இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!

ஒரே பெயரிலான காரை இரு வெவ்வேறு கார் பிராண்ட்கள் விற்பனை செய்வதை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள். காப்புரிமை பிரச்சனை ஏற்படும் என்பதால், ஒரே நாட்டில் இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. ஆனால் ஒரு நாட்டில் விற்பனை செய்யப்படும் காரின் பெயர் ஆனது வேறொரு நாட்டில் வேறொரு பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படலாம். உதாரணத்திற்கு, ரெனால்ட் சிட்டி, இந்தியாவில் ஹோண்டா சிட்டி.

ஆனால் ஒரு சில நிறுவனங்கள் கார்களுக்கான பெயர்களை உலகம் முழுவதுக்குமே தங்களுக்கு தான் சொந்தம் என்பதுபோல் உரிமையை பெற்றிருக்கும். அவ்வாறுதான், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 'சஃபாரி' பெயருக்கான காப்புரிமையை கொண்டுள்ளது. சஃபாரி பெயரை தனது 911 டக்கர் காருக்கு சூட்ட போர்ஷே எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முடியாது என மறுத்துள்ளது. இதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியுலகிற்கு தெரியவந்துள்ளன.

‘சஃபாரி’ பெயரை கேட்ட பிரபல கார் நிறுவனம் - டாடா சொன்ன பதில்!

உலகளவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான போர்ஷேவின் பிரபலமான கார்களுள் 911 மாடலும் ஒன்று என சொல்லலாம். 911 காரின் ராலி-ரெடி வெர்சன் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 911 டக்கர் என்ற பெயரில் வெளியீடு செய்யப்பட்டது. வழக்கமான 911 காரை காட்டிலும் சற்று உயரம் அதிகமானதாக, ஆஃப்-ரோடு திறன்களுடன் உருவாக்கப்பட்டுள்ள 911 டக்கர் கார் உலகளவில் பலத்தரப்பட்ட ரசிகர்களை குறுகிய காலத்தில் பெற்றுள்ளது. குறிப்பாக, துபாய், சவுதி அரேபியா போன்ற மேற்காசிய நாடுகளில் இந்த டக்கர் ராலி வெர்சன் கார் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

வடிவமைப்பு பணிகளில் இருக்கும்போது இந்த காருக்கு சில சவால்கள் இருந்துள்ளன. அவை யாவும் தற்போது 911 டக்கர் திட்டத்தின் இயக்குனர் தாமஸ் கிரிக்கெல்பர்க்கின் மூலம் வெளிவந்துள்ளன. வடிவமைப்பு பணிகளில் இருக்கும்போது 911 டக்கர் காரை 911 சஃபாரி என அழைக்க போர்ஷே திட்டமிட்டது. எந்தவொரு சாலைக்கும் செல்லக்கூடிய காருக்கு சஃபாரி என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். மேலும் அதற்கேற்ப, 911 டக்கர் காரின் தோற்றமும் முரட்டுத்தனமானதாக வடிவமைக்கப்பட்டது.

911 டக்கர் காரில் வலிமையான சஸ்பென்ஷன், அளவில் பெரியதான டயர்கள் உள்பட ஆஃப்-ரோட்டிற்கு ஏற்ற மற்ற அம்சங்களையும் போர்ஷே வழங்கியுள்ளது. இருப்பினும், சஃபாரி என்ற பெயரை போர்ஷே நிறுவனத்தால் பெற முடியவில்லை. ஏனெனில் 'சஃபாரி' பெயருக்கான உரிமையை ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுவிட்டதாக கூறிவிட்டோம் அல்லவா. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1998ஆம் ஆண்டிலேயே சஃபாரி பெயரில் காரை அறிமுகம் செய்துவிட்டது.

டாடா சஃபாரி காரை பற்றி பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். சந்தையில் டாடா நிறுவனம் தற்போதைய நிலைக்கு முன்னேற்றம் கண்டு இருப்பதற்கு சஃபாரியும் ஒன்று என்றால் அது மிகையில்லை. இதனாலேயே அதே சஃபாரி பெயர்பலகையை மீண்டும் கடந்த 2021ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டுவந்தது. இதற்கு பின்னர் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் சஃபாரி பெயருக்கான உரிமையை வழங்க போர்ஷே கோரிக்கை வைத்திருக்கும். ஆனால் இந்த கோரிக்கையை டாடா நிறுவனம் மறுத்துவிட்டதாக கிரிக்கெல்பர்க் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சரி... 911 டக்கர் பெயர் ஆவது எளிதாக போர்ஷே நிறுவனத்திற்கு கிடைத்ததா என்றால், அதுவும் இல்லை. ஏனெனில் டக்கர் பெயருக்கான உரிமையை ASO எனப்படும் அமௌரை ஸ்போர்ட் ஆர்கனைசேஷன் கொண்டுள்ளது. டக்கர் ராலி போட்டிகளை நடத்துவதும் இந்த ASO நிறுவனம்தான். இருப்பினும் டக்கர் என்பது செனெகல் என்ற நாட்டில் உள்ள நகரம் என்பதால் டக்கர் பெயருக்கான காப்புரிமையை பெற போர்ஷே நிறுவனத்திற்கு பெரியதாக கஷ்டமாக இல்லை.

ஏனென்றால் டாடா மோட்டார்ஸை போன்று ASO ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் கிடையாது. இருப்பினும், 911 சஃபாரி பெயரை பெறாதது போர்ஷே குழுவினரை மனதளவில் பாதித்துவிட்டது. இத்தோடு பிரச்சனைகள் முடிந்துவிடவில்லை, 911 டக்கர் காரின் உட்பாகங்கள் கிடைப்பதில் பிரச்சனைகள் ஏற்பட்டதினால், காரின் உற்பத்தி பணிகள் எதிர்பார்த்ததை காட்டிலும் தாமதமாகின. இருப்பினும் ஒருபக்கம் இந்த காரை தயாரிக்க திட்டமிடப்பட்ட எண்ணிக்கைகள் 2,000இல் இருந்து 2,500 ஆக அதிகரிக்கப்பட்டன. அதேபோல், உற்பத்தி செலவுகளை குறைக்கவும் முயற்சிகள் நடந்தன.

Most Read Articles
English summary
Porsche requested tata motors to allow to use safari name tata denied
Story first published: Tuesday, January 31, 2023, 20:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X