மாருதி ஸ்விஃப்ட்டை காட்டிலும் சிறந்ததா புதிய ஹூண்டாய் கிராண்ட் ஐ10? இரண்டும் செம்ம கார்கள் தான், ஆனால்...

நம் இந்தியர்கள் கடந்த சில வருடங்களாக எஸ்யூவி கார்களை வாங்குவதில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனாலேயே முன்பை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் எஸ்யூவி கார்களை சாலையில் காண முடிகிறது. அதேநேரம் ஒருபக்கம் சிறிய அளவிலான கார்களை வாங்குவதற்கும் வாடிக்கையாளர்கள் எப்போதும் போல் இருக்க தான் செய்கின்றன.

இந்திய சந்தையை பொறுத்தவரையில், வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்த அளவில்-சிறிய கார் என்று பார்த்தால், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஆகும். இதில் ஹூண்டாயின் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் ஆனது சமீபத்தில்தான் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரும் விரைவில் முக்கியமான ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டை பெற உள்ள நிலையில், தற்சமயம் இந்த இரு கார்களுக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி ஸ்விஃப்ட்டை காட்டிலும் சிறந்ததா புதிய ஹூண்டாய் ஐ10?

விலை

இந்த 2023 ஜனவரி மாத துவக்கத்தில் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை எரா, மேக்னா, ஸ்போர்ட்ஸ் மற்றும் அஸ்ட்ரா என மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் சிஎன்ஜி வேரியண்ட்களும் அடங்குகின்றன. புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.5.68 லட்சமும், அதிகப்பட்ச விலையாக ரூ.8.46 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. சிஎன்ஜி வெர்சன்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.56 லட்சத்தில் இருந்து ரூ.8.11 லட்சம் வரையில் உள்ளன.

கிராண்ட் ஐ10 நியோஸ் உடன் ஒப்பிடுகையில் மாருதி ஸ்விஃப்ட் சற்று கூடுதல் விலை உடையதாக ரூ.5.91 லட்சத்தில் ஆரம்ப விலையினை கொண்டுள்ளது. ஸ்விஃப்ட்டையும் பெட்ரோல் அல்லது சிஎன்ஜி தேர்வில் பெறலாம். பெட்ரோல் என்ஜின் உடன் ரூ.8.71 லட்சம் வரையிலான விலைகளில் இந்த மாருதி ஹேட்ச்பேக் கார் கிடைக்கிறது. சிஎன்ஜி தேர்வில் ஸ்விஃப்ட் காரின் விலைகள் ரூ.7.77 லட்சம் - ரூ.8.45 லட்சம் வரையில் உள்ளன. ஸ்விஃப்ட் விரைவில் அப்டேட் செய்யப்பட்ட பின், அதன் இந்த விலைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பரிமாண அளவுகள்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேட்ச்பேக் காரின் நீளம் 3,815மிமீ, அகலம் 1,680மிமீ மற்றும் உயரம் 1,520மிமீ ஆகும். முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தை இந்த கார் 2,450மிமீ என்ற அளவில் கொண்டுள்ளது. அத்துடன் 15 இன்ச்சில் புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் இந்த காரின் சமீபத்திய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பொருத்தப்பட்டுள்ளன.

கூடுதல் விலை மட்டுமின்றி, தோற்ற அளவுகளிலும் மாருதியின் ஹேட்ச்பேக் கார் கிராண்ட் ஐ10 நியோஸை காட்டிலும் பெரியதாக உள்ளது. இந்த ஹூண்டாய் ஹேட்ச்பேக் காரை காட்டிலும் ஸ்விஃப்ட் கார் 35மிமீ நீளமானது, 55மிமீ அகலமானது மற்றும் 10மிமீ உயரமானது ஆகும். ஆனால் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரத்தில் மாற்றமில்லை. இதன் காரணமாக உட்பக்க கேபின் இந்த இரு கார்களில் ஒரே அளவிலேயே காட்சியளிக்கின்றன.

தொழிற்நுட்ப வசதிகள்

அளவில் பெரியதாக இருப்பினும், ஸ்விஃப்ட்டை காட்டிலும் கிராண்ட் ஐ10 நியோஸ் தொழிற்நுட்ப வசதிகளில் சிறந்ததாக விளங்குகிறது. குறிப்பாக, புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரில் 6 ஏர்பேக்குகள், ஹில் அசிஸ்ட், பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் பர்க்லர் அலாரம் என 30 விதமான பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் புதிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை, டைப்-சி சார்ஜிங் துளைகள், வயர்லெஸ் சார்ஜிங், பின் இருக்கை வரிசைக்கும் ஏசி மற்றும் கூல்டு க்ளோவ் பாக்ஸ் உள்ளிட்டவையும் கிராண்ட் ஐ10 நியோஸின் கேபினில் அடங்குகின்றன. இவற்றில் பெரும்பான்மையானவை ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படுவது இல்லை.

என்ஜின்

இந்த இரு ஹேட்ச்பேக் கார்களில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினே பொருத்தப்படுகிறது. அதேபோல் இந்த என்ஜின் உடன் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை இந்த இரு கார்களிலும் பெறலாம். ஆனால் கிடைக்க பெறும் இயக்க ஆற்றலை பொறுத்தவரையில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் சற்று பின்தங்கி உள்ளது. இந்த ஹூண்டாய் காரில் அதிகப்பட்சமாக 83 பிஎஸ் வரையிலும், ஸ்விஃப்ட்டில் 90 பிஎஸ் வரையிலும் இயக்க ஆற்றல் கிடைக்கின்றன. ஆனால் டார்க் திறனில் பெரியதாக வித்தியாசமில்லை.

Most Read Articles
English summary
New hyundai grand i10 nios facelift vs maruti suzuki swift
Story first published: Wednesday, January 25, 2023, 11:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X