அடேங்கப்பா... இப்படியொரு மலிவான எலக்ட்ரிக் காரை கொண்டுவருகிறதா ரெனால்ட்!! அப்போ இதையே வாங்கிடலாம்

எலக்ட்ரிக் கார்களை வாங்குவோர் நாடு முழுவதும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றனர். இதனை கடந்த சில வருடங்களாகவே நமது செய்தித்தளத்தில் கூறி வருகிறோம். இருப்பினும் நம் நாட்டில் உள்ள எலக்ட்ரிக் காரை விற்பனை செய்யும் நிறுவனம் என்று பார்த்தால் தற்போதைக்கு டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் என சில நிறுவனங்கள் மட்டுமே உள்ளன.

மஹிந்திரா அடுத்ததாக எக்ஸ்யூவி400 காரின் மூலம் நுழைய தயாராகி வருகிறது. இந்த நிலையில் க்விட் இவி காரின் வாயிலாக இந்த ரேஸில் ரெனால்ட்டும் களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி நிறுவனமான நிஸான் உடன் இணைந்து இவி-இல் இறங்கும் முயற்சியில் ரெனால்ட் ஈடுப்பட்டு வருகிறதாம். அதாவது, மற்ற கார்கள் உற்பத்திக்கு மட்டும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் இவி-யிலும் கவனம் செலுத்த ரெனால்ட் தயாராகி வருகிறது.

ரெனால்ட் க்விட் இவி தயாராகிறதா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

அதேபோல் ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான நிஸானும் எலக்ட்ரிக் வாகனங்களிலும், அதற்கான தொழிற்சாலைகளை நிறுவுவதிலும் மும்முரம் காட்டி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், லீஃப் உள்பட நிஸான் நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்கள் சில வெளிநாட்டு சந்தைகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. ஆனால் நம் நாட்டிற்கும் தான் தற்போதுவரையில் எந்தவொரு நிஸான் எலக்ட்ரிக் காரும் வரவில்லை. இந்த குறை விரைவில், நிஸானின் கூட்டு நிறுவனமான ரெனால்ட்டின் க்விட் இவி மூலம் சரிச்செய்யப்படும் என எதிர்பார்ப்போம்.

விரைவில் எலக்ட்ரிக் வெர்சனில் எதிர்பார்க்கப்படும், விற்பனையில் உள்ள க்விட் கார் ஆனது ரெனால்ட்டின் அளவில் சிறிய ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் உள்ள 3 ரெனால்ட் கார்களுள் ஒன்று. க்விட் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை பெரிய அளவில் இல்லை என்றாலும், இவி வெர்சனிலாவது இந்தியாவில் தனது சந்தை பங்கு அதிகரிக்குமா என்று பார்ப்போம் என்றே ரெனால்ட் கணிந்திருக்கக்கூடும். அதுமட்டுமின்றி, பல்வேறு கார் பிராண்ட்கள் மெல்ல மெல்ல இவி-ஐ நோக்கி நகர்ந்து வருகின்றன.

ரெனால்ட் க்விட் இவி தயாராகிறதா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

இதில் தன்னையும் ஈடுப்படுத்தி கொள்ள ரெனால்ட் எடுக்கவுள்ள முயற்சியாகவே இதனை பார்க்கிறோம். அதுவுமில்லாமல், க்விட் எலக்ட்ரிக் காரை தயாரிப்பது ஒன்றும் ரெனால்ட்டிற்கு புதியது அல்ல. ஏனெனில் க்விட் இவி ஏற்கனவே சீனாவில் விற்பனையில் உள்ளது. சீனா, நம் இந்தியாவை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகம் விற்பனையாகும் நாடு. இதனாலேயே க்விட் இவி மட்டுமின்றி, சிட்டி கே-இசட்.இ என்ற எலக்ட்ரிக் காரையும் சீனாவில் ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்கிறது.

சீனாவில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்வது எளிமையானதாகவும், மற்ற ஐரோப்பிய நாடுகளை காட்டிலும் செலவு குறைந்ததாகவும் இருப்பதால் டேசியா ஸ்பிரிங் என்ற எலக்ட்ரிக் காரை சீனாவில் இருந்து பிரான்ஸிற்கு ரெனால்ட் ஏற்றுமதி செய்து வருகிறது. ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 230கிமீ தொலைவிற்கு பயணிக்கக்கூடியதாக உள்ள டேசியா ஸ்பிரிங் பிரான்ஸ் நாட்டில் கடந்த 2022இல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 2வது எலக்ட்ரிக் வாகனமாகும்.

ரெனால்ட் க்விட் இவி தயாராகிறதா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

இதற்கு காரணங்களுள் ஒன்று, அந்த நாட்டில் இந்த எலக்ட்ரிக் காரின் விலையும் ஆகும். பிரான்ஸில் டேசியா ஸ்பிரிங் காரின் விலை 20,800 யூரோக்கள் மட்டுமே. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.18.29 லட்சம் மட்டுமே. நம்மை பொறுத்தவரையில் இந்த தொகை அதிகமாக இருக்கலாம். ஆனால் பிரான்ஸ் நாட்டு மக்களை பொறுத்தவரையில் குறைவே ஆகும். அதுவுமில்லாமல், இது அரசாங்கத்தின் மானியங்களுக்கு முந்தைய விலை ஆகும். மானியங்களை சேர்த்தால் இந்த விலை இன்னும் குறையும்.

இருப்பினும் டேசியா ஸ்பிரிங் எலக்ட்ரிக் காரை நம் நாட்டில் ரெனால்ட் கொண்டுவருவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும் என்பது உறுதி. ஏனெனில் விலை ஒருபக்கம் குறையாக இருக்கும் என்றாலும், மறுப்பக்கம் தற்போதைக்கு இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை. ஏனென்றால், இந்திய சந்தையில் கடந்த 2022இல் விற்பனை செய்யப்பட்ட மொத்த கார்கள் எண்ணிக்கையில் வெறும் 1% மட்டுமே எலக்ட்ரிக் கார்களாகும். ஆனால் இந்த எண்ணிக்கையை 2030க்குள் குறைந்தது 30% ஆக உயர்த்த மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ரெனால்ட் #renault
English summary
Sources said renault planning to launch kwid ev in india
Story first published: Monday, January 9, 2023, 11:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X