போட்டியாளர்களை சம்ஹாரம் செய்ய அவதாரம் எடுக்கிறது டொயோட்டா இன்னோவா! மைலேஜ்ல மாருதி கார்களுக்கே டஃப் குடுக்கும்!

இந்திய சந்தையில் டொயோட்டா (Toyota) நிறுவனம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளது. டொயோட்டா நிறுவனம் தரமான கார்களை விற்பனை செய்து வருவதுதான், இதற்கு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இந்த சூழலில், டொயோட்டா நிறுவனம் புதிய இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் ஆப்ஷன்களில் புதிய டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார் கிடைக்கும். இதை தொடர்ந்து நடப்பு 2023ம் ஆண்டில் ஏராளமான புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டொயோட்டா நிறுவனம் தயாராகி வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அந்த டொயோட்டா கார்கள் குறித்த தகவல்களைதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

போட்டியாளர்களை சம்ஹாரம் செய்ய அவதாரம் எடுக்கிறது டொயோட்டா இன்னோவா! மைலேஜ்ல மாருதி கார்களுக்கே டஃப் குடுக்கும்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta). நடுத்தர வர்க்க மக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பலரின் ஆஸ்தான கார் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. கோடிகளில் சம்பாதிக்கும் திரையுலகினர் சிலர் கூட, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த காரின் அப்டேட் செய்யப்பட்ட 2023 மாடலை டொயோட்டா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய சிஎன்ஜி (CNG) மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய மாடல், மைலேஜை வாரி வழங்க கூடியதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், டீசல் இன்ஜின் (Diesel Engine) ஆப்ஷனும் கூடிய விரைவில் மீண்டும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில், டீசல் இன்ஜின் ஆப்ஷன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

போட்டியாளர்களை சம்ஹாரம் செய்ய அவதாரம் எடுக்கிறது டொயோட்டா இன்னோவா! மைலேஜ்ல மாருதி கார்களுக்கே டஃப் குடுக்கும்!

2 மாருதி கார்களை களமிறக்கும் டொயோட்டா!

டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser) காரை திடீரென விற்பனையில் இருந்து விலக்கியது. இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) என்ற பெயரில் புதிய மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் ஒன்றை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்த காரணத்தால்தான், அர்பன் க்ரூஸர் காரின் விற்பனை நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே டொயோட்டா அர்பன் க்ரூஸர் கார் மீண்டும் விற்பனைக்கு வராது என கூறப்படுகிறது. எனினும் அர்பன் க்ரூஸருக்கு பதிலாக புதிய கார் ஒன்றை, டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் கூடிய விரைவில் பலேனோ (Maruti Suzuki Baleno) காரின் அடிப்படையில் க்ராஸ்ஓவர் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. தற்போதைய நிலையில் ஒய்டிபி (YTB) என்ற குறியீட்டு பெயரில் இந்த கார் அழைக்கப்பட்டு வருகிறது.

மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை, இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (Nexa) டீலர்ஷிப்கள் மூலம் இந்த கார் விற்பனை செய்யப்படலாம். இந்த காரின் அடிப்படையில் டொயோட்டா நிறுவனமும் புதிய கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் மூலம் டொயோட்டா நிறுவனம் இதனை சாத்தியமாக்கலாம்.

மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த பிறகு, டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில், 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜினின் பவர் அவுட்புட் சுமார் 100 பிஎஸ் என்ற அளவில் இருக்கலாம். அத்துடன் இந்த இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகையான இன்ஜின் ஆப்ஷன்களும் கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதுதவிர மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரையும், டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் K15C மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின்தான் இந்த காரிலும் வழங்கப்படவுள்ளது. 2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், அதாவது ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், மாருதி சுஸுகி எர்டிகா காரின் டொயோட்டா வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

லேண்ட் க்ரூஸர்ர்ர்!

இவை எல்லாம் தவிர, 2023 ஆட்டோ எக்ஸ்போவில், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 (Toyota Land Cruiser 300) காரின் விலைகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நடப்பு 2023ம் ஆண்டு டொயோட்டா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்! குறிப்பாக டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலும், அதன் டீசல் இன்ஜின் மாடல் திரும்ப வரவிருப்பதும்தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Toyota cars to launch in 2023 innova crysta diesel
Story first published: Saturday, January 7, 2023, 18:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X