கரடு-முரடான ரோடு இருக்க ஊருல இருக்கீங்களா?.. அப்போ இந்த கார் உங்களுக்கானதுதான்!

டொயோட்டா நிறுவனம் அதன் ஹைலக்ஸ் ஆஃப்-ரோடு கான்செப்ட் மாடலை இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2023-இல் காட்சிப்படுத்தி இருக்கின்றது. இந்த கார் குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டொயோட்டா நிறுவனத்தின் மிக முக்கியமான கார் மாடல்களில் ஹைலக்ஸும் ஒன்று. இந்த கார் மாடலுக்கு உலக அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், மிக சமீபத்திலேயே இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. சென்ற ஆண்டு மார்ச் மாதத்திலேயே இதன் அறிமுகத்தை டொயோட்டா நிகழ்த்தியது. இந்த காரை பயணிகள் வாகனம் மற்றும் லோடு வாகனம் என 2 -இன்- 1 ஆக பயன்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய வசதியைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டொயோட்டா ஹைலக்ஸ்

முழுக்க முழுக்க ஆஃப்-ரோடு வாகனமாக உருவாக்கி இருக்காங்க

இந்த நிலையில் இந்தியா 2023 ஆட்டோ எக்ஸ்போவில் நிறுவனம் அதன் ஆஃப் ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட ஹைலக்ஸ் காரை காட்சிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது, டொயோட்டா. முழுக்க முழுக்க ஆஃப்-ரோடு பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த வாகனத்தை டொயட்டா உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்திற்கு நிறுவனம் ஹைலக்ஸ் ஆஃப் ரோடு என பெயர் தற்காலிக பெயரை அது சூட்டி இருக்கின்றது.

இதை ஓர் முன் மாதிரி மாடலாகவே நிறுவனம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதை எப்போது விற்பனைக்குக் கொண்டு வரும் என்கிற தகவலை டொயோட்டா நிறுவனம் வெளியிடவில்லை. எதிர்காலத்தில் இதை விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவின் கரடு, முரடான பாதைகளைக் கொண்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இது மிகுந்த உதவியாக இருக்கும்.

டொயோட்டா ஹைலக்ஸ்

மெக்கானிக்கல் மாற்றம் என்ன செய்யப்பட்டுள்ளது?

டொயோட்டா நிறுவனம் ஹைலக்ஸ் ஆஃப் ரோடை, எக்ஸ்ட்ரீம் ஆஃப் ரோடு காராக உருவாக்கி இருக்கின்றது என கூறலாம். இதற்காக பல்வேறு மாற்றங்களை அது செய்திருக்கின்றது. குறிப்பாக, வழக்கமான ஹைலக்ஸைக் காட்டிலும் இந்த ஆஃப்-ரோடு ஹைலக்ஸ் மிக உயரமானதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அதிக உயரத்திற்கு 6 அங்குல லிஃப் கிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே வழக்கமான ஹைலக்ஸைக் காட்டிலும் 6 அடி அதிக உயரமானதாக இருக்க உதவியிருக்கின்றது.

எல்லா சாலையையும் சமாளிக்கும்

அனைத்து விதமான கரடு- முரடான சாலையை சமாளிக்கும் திறன் கொண்ட வீல்களை இந்த காரில் டொயோட்டா பயன்படுத்தி இருக்கின்றது. 5 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல் மறறும் கொழு கொழுவென இருக்கும் டயர்களே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இவையே எந்த சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் திறனை ஹைலக்ஸ் ஆஃப் ரோடுக்கு வழங்கி இருக்கின்றது. இத்துடன், காயிலோவர் ஸ்பிரிங், கேஸ் டேம்பருடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. காரின் நான்கு முனைகளிலும் இந்த அம்சத்தை நம்மால் காண முடிகின்றது.

டொயோட்டா ஹைலக்ஸ்

அலுப்பே தெரியாது

மிக மிக கொடுமையான சாலைகளில் சென்றாலும் பெரிய அளவில் அலுப்பு தெரியாமல் பயணிக்க இந்த அம்சம் பேருதவியாக இருக்கும். இத்துடன், அபர்ச்சர் மற்றும் டிபர்ச்சர் ஆங்கிள்களும் மாற்றப்பட்டுள்ளன. இத்துடன், ஆஃப்-ரோடு வாகனங்களில் காணப்படும் புல் பாரும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இது சற்று மிகப் பெரியதாகக் காட்சியளிக்கின்றது. இந்த புல் பாருக்கு கார் உடல் பகுதிக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் நிறமே வழங்கப்பட்டுள்ளது.

இவற்றுடன், பேஷ் பிளேட், வின்ச் மற்றும் டோவ் ஹூக்குகளும் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், தொலை தூர காடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் கார்களை மீட்டெடுக்கவும் இந்த காரை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுபோன்ற மிகக் கடுமையான பயன்பாடுகளுக்கு உபயோகப்படுத்தும் வகையிலேயே இந்த காரை டொயோட்டா வடிவமைத்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் பயன்படும் விதமாக பெரிய எல்இடி லைட்டுகள், பனி மின் விளக்கு என பற்பல அம்சங்கள் காரின் முகப்பு பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இருட்டான காடுகளாக இருந்தாலும் தைரியமா போகலாம்

இத்துடன், இரு எல்இடி ஸ்பாட் லைட்டுகளையும் இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. இது கூடுதல் பார்வை திறனை வழங்க உதவியாக இருக்கும். குறிப்பாக, அடர்ந்த இருட்டான காட்டுப் பாதைகளைக்குள் பயணிக்கும்போது பள்ளம், மேடு மற்றும் விலங்குகளின் நடமாட்டத்தை அடையாளம் காண இவை உதவியாக இருக்கும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளை இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. தற்போது கான்செப்ட் மாடலாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த கார் வெகு விரைவில் உற்பத்திக்கு மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Toyota hilux extreme off road concept
Story first published: Thursday, January 12, 2023, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X