஆர் ஸ்போர்ட் (Toyota Glanza GR Sport)

டொயோட்டா நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஒன்றே கிளான்ஸா. இந்த காரையே நிறுவனம் மிக அழகிய காராக மாற்றி இருக்கின்றது. இந்த காரையே நிறுவனம் கிளான்ஸா ஜிஆர் ஸ்போர்ட் எனும் பெயரில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அது காட்சிப்படுத்தியது. புதிய பம்பர் ஸ்கர்ட், ட்வீக்கர்ட் க்ரில், ரெட் அக்செண்ட் மற்றும் கார்பன் ஃபைபர் ஆகியவற்றாலேயே இந்த கார் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றது. இது மட்டுமின்றி இன்னும் பல சிறப்பு அம்சங்களை இந்த கிளான்ஸா ஜிஆர் ஸ்போர்ட் வேரியண்டில் நம்மால் காண முடிகின்றது.

அந்த வகையில், அழகிய கருப்பு நிற அலாய் வீல்கள், சிவப்பு நிற காலிபர்கள் மற்றும் கார்பன் ஃபைபரால் தயார் செய்யப்பட்ட பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, ஸ்மோக்கட் ஹெட்லேம்ப்,. சிங்கிள் எக்சாஸ்ட் பைப் என எக்கச்சக்க அம்சங்களை இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான மாடிஃபிகேஷனால் இந்த கிளான்ஸா வேற லெவல் கவர்ச்சியான தோற்றத்திற்கு உயரந்திருக்கின்றது. இதை மேலும் மேம்படுத்தும் விதமாக இந்த காரை குளாஸ்ஸி வெள்ளை மற்றும் மேட் கருப்பு நிறங்களால் அலங்கரித்திருக்கின்றது. இதுதவிர ஆங்காங்கே சிவப்பு நிறமும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Most Read Articles

English summary
Modified cars showed 2023 auto expo
Story first published: Wednesday, January 25, 2023, 6:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X