இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...

சில, பல வருடங்களுக்கு முன் டபுள்-டக்கர் பேருந்துகள் நம் நாடு முழுவதும் பிரபலமாகின. 2வது தளத்துடனும், 2வது தளத்திற்கு மேற்கூரை இல்லாமலும் இருந்தது அந்த சமயத்தில் பயணிகள் மத்தியில் வேகமாக வரவேற்பை பெற துவங்கியது. ஆனால் மிகவும் சில ஆண்டுகளிலேயே பயணிகளின் பாதுகாப்பு கருதி டபுள்-டக்கர் பேருந்துகளின் பயன்பாடு மெதுவாக நிறுத்தி கொள்ளப்பட்டன.

இந்தியாவில் மிகவும் சில நகரங்களில் இப்போதும் இவ்வாறான டபுள்-டக்கர் பேருந்துகள் இயங்கி கொண்டிருக்கின்றன என்றாலும், நமது சென்னையில் அவை பயன்பாட்டில் இல்லை. இந்த நிலையில், ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனம் இந்தியாவில் முதல் மற்றும் தனித்துவமான எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தை ஸ்விட்ச் இஐவி 22 என்ற பெயரில் மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி முன்னிலையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்து அறிமுகம்!

டபுள்-டக்கர் பேருந்துகளின் நினைவுகளை மீண்டும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப அட்வான்ஸான எலக்ட்ரிக் தொழிற்நுட்பத்தில் கொண்டுவருவது இந்த ஸ்விட்ச் பேருந்தின் சிறப்பு ஆகும். ஏசி வசதி உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்து ஆனது தொடர்ந்து அதிகரித்துவரும் நகர்புற மக்கள் தொகை அதிகரிப்பை சமாளிக்கும் வகையில் இருக்கும். மற்றப்படி இந்த பேருந்தை அதிவேக, தொலைத்தூர பயணங்களுக்கு பயன்படுத்துவது என்பது இயலாத காரியம்.

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள ஸ்விட்ச் இஐவி 22 பேருந்து இண்டர்-சிட்டி பேருந்து மார்க்கெட்டில் புதிய ஸ்டாண்டர்டை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகலமான ஜன்னல் கண்ணாடிகளை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தில் 2வது தளத்திற்கு செல்வதற்கான படிக்கட்டுகள் பேருந்திற்கு முன் மற்றும் பின்பகுதிகளில் உள்ளன. எடை குறைவான அலுமினியத்தால் இந்த பேருந்து உருவாக்கப்பட்டு இருந்தாலும், அதிக எண்ணிக்கையில் பயணிகளை இந்த பேருந்தில் ஏற்றி கொள்ளலாமாம்.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்து அறிமுகம்!

வழக்கமான சிங்கிள்-டக்கர் பேருந்துகளின் சராசரி இருக்கைகள் எண்ணிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இந்த புதிய ஸ்விட்ச் இஐவி22 பேருந்தில் 2 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் அந்த பேருந்துகளை காட்டிலும் இந்த டபுள்-டக்கர் பேருந்தின் கெர்ப் எடை வெறும் 18% மட்டுமே அதிகமாகும். 2022 ஜூன் மாதத்தில் ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இ1 பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பேருந்தில் 650 வோல்ட் எலக்ட்ரிக் சர்க்யூட் இடம்பெற்றுள்ளது.

மக்கள் அடர்த்தி மிகுந்த நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்ப இந்த பேருந்தில் முன் மற்றும் பின் கதவுகள் நன்கு அகலமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் தற்கால பாதுகாப்பு தரங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பேருந்தில் 2 தளங்களிலும் அவசர கால கதவுகள் இடம் பெற்றுள்ளன. இந்த டபுள்-டக்கர் பேருந்தில் மொத்தம் 65 இருக்கைகள் உள்ளன. இலகுவான குஷின் உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஒவ்வொரு இருக்கைகளுடனும் ஸ்விட்ச் இஐவி22 பேருந்தின் கேபின் ஆனது நமக்கு காரின் கேபின் போன்றதான தோற்றத்தை வழங்குகிறது.

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்து அறிமுகம்!

புதிய இஐவி22 எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தில் 231kWh திறன் உடன் அதிக அடர்த்தி கொண்ட 2-ஸ்ட்ரிங், லிக்யுடு-கூல்டு, நிக்கல்-மாங்கனீசு-கோபால்ட் பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ட்யூவல் கன் சார்ஜிங் சிஸ்டத்தை ஸ்விட்ச் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலமாக பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் ஸ்விட்ச் இஐவி22 எலக்ட்ரிக் பேருந்தை அதிகப்பட்சமாக 250கிமீ தொலைவிற்கு இயக்கி செல்ல முடியும்.

இந்த எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தை மொத்தம் 200 யூனிட்கள் தயாரித்து வழங்க கோரி ஏற்கனவே மும்பை மாநகராட்சியிடம் இருந்து ஸ்விட்ச் மொபைலிட்டி நிறுவனத்திற்கு ஆர்டர் வந்துள்ளது. மும்பையை தொடர்ந்து இந்தியாவின் மற்ற முக்கிய மாநகரங்களுக்கும் இஐவி22 எலக்ட்ரிக் டபுள்-டக்கர் பேருந்தை கொண்டு செல்வதில் ஸ்விட்ச் நிறுவனம் முனைப்புடன் உள்ளது. முற்றிலும் இந்தியாவில் கிடைக்கும் பாகங்களை கொண்டு தயாரிக்கப்படுவதால், ஆர்டர்கள் முறையாக கிடைத்தால் ஃபேம் 2 திட்டத்தின் மூலம் கிடைக்கும் மானியங்களை பெற்று இஐவி22 எலக்ட்ரிக் பேருந்தை உருவாக்கி வழங்குவதில் ஸ்விட்ச் நிறுவனத்திற்கு பெரியதாக எந்த பிரச்சனையும் இருக்காது.

Most Read Articles
English summary
Switch mobility unveils indias first electric double ducker bus switch eiv22
Story first published: Wednesday, February 1, 2023, 11:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X