சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா! ரகசிய ஆயுதத்தை களமிறக்கும் முன்னணி நிறுவனம்! நெருக்கடியில் சிக்கிய டாடா!

இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டாடா (Tata), எம்ஜி (MG) மற்றும் ஹூண்டாய் (Hyundai) போன்ற நிறுவனங்கள் இங்கு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகின்றன. அதே நேரத்தில் மஹிந்திரா (Mahindra) உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி கொண்டுள்ளன.

இதில், ரெனால்ட் (Renault) நிறுவனமும் ஒன்றாகும். இந்திய சந்தையில் ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் (Kwid) மற்றும் கைகர் (Kiger) போன்ற கார்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. இதில் க்விட் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் (Renault Kwid EV), இந்திய சந்தைக்கான ரெனால்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த விஷயத்தில் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்கள் தற்போது அரங்கேறி வருகின்றன.

சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா! ரகசிய ஆயுதத்தை களமிறக்கும் முன்னணி நிறுவனம்! நெருக்கடியில் சிக்கிய டாடா!

வருகிறது ரெனால்ட் கைகர் எலெக்ட்ரிக் கார்!

ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தைக்கான தனது முதல் எலெக்ட்ரிக் காராக, கைகர் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெனால்ட் கைகர் எலெக்ட்ரிக் கார் (Renault Kiger EV), இந்திய சாலைகளில் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும் மாடல், கிட்டத்தட்ட தயாரிப்பிற்கு உகந்த நிலையில் உள்ளது.

எனவே வெகு விரைவிலேயே ரெனால்ட் கைகர் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். அதற்கு முன்னதாக இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போவில் (2023 Auto Expo), ரெனால்ட் கைகர் எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வாகன திருவிழாவான ஆட்டோ எக்ஸ்போவில் ரெனால்ட் கைகர் எலெக்ட்ரிக் கார் தரிசனம் வழங்கினால், நமது மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அதுவும் ரெனால்ட் கைகர் எலெக்ட்ரிக் காரின் உலகளாவிய அறிமுகம் இந்திய மண்ணில் அரங்கேறினால், அது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயமாகும்.

சிங்கிள் சார்ஜில் இவ்ளோ தூரம் ஓடுமா! ரகசிய ஆயுதத்தை களமிறக்கும் முன்னணி நிறுவனம்! நெருக்கடியில் சிக்கிய டாடா!

வெளிப்புற டிசைன்!

டிசைனை பொறுத்தவரையில், இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் ரெனால்ட் கைகர் காரை போன்றேதான், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் கிட்டத்தட்ட இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் எலெக்ட்ரிக் கார் என்பதால், ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம். இதன்படி முன் பகுதியில் உள்ள ரெனால்ட் லோகோவிற்கு கீழே, சார்ஜ் செய்வதற்கான போர்ட் வழங்கப்படலாம். மேலும் எலெக்ட்ரிக் கார் என்பதை குறிக்கும் வகையிலான பேட்ஜ்களும் இடம்பெற்றிருக்கும்.

உட்புற டிசைன்!

அதேபோல் இந்த எலெக்ட்ரிக் காரின் உட்புறமும், தற்போது விற்பனையில் உள்ள மாடலை போன்றேதான் கிட்டத்தட்ட இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரெனால்ட் கைகர் எலெக்ட்ரிக் காரில், வழக்கமான கியர் லிவர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதற்கு பதிலாக ட்ரைவ் மோடு ஸ்விட்ச்கள் கொடுக்கப்படலாம். இதுதவிர 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரேஞ்ச் எவ்ளோ!

ஆனால் ரெனால்ட் கைகர் எலெக்ட்ரிக் காரை பற்றிய தொழில்நுட்ப விபரங்கள் இன்னும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. எனினும் ஒரு முறை முழுமையாக நிரப்பினால், குறைந்தபட்சம் 300 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய கூடிய வகையிலான பேட்டரியை, ரெனால்ட் கைகர் எலெக்ட்ரிக் கார் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைகர் எலெக்ட்ரிக் கார் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்களை, ரெனால்ட் நிறுவனம் வெகு விரைவில் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

போட்டியாளர்கள்!

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களின் விற்பனை சக்கை போடு போடுகிறது. ரெனால்ட் கைகர் காரும் இந்த செக்மெண்ட்டை சேர்ந்த ஒன்றுதான். இந்த செக்மெண்ட்டில் முன்னணி இடத்தில் உள்ள டாடா நெக்ஸான் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்திய சந்தையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு (Tata Nexon EV), ரெனால்ட் கைகர் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சவால் அளிக்கும்.

இதுதவிர விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் (Tata Punch EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கும், ரெனால்ட் கைகர் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் கடுமையான சவாலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா பன்ச் எலெக்ட்ரிக் கார் மற்றும் சிட்ரோன் இசி3 எலெக்ட்ரிக் கார் ஆகியவையும், 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் காரும் வருது!

கைகர் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதால், ரெனால்ட் நிறுவனம் க்விட் எலெக்ட்ரிக் கார் திட்டத்தை கைவிடவில்லை. முதலில் எது விற்பனைக்கு வருகிறது? என்ற திட்டத்தில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனேகமாக ரெனால்ட் கைகர் எலெக்ட்ரிக் கார், நடப்பு 2023ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.

Most Read Articles
English summary
Renault kiger electric car india launch details
Story first published: Monday, January 9, 2023, 14:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X