ஏற்கனவே அரசியல்வாதிகள் கூட்டம் கூட்டமா வந்து வாங்கிட்டு இருக்காங்க! இதுல டாடா வேற இத செஞ்சிருச்சா?

டாடா மோட்டார்ஸ் அதன் ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களில் டார்க் மற்றும் ரெட் டார்க் எடிசன் எனும் சிறப்பு பதிப்புகளை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களும் அடங்கும். இந்த கார் மாடல்களின் சிறப்பு பதிப்புகளையே டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் காட்சிப்படுத்தி இருக்கின்றது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்த சிறப்பு பதிப்பு கார் மாடல்களை காட்சிப்படுத்தி இருக்கின்றது. ஹாரியர் ரெட் டார்க் எடிசன், ஹாரியர் டார்க் எடிசன், சஃபாரி ரெட் டார்க் எடிசன் மற்றும் சஃபாரி டார்க் எடிசன் எனும் மாடல்களையே நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கின்றது.

டார்க் எடிசன்

வழக்கமான சஃபாரி மற்றும் ஹாரியர் கார் மாடல்களைக் காட்டிலும் இது முற்றிலும் கவர்ச்சியான எடிசன்களாக உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, டார்க் எடிசன் முற்றிலும் கருப்பு நிறத்தாலும், டார்க் ரெட் எடிசன் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களாலும் அலங்காரமும் செய்யப்பட்டு உள்ளது. இவையே வழக்கமான கார் மாடல்களில் இருந்து இந்த காரை வேறுபடுத்திக் காட்டும் மிக முக்கியமான மாற்றங்கள் ஆகும்.

அடாஸும் சேர்த்திருக்காங்க

இதுமட்டும் இல்லைங்க மிக முக்கியமான தொழில்நுட்பமான அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டமும் இந்த சிறப்பு பதிப்பு கார் மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கின்றது. அடாஸ் என்பது தன்னிச்சையாக பிரேக் பிடித்தல், தானாக பிரேக் செய்தல், டிரைவரே இல்லாமல் லேனுக்கு ஏற்ப காரை இயக்குதல் போன்ற பல்வேறு செயல்களைச் செய்யக் கூடிய தொழில்நுட்பம் ஆகும். இதுமட்டுமின்றி, ஃபார்வார்டு கொலிசன், டிராஃபிக் சிக்னலுக்கு ஏற்ப காரை கட்டுப்படுத்தும் வசதியையும் இந்த காரில் நம்மால் பெற முடியும்.

டார்க் எடிசன்

புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இது தவிர விபத்தை தவிர்த்தல் மற்றும் ஆறு ஏர் பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன், புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் இந்த சிறப்பு பதிப்புகளில் வழங்கப்பட்டு உள்ளன. இது சற்று பெரியதாக இருக்கும். 10.25 அங்குல திரையே பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்ட அம்சங்களும் டார்க் மற்றும் ரெட் டார்க் எடிசனில் வழங்கப்பட்டு இருக்கும்.

கூடுதல் சிறப்பம்சங்கள்

கூடுதல் சிறப்பு வசதிகளாக எலெக்ட்ரிக்கலி அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கையும், முன்பக்கத்தில் வெண்டிலேட் அம்சம் கொண்ட இருக்கையும் வழங்கப்பட்டுள்ளது. சஃபாரியின் சிறப்பு பதிப்பில் மட்டும் கூடுதலாக வெண்டிலேட் அம்சம் கொடுக்கப்பட்டிருக்கும். இத்துடன், பயணிகளுக்காக 'பாஸ்' எனும் ஸ்பெஷல் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கும். இது பின் பக்க பயணிகள் இருக்கையை நகர்த்துவதற்கு உதவும். இத்துடன், ஆம்பியன்ட் லைட் பனோரமிக் சன்ரூஃப் சுற்றிலும் வழங்கப்பட்டிருக்கும்.

டார்க் எடிசன்

காஸ்மெட்டிக் மாற்றம்

காஸ்மெட்டிக் மாற்றங்களும் இந்த சிறப்பு பதிப்பு கார் மாடல்களில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ரெட் டார்க் எடிசனில் சிவப்பு நிற பிரேக் காலிபர்கள் மற்றும் சிவப்பு நிற இன்செர்டுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. காரின் முன் பக்க கிரில், காரின் உட்பக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில் டார்க் எடிசன் மற்றும் ரெட் டார்க் எடிசன் இரண்டிலும் நிறுவனம் ஓப்ரான் கருப்பு என்று அழைக்கப்படும் கருப்பு நிறத்தையே பயன்படுத்தி இருக்கின்றது.

இதுதவிர காரின் உட்பக்கத்தில் 'கார்நெலியன்' எனப்படும் சிவப்பு நிற லெதரை பயன்படுத்தி இருக்கின்றது. இத்துடன் அனைத்து கை பிடிகளிலும் சிவப்பு நிற லெதரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக கிரே நிறத்தில் டேஷ்போர்டையும், பியானோ கருப்பு நிறத்தில் ஸ்டியரிங் வீலிலும் டாடா அலங்கரித்து உள்ளது. இத்தகைய மாற்றங்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் டார்க் எடிசன் மற்றும் ரெட் டார்க் எடிசனில் செய்திருக்கின்றது.

மெக்கானிக்கல் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் அது செய்யவில்லை. ஆகையால், வழக்கமான ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களில் காட்சியளிக்கும் டீசல் மோட்டாரே இந்த சிறப்பு பதிப்புகளிலும் காட்சியளிக்கிறது. இந்த சூப்பரான பதிப்புகளை நிறுவனம் எப்போது விற்பனைக்குக் கொண்டு வரும் என்கிற விபரம் வெளியிடப்படவில்லை. இதுகுறித்த தகவல் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த நாளிலேயே கார்களின் விலையும் அறிவிக்கப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Tata harrier safari red dark editions
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X