எஸ்யூவி காரை வாங்க பிளான் பண்றவங்க... இந்த 4 புதிய எஸ்யூவிகளுக்காக வெயிட் பண்ணலாம், தப்பே இல்ல!!

இந்தியாவில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் எஸ்யூவி வாகனம் என்று பார்த்தால், அது ஜிம்னி ஆகும். மஹிந்திரா தார் ஆஃப்-ரோடு வாகனத்திற்கு போட்டியாக கொண்டுவரப்படும் ஜிம்னியை தொடர்ந்து மேலும் சில எஸ்யூவி கார்களும் இந்திய சந்தைக்குவர உள்ளன. அவை என்னென்ன என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

1. சிட்ரோன் இ-சி3

விற்பனையில் உள்ள சிட்ரோன் சி3 சப்-4 மீட்டர் எஸ்யூவி காரின் எலக்ட்ரிக் வெர்சனாக இ-சி3 விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. வெளிப்பக்கத்தை தோற்றத்தை பொறுத்தவரையில், பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. எலக்ட்ரிக் கார் என்பதால், பின்பக்கத்தில் எக்ஸாஸ்ட் குழாய் இருக்காது, ஆனால் முன்பக்க ஃபெண்டரில் சார்ஜிங் துளை இருக்கும்.

இந்த 4 புதிய எஸ்யூவிகளுக்காக வெயிட் பண்ணலாம், தப்பே இல்ல!!

உட்பக்க கேபினில் புதிய டிரைவ் செலக்டருடன் வடிவமைக்கப்பட உள்ள இ-சி3 எலக்ட்ரிக் கார் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், தமிழகத்தில் தான் சிட்ரோன் நிறுவனத்திற்கு தொழிற்சாலை உள்ளது. இ-சி3 எலக்ட்ரிக் காரில் 29.2kWh பேட்டரி தொகுப்பும், எலக்ட்ரிக் மோட்டாரும் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பொருத்தப்பட உள்ளன. இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக 57 எச்பி மற்றும் 143 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை பெறலாம்.

2. மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ்

சமீபத்தில் நடந்து முடிந்த 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட புதிய மாருதி சுஸுகி கிராஸ்ஓவர் கார் தான் ஃப்ரான்க்ஸ் ஆகும். வருகிற ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் இந்த புதிய மாருதி காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப் மையங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த 4 புதிய எஸ்யூவிகளுக்காக வெயிட் பண்ணலாம், தப்பே இல்ல!!

ஃப்ரான்க்ஸ் காரில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் மேனுவல் & ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுள் ஒன்றை தேர்வு செய்யலாம். பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் கார் பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் இந்த காரில் தொழிற்நுட்ப அம்சங்களிலும் எந்த வேறுப்பாடும் இல்லை.

3. மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி

கடந்த 2022ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்சன் கார் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் உடன் சிஎன்ஜி வெர்சனில் கொண்டுவரப்படும் முதல் காம்பெக்ட் எஸ்யூவி காரான பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் விலைகள் இன்னும் சில வாரங்களில் வெளியிடப்பட உள்ளன.

4. லெக்ஸஸ் ஆர்.எக்ஸ்

லெக்ஸஸ் ஆர்.எக்ஸ் லக்சரி எஸ்யூவி காரின் புதிய ஐந்தாம் தலைமுறை மாடல் கடந்த ஜனவரி மாதத்தில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கார் வரும் நாட்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது. ஆர்.எக்ஸ் 350எச் லக்சரி மற்றும் ஆர்.எக்ஸ் 500எச் ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ஸ் என மொத்தம் 2 விதமான வேரியண்ட்களில் இந்த லெக்ஸஸ் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த 4 புதிய எஸ்யூவிகளுக்காக வெயிட் பண்ணலாம், தப்பே இல்ல!!

இந்த வேரியண்ட்களில் 2.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என இரு விதமான ஹைப்ரீட் என்ஜின் தேர்வுகள் வேரியண்ட்டை பொறுத்து வழங்கப்பட உள்ளன. இதில் 2.4 லிட்டர் என்ஜின் உடன் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய புதிய லெக்ஸஸ் ஆர்.எக்ஸ் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே அனைத்து லெக்ஸஸ் கெஸ்ட் எக்ஸ்பிரீயன்ஸ் மையங்களில் துவங்கப்பட்டு விட்டன.

Most Read Articles
English summary
Soon launching suv cars in pipeline for indian market
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X