புதிய டாடா எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்களை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்! டெலிவரி தொடங்கியது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV), கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விலை குறைவான எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவை 24 kWh மற்றும் 19.2 kWh பேட்டரிகள் ஆகும். இதில், 24 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 315 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 19.2 kWh பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 250 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இவை மிகவும் சிறப்பான டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) என்பதில் சந்தேகம் இல்லை.

புதிய டாடா எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்களை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்! டெலிவரி தொடங்கியது!

நீண்டு கொண்டே செல்லும் வசதிகளின் பட்டியல்!

விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் கூட, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதில் ஏராளமான வசதிகளை (Features) வழங்கியுள்ளது. இதில், 45 கனெக்டட் வசதிகளுடன் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் முக்கியமானது. இதுதவிர மழை வந்தால் தானாகவே இயங்க கூடிய வைப்பர்கள், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் என டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள வசதிகளை அடுக்கி கொண்டே போகலாம். அதே நேரத்தில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ஜிப்ட்ரான் தொழில்நுட்பம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் (Tata Nexon EV) மற்றும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் (Tata Tigor EV) என 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் மூன்றாவதாக களமிறக்கப்பட்டுள்ள எலெக்ட்ரிக் தயாரிப்புதான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார். மேற்கண்ட 2 எலெக்ட்ரிக் கார்களை போலவே, டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரும் ஜிப்ட்ரான் தொழில்நுட்பத்தின் (Ziptron Technology) அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

புதிய டாடா எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! ஷோரூம்களை மொய்க்கும் வாடிக்கையாளர்கள்! டெலிவரி தொடங்கியது!
Image Courtesy: Marina Motors Calicut

இந்த விலைக்கு இப்படி ஒரு எலெக்ட்ரிக் காரா!

இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை (Price) வெறும் 8.49 லட்ச ரூபாய் மட்டுமே என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த கூடிய ஒரு விஷயம் ஆகும். அதே நேரத்தில் இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் வேரியண்ட்டின் விலை 11.79 லட்ச ரூபாய் மட்டும்தான். இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது அறிவிக்கப்பட்ட அறிமுக சலுகை விலையாகும்.

ராஜா... நான் ராஜா!

அதாவது முதலில் முன்பதிவு (Bookings) செய்யும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலையில் டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியிருந்தது. எனவே முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு 10 ஆயிரம் முன்பதிவுகள் குவிந்து விட்டன. ஏற்கனவே இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக் ரக கார் (India's Most Affordable Electric Hatchback) என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வைத்துள்ளது. இந்த சூழலில் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்த காரணத்தால், இந்தியாவில் மிகவும் வேகமாக அதிகம் பேரால் முன்பதிவு செய்யப்பட்ட எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையையும் இது பெற்றது.

வெளியான மகிழ்ச்சி செய்தி!

வாடிக்கையாளர்கள் ஆர்ப்பரிப்பதை உணர்ந்து கொண்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனம், மேலும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு அறிமுக சலுகை விலையை நீட்டித்தது. எனவே தற்போது வரை டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு 20 ஆயிரம் முன்பதிவுகள் குவிந்து விட்டன. இந்த சூழலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மீண்டும் ஒரு முறை அறிமுக சலுகையை விலையை தற்போது நீட்டித்துள்ளது. இதன் மூலம் மேலும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இந்த குறைவான விலையிலேயே டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்ய முடியும். இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெலிவரி தொடங்கியது!

இந்த சூழலில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு டியாகோ எலெக்ட்ரிக் காரை டெலிவரி (Delivery) செய்யும் பணிகளை இந்தியா முழுவதும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக 133 நகரங்களில், 2 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. முன்பதிவுகள் பல்லாயிரக்கணக்கில் குவிந்து கொண்டே வருவதால், இந்திய சாலைகளை ஆட்சி செய்யும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் தன்வசப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக தென்படுகின்றன.

Most Read Articles
English summary
Tata tiago ev deliveries begin in india all you need to know
Story first published: Friday, February 3, 2023, 17:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X