இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!

டொயோட்டா நிறுவனம் தனது கிளான்ஸா பிரிமியம் ஹேட்ச்பேக் காரின் விலையை ஏற்றியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் மாருதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்து இவரும் தங்கள் கார்களையும் தொழிற்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர். மாருதி நிறுவனத்தின் கார்கள் டொயோட்டா பேட்ஜிலும், டொயோட்டா கார்கள் மாருதி பேட்ஜ்ஜிலும் வெளியாகி வருகிறது. இப்படியாக வெளியான கார் தான் டொயோட்டா கிளான்ஸா, இந்த கார் மாருதி நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட்டான மாருதி பலேனோ கார் தான். கிளான்ஸா என்ற பெயரில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!

இது ஒரு பிரிமியம் ஹேட்ச்பேக் ரக காராகும். இந்த கார் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதன் முதாலாக அறிமுகப்படுத்தியது. இந்த கார் இதுவரை ரூ6.39 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் கிளான்ஸா காருக்கான விலையை ரூ12 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

இந்த விலையேற்றம் அனைத்து வகையான வேரியன்ட்களிலும் ஏற்றப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியன்டை பொருத்தவரை ரூ7 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இதுவே சிஎன்ஜி வேரியன்டை பொருத்தவரை ரூ2 ஆயிரம் வரை வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவே ஆட்டோமெட்டிக் வேரியன்டை பொருத்தவரை ரூ12 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

இந்த விலையேற்றத்தை டொயோட்டா நிறுவனம் தனது அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கான விலையை ரூ50 ஆயிரம் வரை அதிகரித்த அடுத்த சில நாட்களிலேயே இந்த காருக்கான விலையையும் அதிகரித்துள்ளது. தற்போது இந்த விலையேற்றத்திற்குப் பிறகு டொயோட்டா கிளான்ஸா காரின் அடிப்படை விலை ரூ6.66 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

டொயோட்டா கிளான்ஸா காரை பொருத்தவரை பலேனோ காரிலிருந்து டிசைனில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகிய அம்சங்கள் இருக்கிறது. டொயோட்டா ஐ-கனெக்ட் சப்போர்ட் வசதியும் இதில் இருக்கிறது. இதில் டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது. கிளான்ஸாவில் லெதர் வேர்ப்டு ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

டொயோட்டா கிளான்ஸா காரை பொருத்தவரை 1.2 லிட்டர் கே-சிரீஸ் 4-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 77 எச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனம் கிளான்ஸா காருக்கான விலையேற்றத்திற்குத் தயாரிப்பு செலவு அதிகமாவது தான் முக்கியமான காரணம் எனக் குறிப்பிட்டுள்ளது. காருக்கான மூல ஆதார மெட்டிரியலின் விலை உயர்வு காரணமாக இந்த தயாரிப்பு செலவு உயர்த்துள்ளதாகவும் இதன் காரணமாகவே விலையேற்றப்பட்டதாகவும் அறிவித்துள்ளது. சமீபகாலமாக டொயோட்டாவை போல மற்ற கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் கார்களுக்காக விலையைச் சமீப காலமாக ஏற்றி வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

Most Read Articles
மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota hiked the glanza price upto 12 thousand rupees
Story first published: Sunday, February 5, 2023, 19:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X