யூஸ்டு மார்கெட்டின் சூப்பர் ஸ்டார்னு சொல்லலாம்... செகண்ட் ஹேண்டில் வாங்க மிக சிறந்த 5 சிறிய கார்கள்!

நீங்கள் ஓர் மிக பெரிய சிறிய கார் விரும்பியா?, மேலும், செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் சிறிய ரக காரை திட்டம் போட்டு இருக்கீங்களா?, உங்களுக்கான பதிவையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அதாவது, யூஸ்டு கார் மார்க்கெட்டில் வாங்குவதற்கு உகந்த டாப் 5 சிறிய கார் மாடல்கள் பற்றிய தகலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் சிறிய உருவம் கொண்ட வாகனங்களுக்கு எப்போவுமே நல்ல வரவேற்பு உண்டு. புதிய வாகன சந்தையில் மட்டும் இல்லைங்க, செகண்ட் ஹேண்ட் சந்தையிலும் குட்டியான தோற்றம் கொண்ட கார் மாடல்களுக்கு சூப்பரான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. சிறிய காரை வைத்திருப்பதனால் பல்வேறு பலன்கள் உள்ளன. சிறிய பார்க்கிங் ஸ்லாட்டே அவற்றிற்கு போதுமானது. இதுமட்டுமில்லைங்க, நெரிசல் மிகுந்த சாலைகளில் சிறிய காரை இயக்குவது மிகவும் சுலபமானது. இதுவே பலர் பெரிய உருவம் கொண்ட கார்களுக்கு பதிலாக சிறிய உருவம் கொண்ட கார்களை பயன்படுத்த காரணமாக உள்ளது.

கார்

சிறிய கார்கள் மைலேஜ் கொடுப்பதிலும் திறன்மிக்கவையாக இருக்கின்றன. குறிப்பாக, பட்ஜெட் விலையில் புதிய காரையே வாங்கிவிட முடியும். செகண்ட் ஹேண்ட் சந்தையில் பலமடங்கு குறைவான விலையில் சிறிய கார் மாடல்களை வாங்கி விடமுடியும். இதனால்தான் அவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதிலும், குறிப்பிட்ட ஐந்து சிறிய கார் மாடல்கள் இந்தியாவின் செகணட் ஹேண்ட் சந்தையையே ஆளும் வகையில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் எல்எக்ஸ்ஐ (Maruti Suzuki Swift LXi)

செகண்ட் ஹேண்ட் கார் மார்கெட்டில் நல்ல வரவேற்பைப் பெறும் சிறிய கார் மாடலாக ஸ்விஃப்ட் இருக்கின்றது. அதிலும், இந்த கார் மாடலின் எல்எக்ஸ்ஐ வேரியண்டிற்கு டிமாண்ட் சற்று அதிகம் என கூறலாம். இவற்றை இந்தியர்கள் சிலர் தேடிபிடித்து வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பிரீமியம் அம்சங்கள் என பல தரப்பட்ட வசதிகள் மிக தாராளமாக வழங்கப்பட்டிருப்பதே இதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்க காரணமாக இருக்கின்றது.

கார்

ஏர்பேக், அதிக பூட் ஸ்பேஸ் மற்றும் இக்கார் மாடலை பராமரிப்பது மிக சுலபம் என்கிற காரணத்தினாலேயே யூஸ்டு கார் மார்கெட்டில் நல்ல வரவேற்பு ஸ்விஃப்ட்டுக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் தற்போது இந்திய சந்தையில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 22.38 கிமீ மைலேஜையும், சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 30.9 கிமீ மைலேஜையும் வழங்கும்.

மாருதி சுஸுகி ஆல்டோ 800 (Maruti Suzuki Alto 800)

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் மாடலுக்கு அடுத்தபடியாக நல்ல டிமாண்டை யூஸ்டு மார்க்கெட்டில் பெற்று வரும் கார் மாடலாக ஆல்டோ 800 இருக்கின்றது. இதன் புதிய கார் மாடலே இந்தியாவில் ரூ. 4 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. செகண்ட் ஹேண்டில் இதைவிட பல மடங்கு குறைவான விலையில் அக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் காரணமாக இந்த காருக்கு செகண்ட் ஹேண்ட் கார் மார்க்கெட்டில் அமோக வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற காராக ஆல்டோ 800 இருக்கின்றது. இதன் பெட்ரோல் வெர்ஷனின் மைலேஜ் திறன் ஒரு லிட்டருக்கு 22 கிமீ ஆகும். சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 31.5 கிமீ வரையில் மைலேஜ் வழங்கும்.

கார்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் (Hyundai Grand i10 Nios)

இந்தியாவின் யூஸ்டு கார் மார்கெட்டில் மூன்றாவது நல்ல வரவேற்பைப் பெறும் கார் மாடலாக ஹூண்டாயின் கிராண்ட் ஐ10 நியாஸ் இருக்கின்றது. ஹூண்டாயின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாகவும் இதுவே இருக்கின்றது. இலகு ரக எடை, பிரீமியம் அம்சங்கள், பன்முக பாதுகாப்பு அம்சங்கள் என எக்கசக்க சிறப்புகளைத் தாங்கிய வாகனமாக கிராண்ட ஐ10 நியாஸ் இருக்கின்றது. குறிப்பாக, பவர் ஸ்டியரிங், ஏபிஎஸ், ஏர் பேக்குகள் என பன்முக வசதிகள் கிராண்ட் ஐ10 நியாஸ் காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மாடலும் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான தேர்வுகளில் தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki Wagon R)

நாட்டின் சிறிய கார் வாகன உலகின் டாப் செல்லிங் கார் மாடலாக வேகன்ஆர் இருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் இதுவே நம்பர் 1 கார் ஆகும். அதிக இட வசதி, மலிவு விலை, பராமரிப்பது சுலபம் என பல்வேறு சிறப்புகளை இந்த வாகனம் தாங்கியிருப்பதே இதற்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கக் காரணமாக இருக்கின்றது. இந்த காரில் மேனுவல் மற்றும் தானியங்கி டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன. இதன் பெட்ரோல் வெர்ஷன் அதிகபட்சமாக ஒரு லிட்டருக்கு 23.5 கிமீ வரையிலும், சிஎன்ஜி வெர்ஷன் அதிகபட்சமாக
ஒரு கிலோவிற்கு 34 கிமீ வரையிலும் மைலேஜ் தரும்.

ரெனால்ட் க்விட் (Renault Kwid)

நமது இந்த பெஸ்ட் செல்லிங் செகண்ட் ஹேண்ட் கார்கள் பட்டியலின் கடைசி மாடல் இதுவே ஆகும். இந்தியாவின் மலிவு விலை கார் மாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கின்றது. இருப்பினும், அதிக ஸ்டைல் மற்றும் சிறப்பு வசதிகளுக்கு சற்றும் குறைவில்லாத கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த கார் மாடலை ரெனால்ட் நிறுவனம் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த காரை மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் நிறுவனம் விற்பனைக்கு வழங்குவது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Top five best small cars in used car market
Story first published: Friday, January 20, 2023, 6:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X